இணையத்தில் ஒலிப்பதிவுப் (Podcasting) பகிர்தல்

எமது இணைய வழி வெளியீடுகளில் வலைப்பூ (Blog), வலைப்பக்கம் (Website), கருத்துக்களம் (Forum), ஒளிப்படச் சேமிப்பு (Flickr), ஒலிப்பதிவுச் சேமிப்பு (Soundcloud), ஒளிஒலிப்பதிவுச் சேமிப்பு (You Tube), பல்லினக் கோப்புச் சேமிப்பு (Online Drives), மின்நூல் (eBook) ஆகியவற்றைக் கையாளும் ஆளுமை அதிகமானோரிடம் இருக்கு. திறன்பேசி வழியே Share Chat, Your Quote எனப் பல செயலிகள் நமது எண்ணங்களைப் பகிர உதவுகிறது. இவை யாவும் பல்லூடக (Multi Media) வெளியீட்டுக்கு உதவும்.

வானொலி (Radio) போன்று ஒலிப்பதிவுகளைச் சேமித்துப் பகிர ஒரு செயலி திறன்பேசியில் இருக்கு. அதனை Google Play Store இல் Anchor Podcasting App எனப் பதிவிறக்கலாம். அதனை Google Chrome இல் Anchor.Fm எனத் தட்டிப் பார்க்கலாம். நீங்கள் Anchor செயலி அல்லது Anchor.Fm இணையப் பக்கம் ஊடாக User Name, eMail, Password வழங்கி உறுப்பினராகி உள்ளே நுழைந்து உங்கள் எண்ணங்களையும் ஒலிப்பதிவு செய்து பகிர முடியும். Anchor.Fm பிற தளங்களிலும் உங்கள் ஒலிப்பதிவைப் பகிர உதவுகிறது. அவைb pocket casts, radio public, breaker, spotify, google podcasts, apple podcasts, castbox, overcast, tuneln என்பனவாகும்.

நானும் எனது திறன்பேசியில் Anchor Podcasting App ஐப் பதிவிறக்கி எனது எண்ணங்களை ஒலிப்பதிவு செய்து பகிருகிறேன்.

எனது முதன்மைப் (Anchor.Fm) பக்க முகவரி:

எனது முதன்மைச் (Anchor.Fm) செயலி பகிர்ந்து உதவிய முகவரிகள்:

pocket casts

radio public

breaker

https://www.breaker.audio/ennnnngkll-ceylaakum

spotify

google podcasts

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8zNTVhNGMzOC9wb2RjYXN0L3Jzcw==

மேலும் apple podcasts, castbox, overcast, tuneln ஆகியவற்றிற்கான இணைப்புகள் விரைவில் கிடைக்குமென நம்புகிறேன். இவற்றைச் சரி பார்த்துப் பின், இச்செயற்பாட்டில் நீங்களும் முயன்று பார்க்கலாம்.

நான் நடாத்தும் இணையப் பயிலரங்கக் காணொளிகளைக் கீழே பார்க்கவும்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 02 – தொடர் – 03

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – மூன்றும்நான்கும்

நீங்களும் மரபு கவிதைப் பயிலரங்கில் பங்குபற்றலாம்.
வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 03/07/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது.
கனடா, இந்தியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.

வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 10/07/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது.
கடந்த நிகழ்வுகளில் பேசிய அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – இரண்டு

வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 26/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது. இந்தியா, மலேசியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.

வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம்  நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube)  பகிரும் பணியில் முதலாவதாகத் தமிழகத் தமிழறிஞர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் மணிவானதி வலைப்பூ (Blog), வலையொளி (Youtube) நடாத்துகிறார். அவரைப் பற்றி முழுவதும் அறியக் கீழுள்ள காணொளியைப் (Video) பார்க்கவும். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.

இணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா?

கொரோனா (COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவது  ZOOM, Cisco Webex, Meet.Jit.Si, Google Meet, Microsoft Teams, Lifesize, Eztalks, Teamlink எனப் பல காணொளி (ஒளிஒலி) உரையாடல் செயலி ஊடாக நம்மாளுங்க தம் அறிவாற்றலைப் பகிர்ந்த வண்ணம் வாழப் பழகிட்டாங்க.
அதனால், “இணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா?” என்ற கேள்விக் கணைகள் எழுப்பப்படுகிறது. அதற்கேற்ப “யாழ்பாவாணன் வெளியீட்டகம்” பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கும் பணியாக இக்கேள்விக்கு ஏற்ற பதில் வெளிப்படத் தக்கதாகக் கவிஞர்களிடம் கவிதைகளை எதிர்பார்க்கின்றது.

