மரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்

கொரோனா (COVID-19) வருகையின் பின் வீட்டில் முடங்கிய நமது உறவுகள், இணைய வழிக் (ZOOM) கலந்துரையாடல் மூலம் அறிவைப் பகிரும் பணியில் ஈடுபட்டனர். நானும் பலரது கலந்துரையாடல்களில் பங்கெடுத்துப் படித்தேன். பின்னர் 19/06/2020 இல் தொடங்கி ஒவ்வொரு வெள்ளியும் மாலை ஏழு மணிக்குக் கவிதை பற்றிய கலந்துரையாடல் நடாத்தி வருகிறேன். 17/07/2020 இல் தொடங்கி மாணவர்களையும் இணைத்து மரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சியில் இறங்கியுள்ளேன்.

17/07/2020 இல் இடம்பெற்ற மரபுக் கவிதைப் பயிலரங்கக் காணொளியை வலையொளியில் பகிர்ந்தேன். அதனையே இங்கும் பகிருகிறேன். பாருங்கள், பயனுள்ள கருத்துகளைப் பகிருங்கள்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 01 – தொடர் – 01

மரபுக் கவிதைப் பயிலரங்கில் பங்கேற்பவர்களுக்கு யாப்பு இலக்கண நூல்களைப் பதிவிறக்கக் கீழுள்ள இணைப்பை வழங்கி உள்ளேன்.https://mega.nz/folder/dVh3SIab#UiF3-DAnSBR9T3LWAGF0cg/folder/ZAw1mDSK
மரபுக் கவிதைப் பயிலரங்கச் செய்திகளை எனது முகநூல் பக்கத்தில் பார்க்கலாம். எமது Facebook  பக்கத்தில் இணையhttps://www.facebook.com/g1page/
மரபுக் கவிதைப் பயிலரங்கச் செய்திகளை எனது புலனம் குழுவிலும் பார்க்கலாம். எமது WhatsApp குழுவில் இணையhttps://chat.whatsapp.com/EcdPZBO6QzY5PWoa30qjUm

இப்பயிலரங்கம் இனி இயல்பாகவே தொடரும். இனி வலைப்பதிவர்களின் பக்கங்களுக்கு வழமை போல் நான் வருகை தருவேன். என் வலைப்பூவிற்கு வருகை தந்து பின்னூட்டம் வழங்கிய அறிஞர்களின் ஊக்குவிப்புக்கு நான் பணிகின்றேன். இனி வலைப்பதிவர்களுடனான நல்லுறவைப் பேணுவதில் அக்கறையாக இருப்பேன்.

One Response

Comments are closed.