மீண்டும் வேர்ட்பிரஸ் தளப் பதிவுகள் தொடரும்

https://ypvnmemes.tumblr.com/

https://ypvnjokes.blogspot.com

மேற்படி தளங்கள் ஊடாகப் புதிய எண்ணங்களைப் பகிர முடிந்தாலும்

எனது வேர்ட்பிரஸ் தளப் பதிவுகளைத் தொடருவேன். தங்கள் தளம் வந்து கருத்திட விரும்புகிறேன்.

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

கவிதை அரங்கேறும் நேரம்! – Dec2020

கொரோனா (COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவது  ZOOM, Cisco Webex, Meet.Jit.Si, Google Meet, Microsoft Teams, Lifesize, Eztalks, Teamlink எனப் பல காணொளி (ஒளிஒலி) உரையாடல் செயலி ஊடாக இணையவழிக் கருத்தரங்குகள் நடாத்தி நம்மாளுங்க தம் அறிவாற்றலைப் பகிர்ந்த வண்ணம் வாழப் பழகிட்டாங்க.

அவ்வாறான இணையவழிக் கருத்தரங்குகள் போன்றே “கவிதை அரங்கேறும் நேரம்!” என்ற நிகழ்வை நடாத்திப் பன்னாட்டுக் கவிஞர்களுக்குக் களம் அமைத்துத்தர யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் முன்வருகின்றது. “தமிழரின் பலம் ஒற்றுமை தான்!” என்ற தலைப்பில் மரபுக் கவிதை அல்லது புதுக் கவிதை எதுவாயினும் மூன்று மணித்துளி (3 minute) நேரத்தில் வாசிக்கத் தக்கதாக இருக்கவேண்டும். சமகாலச் சூழலை உள்ளத்தில் இருத்தி மேற்படி தலைப்பிலான கவிதைகளை எல்லோரும் எழுதி அனுப்பலாம். முடிவு நாள் : 30/12/2020, முடிவு நாள் நீடிக்கப்பட மாட்டாது.

தங்கள் கவிதைகளை அனுப்ப விரும்புவோர் PP Size Photo, பெயர், முகவரி ஆகியவற்றுடன் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். எல்லோரும் பங்கேற்கலாம்; எல்லோருக்கும் பகிர்ந்து உதவுங்கள். எமக்குக் கிடைத்த கவிதைகளை “யாழ்பாவாணன் வெளியீட்டகம்” ஊடாக மின்நூலாக்கி வெளியிட்டு உதவுவோம். கவிதைகள் எமக்குக் கிடைத்த ஒழுங்கில் “கவிதை அரங்கேறும் நேரம்!” என்ற நிகழ்வில் கவிஞர்களைச் சேர்த்துக்கொள்வோம். விரைவாக உங்கள் சிறந்த கவிதைகளை அனுப்பி உதவுங்கள்; பன்னாட்டுக் கவிஞர்களுடன் கவிதை வாசிக்கலாம்.

குறிப்பு:-

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் (https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html) அறிவிப்பின் அறுவடையாக “இது தான் காதலா?” மின்நூல் அடுத்த வாரம் வெளிவரும்.

மூலம்: https://seebooks4u.blogspot.com/2020/11/dec2020.html

இணையவழிக் கற்றல், கற்பித்தல் (e-Learning N e-Teaching)

பொதுவாகக் கற்றல், கற்பித்தல் இரு வழிகளில் இடம்பெறும்.1. ஆள்கள் ஊடாக… (பெற்றார், ஆசிரியர், நண்பர் ஊடாக…) : இங்கு கற்பிற்போர் ஒழுக்கம் பேணும் புனிதர்களாக இருக்க வேண்டும்.2. ஊடகங்கள் ஊடாக… (அச்சேடுகள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஊடாக…) : எந்தவொரு ஊடகமும் கற்றலைத் தூண்டும் ஒழுக்கம் பேணத் தூண்டும் மக்கள் நல மேம்பாட்டிற்கு உதவும் கருவிகளாக இருக்க வேண்டும்.
2020 ஆம் ஆண்டு தொடக்கியதும் கொரோனா (COVID-19) வைரஸ் சீனாவிலிருந்து உலகெங்கும் பரவத் தொடங்கியது. கொரோனா (COVID-19) பல இழப்புகளைத் தந்திருந்தாலும் சில அறிவூட்டலையும் செய்திருக்கிறது. அதன் விளைவே இணையவழிக் கற்றல், கற்பித்தல் பற்றி அலசிப் பார்க்க வைத்திருக்கிறது.