நாமும் ZOOM செயலி ஊடாக “கவிதை அரங்கேறும் நேரம்!” நிகழ்வை நடாத்தி மேற்படி தலைப்பில் கிடைக்கும் சிறந்த கவிதைச் சொந்தங்களை அரங்கேற்ற விரும்புகின்றோம். அதேவேளை அந்தக் கவிதைகளை “இணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா?” என்ற தலைப்பிலான மின்நூலை உருவாக்கி வெளியிடவும் விரும்புகின்றோம்.
ZOOM இல் மூன்று மணித்துளி (3 minute) நேரத்தில் வாசிக்கக் கூடியதாக அமையும் வண்ணம் சமகாலச் சூழலை உள்ளத்தில் இருத்தி மேற்படி தலைப்பிலான கவிதைகளை எல்லோரும் எழுதி அனுப்பலாம். கவிதைகள் புதுக்கவிதையாகவோ மரபுக்கவிதையாகவோ இருக்கலாம். முடிவு நாள் : 12/07/2020, முடிவு நாள் நீடிக்கப்பட மாட்டாது.
17/07/2020 வெள்ளி இரவு (இலங்கை, இந்திய நேரப்படி) ஏழு மணிக்கு இடம்பெறும்  “கவிதை அரங்கேறும் நேரம்!” ZOOM நிகழ்வில் சிறந்த கவிதைச் சொந்தங்களை வாசிக்க அழைப்போம். குறித்த மின்நூல் 15/08/2020 வெளியிடப்படும்.
தங்கள் கவிதைகளை அனுப்ப விரும்புவோர் PP Size Photo, பெயர், முகவரி ஆகியவற்றுடன் 12/07/2020 இற்கு முன்னதாக wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். எல்லோரும் பங்கேற்கலாம்; எல்லோருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.
குறிப்பு:-2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் (https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html) அறிவிப்பின் அறுவடையாக “இது தான் காதலா?” மின்நூல் அடுத்த வாரம் வெளிவரும்.

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – ஒன்று

வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 19/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது. சிங்கப்பூர், இந்தியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.

இணைய வழி நேர்காணல்

வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம் https://meet.jit.si/yarlpavanan ஊடாக நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube)  பகிரும் அடுத்த பணியையும் தொடங்கியுள்ளேன். விரைவில் முதலாம் நேர்காணலை வலையொளியில் (Youtube)  காணலாம்.

ZOOM செயலி ஊடாக உரையாற்ற வாருங்கள்!

‘வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கவிதை போலக் கட்டு உரையா?’ என்ற தலைப்பு நீண்டு இருப்பினும் ‘புதுக்கவிதை, வசனகவிதை எப்படி இருக்க வேண்டும்.’ என்பதை விளக்கமளிக்கும் உரையாகப் பேண விரும்பியே தலைப்பை இவ்வாறு அமைத்தேன்.

உண்மையில் வலை வழியே கவிதை என்ற போக்கில் கட்டுரையை முறித்து, உடைத்து எழுதுவதாகப் பலருரைக்கக் கேட்டிருக்கிறேன். ‘நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்.’ என்பதை விளக்கம் அளித்தோமானால் வலை வழியே நல்ல கவிதைகளை விதைக்க முடியும்.

ZOOM செயலி வழியே பல நாட்டு அறிஞர்களை இவ்வாறு உரையாற்ற அழைக்கின்றேன். உங்கள் உரையாற்றலால் நல்ல கவிஞர்களை உருவாக்க முடிந்தால் அதுவே இந்நிகழ்வின் வெற்றி. இந்நிகழ்வினை வலுப்படுத்த இந்நிகழ்வில் பங்கெடுத்தும் உதவுமாறு அழைக்கின்றேன்.

மேலுள்ள அழைப்பின் படி எல்லோரும் இணைந்து கொள்ளலாம். மேலும்  இந்நிகழ்வு சிறப்புறத் தங்கள் மதியுரையையும் வழிகாட்டலையும் எனக்களித்து உதவுங்கள்.