1. கொரோனா (COVID-19) வைரஸ் காலத்திற்கு முந்தைய கல்வி.(வகுப்பறைக் கல்வி, கடித மூலக் கல்வி, அரங்காற்றல் எனப் பல வழிகளில் கற்றோம்)
2. கொரோனா (COVID-19) வைரஸ் காலத்திற்கு பிந்தைய கல்வி.(மூடுள்/ கூகிள் வகுப்பறைக் கல்வி, மின்னஞ்சல் மூலக் கல்வி, இணையக் கருத்தரங்கு எனப் பல வழிகளில் முயல்கிறோம்)
இணையம் தொடங்கிய காலத்தில் இருந்தே இணையவழிக் கற்றல், கற்பித்தல் இடம்பெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா (COVID-19) வைரஸ் காலத்திற்கு பின்னரே இணையவழிக் கற்றல், கற்பித்தல் பற்றிச் சிந்தித்துச் செயற்படுகிறோம். அதனைப் பற்றிய அறிஞர்களின் எண்ணங்களைப் படித்துப் பார்ப்போம்.

முழுப் பதிவையும் முடிக்க…
http://www.ypvnpubs.com/2020/05/e-learning-n-e-teaching.html

தாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ…?


வலைவழியே வாழ்த்துகளே பாரேன்
அலைவழியே வாழ்த்துவாரே கேளேன்
தலைநிமிரத் தூக்கியகைய்
தலைவைத்துப் படுத்தமடிய்
நிலையற்ற முதுமனையில் நாடேன்!

                                                                                             (குறும்பா)
குறிப்பு: வலைவழியே – இணையப் பக்கம்
அலைவழியே – நடைபேசி, தொலைபேசி

என் நடைபேசியைச் சாகடிக்காதீர்கள்!


விடிய விடியத் தான்
நடைபேசியை நோண்டுகிறாங்கள்…
அடிக்கடி தகவல் அனுப்புகிறாங்கள்…
அதிகாலை, காலை, மதியம்,
மாலை, முன்இரவு, நடுஇரவு
வணக்கங்கள், வாழ்த்துகள் அனுப்புகிறாங்கள்…
இருக்கிறேன், கிடக்கிறேன், எழும்புகிறேன்,
குளிக்கிறேன், முழுகிறேன், விழுங்குகிறேன்
என்றெல்லாமே சுடச்சுட அனுப்புகிறாங்கள்…
இத்தனை எல்லாவற்றையும் உள்வாங்கேலாது
எத்தனையோ எந்தன் நடைபேசிகள்
செத்துக்கொண்டே இருக்கின்றன…
இறுதியாகச் செத்துப்போன நடைபேசி
அப்பிள் எக்ஸ்2 இன் பெறுமதி
உரூபா200000.00 இலங்கைப் பணமாச்சு!
இப்ப தோடம் எம்14 நடைபேசி
உரூபா500000.00 இலங்கைப் பணத்திற்கு
வேண்டி வைச்சிருக்கிறேன் உறவுகளே!
அ – ஃ / A – Z வரை வீண் தகவலை
அடிக்கடி அனுப்பி என் நடைபேசியை
சாகடிக்க முன்வர வேண்டாம் உறவுகளே!
நாள் முழுக்கத் தான் அனுப்பாது
அருமையாகத் தான்
நன்மை தரும் நல்ல தகவலை
நறுக்காகத் தெரிவித்தால் மட்டுமே
என் நடைபேசி வாழுமென்பேன்!

மூலம்: http://www.ypvnpubs.com/2019/05/blog-post_18.html

 

பிழையான பார்வை

2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி

இணைப்பைச் சொடுக்கிப் போட்டியில் பங்கெடுத்த முதலாம் கவிதையைப் படிக்க வாருங்கள்.

http://tev-zine.forumta.net/t12-topic

நீங்கள் எல்லோரும் பங்கெடுத்து உதவுங்கள்.


பிழையான பார்வை

வீட்டு மரத்தில
காய்த்த பலாப்பழம் கண்டு
நீங்களும் வெறுக்கலாம்…
வீட்டு மரத்தில
காய்க்காத பலாப்பழம் கண்டு
நீங்களும் விரும்பலாம்…
அது போலத் தான்,
உறவோ நட்போ
கண் முன்னே இருக்கையில்
எவரும் பெறுமதி அறியார்…
உறவோ நட்போ
கண் முன்னே இல்லையெனில்
எல்லோரும் பெறுமதி உணருவார்…
எல்லாமே
நான் வாழும் வேளை
என்னைத் தூற்றுவதும் ஆன
நான் சாவடைந்த பின்னே
என்னைப் போற்றுவதும் ஆன
என்னைச் சூழவுள்ள
மக்களின் பார்வையைப் போலவே!


தாடியென்றால் ஐயம் தான்!