பயன்மிகு ஒருங்குகுறியும் (Unicode) குரல் வழித் தட்டச்சும் (Voice to Typing)

2020 தை பிறந்தால் நல்வழி பிறக்கும் என்றோர்க்கு covid-19 கொரோனா வைரஸ் வந்து இறப்புகளை விதைக்கும் என்றெவரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் வீட்டிற்குள்ளே இருப்பது covid-19 கொரோனா வைரஸ் எம்மைத் தாக்காது பாதுகாக்கவே! பாதுகாப்பாக வீட்டில் இருப்போர் ஆக்கபூர்வமான பொழுதுபோக்கை மேற்கொண்டால் உளநெருக்கடியைத் தவிர்க்கலாம். பத்திரிகை படிப்பதோடு நின்றுவிடாமல் படைப்புகளை ஆக்கலாம்ஊடகங்களுக்கு அனுப்பி வெளியிட்டு வைக்கலாம்வலைப் பக்கங்களில் வெளியிடலாம்உள நிறைவைப் பெறலாம்.

வலை ஊடகங்கள் – முதற் பகுதி
https://youtu.be/evzZesFjQU4
வலை ஊடகங்கள் – இரண்டாம் பகுதி
https://youtu.be/35LAPuJDk8I

வலை ஊடகங்கள் பற்றித் தெரிந்துகொள்ள இரண்டு ஒளியும் ஒலியும் (வீடியோ) வெளியிட்டுள்ளேன். அதனைப் பார்த்த பின் புதியவர்களும் வலைப்பக்கம் வந்திணையலாம். அவர்களுக்காக இந்தப் பதிவு. இருப்பினும் நாம் இவற்றைக் காண்பித்துப் புதிய வலைப்பதிவர்களை உருவாக்குவோம். பழைய வலைப்பதிவர்களையும் மீள இயங்க வைப்போம். 2021 இலாவது வலைப்பதிவர் சந்திப்பை நிகழ்த்தலாம்.

ஒருங்குகுறியைக் (Unicode) கையாளத் தெரிந்துகொள்வதனால் வலை ஊடகங்களைக் கையாள்வது இலகுவாகும். நான் NHM converter, Tamil99 Keyboard பாவிக்கிறேன். எவ்வாறு ஒருங்குகுறியைக் (Unicode) கையாளலாம் என்பதைக் கீழுள்ள ஒளியும் ஒலியும் (வீடியோ) ஊடாக விளக்கியுள்ளேன். நீங்களும் பார்வையிட்டுத் தங்கள் மதியுரையைப் பகிரலாம்.

நான் ஒருங்குகுறி (Unicode) பற்றிய ஒளியும் ஒலியும் (வீடியோ) பதிவைப் பகிர்ந்த போது, எனக்குக் கிடைத்த இணைப்பு இது. நான் சுட்டிக்காட்டிய தளங்களை விட, இத்தளம் சிறப்பு எனப் பலரும் சொல்ல இடமுண்டு. ஆம்! அதாவது விரைவாக (வேகமாக) இயங்குவதே சிறப்பு. மேலும் அதிக எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. இதனை வலைப்பதிவர்கள், விக்கிப்பீடியர்கள், மென்பொருள் ஆக்குநர்கள் (SW Developers) யாவரும் அறிந்த  நீச்சல்காரன் அவர்களே தயாரித்துள்ளார்.
http://dev.neechalkaran.com/p/oovan.html#.XofkfYgzbIU

“நான் சொல்வதெல்லாம் நடைபேசி / கணினி தட்டச்சுச் செய்வதனால் எனக்குத் தட்டச்சுச் செய்கின்ற வேலையே கிடையாது.” என எத்தனையோ அறிஞர்கள் சொல்லும் தொழில்நுட்பத்தை நானும் கீழ்வரும் ஒளியும் ஒலியும் (வீடியோ) ஊடாக விளக்கியுள்ளேன். நீங்களும் பார்வையிட்டுத் தங்கள் மதியுரையைப் பகிரலாம்.

நான் குரல் மூலம் தட்டச்சுச் செய்யலாம் என ஒளியும் ஒலியும் (வீடியோ) பதிவைப் பகிர முன்னரே உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் நன்கறிந்த திண்டுக்கல் தனபாலன் அவர்கள் அறிமுகம் செய்துவிட்டார். திருக்குறளுடன் திரைப்பாடலுடன் உள்ளத்தில் அமைதியை வரவைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவரது பதிவையும் படித்துப் பயன்பெறுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
https://dindiguldhanabalan.blogspot.com/2019/10/voice-typing.html

பதிவர்களாகிய நாம் covid-19 கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வைப் பகிர்ந்து எல்லோரையும் காப்பாற்ற முயல்வோம்.

மூலம்: http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html