தாடி எடுக்க நேரமின்றி
அலையும் உறவுகளே!
தாடிக்கு வந்த சோதனை
கொஞ்சம் அறிவீரா?
தாடி நீயொரு கேடியென
நீர்கொழும்பில்
ஒரு தமிழரின் கையைத் தான்
முறித்தே விட்டார்களாம் – அது
வலை வழியே படித்த சேதி!
அச்செய்திக்குப் பின்னாலே
“2019 உயிர்த்த ஞாயிறு அன்று
கொழும்பு கொச்சிக்கடை
அந்தோனியார் ஆலயத்தில குண்டு வைத்த
தாடிக்காரர் குழுவுக்குச் சேர்மதியோ?” என்ற
ஐயம் தான் செய்தது அப்படியாம்!
தாடி ஒட்டித் திரியும் பெண்களும்
தாடி நீட்டித் திரியும் ஆண்களும்
சற்றுக் கவனம் தான் தேவை!


ஏழ்மை


கிழக்கு வெழுக்கத் தான்
கூரையைக் குடைந்து தான்
தட்டியெழுப்பியது பகலவன் தான்
பாரடா ஓட்டை வீட்டில் நான்
என் ஏழ்மையைத் தான்
கொஞ்சம் பிறருக்குச் சொல்லித் தான்
எள்ளுப் போல கிள்ளி உதவத் தான்
உங்களால் முடியாதா என்று தான்
வன்னி – யாழ் இடப்பெயர்வு தான்
என்னை ஏழையாக்கியதை அறியத் தான்
பகலவன் சுட்டு எழும்பியதைச் சொன்னேன்!

2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி

marapuppaa 20191.jpg

வலைப்பூ வழியே ‘தமிழ் மரபுக் கவிதை- த.ஜெயசீலன் (http://www.thanajeyaseelan.com/?page_id=861)’ என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் மரபுக் கவிதை எழுத வேணும் போல விருப்பம் (ஆசை) வரும். அப்படி நீங்கள் விருப்பியபடி (ஆசைப்படி) எழுதிய மரபுக் கவிதைகளைப் போட்டிகளுக்கு அனுப்பிப் பரிசில்களும் பெறலாம். அதற்கேற்ப “யாழ்பாவாணன் வெளியீட்டகம்” மரபுக் கவிதை எழுதும் போட்டி நடாத்த முன்வருகிறது. சிறந்த கவிதைகளுக்கு பரிசில் (நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதி/பணச் (Gift) சான்றிதழ்) வழங்குவதோடு சிறந்த கவிதைகளை மின்நூலாக்கியும் வெளியிட்டு வைக்கிறோம்.

எனது வலைப்பூ வழியே (http://www.ypvnpubs.com/2019/01/blog-post.html) ‘யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்’ என்ற பதிவினைப் பகிரும் போது மரபுக் கவிதை எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன் எனத் தெரிவித்திருந்தேன். மரபுக் கவிதை எழுத உதவும் வகையில் (http://www.ypvnpubs.com/2019/02/blog-post.html) ‘பாப்புனைய விரும்புங்கள்’ என்ற மின்நூல் ஒன்றும் வெளியிட்டுள்ளேன். இனி மரபுக் கவிதை எழுதும் போட்டிக்கு நீங்கள் தயாராகலாம் தானே!

போட்டித் தலைப்பு: உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்!

மரபுக் கவிதை வகை: ஆசிரியப்பா / அகவற் பா

கவிதை அமைவு: ஈரசைச் சீர்களைக் கொண்ட அளவடியாலும் ஈற்றயலடி முச்சீராகவும் ஒவ்வோர் அடியிலும் 1 ஆம், 3 ஆம் சீர்களில் மோனையும் இரண்டு அடிகளுக்கு ஓர் எதுகையும் ஈற்றுச் சீர் ”ஏ” காரத்தில் முடியக் கவிதை அமைதல் வேண்டும்.

கவிதை வரிகள்: 15 – 20 வரையான அடிகள்

பரிசில்: 5USD / 350INR / 880LKR பெறுமதியான நூல்கள் வேண்டுவதற்கான வெகுமதி/பணச் (Gift) சான்றிதழ். பரிசில்களுக்கான நூல்களை சென்னை டிஸ்கவரி புக் பலஸ், யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியவற்றில் பெறலாம்.

பரிசில் எண்ணிக்கை: சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசில் உண்டு.

குறிப்பு: ஆசிரியப்பா / அகவற் பா கவிதை அமைவுக்கு உட்பட்ட கவிதைகளே மின்நூலில் இடம்பிடிக்கும்.

தீர்வு: போட்டிக்கான நடுவர்களின் தீர்ப்பே உறுதியானதும் இறுதியானதும் ஆகும்

போட்டிக்கான முடிவு நாள்: 31/05/2019 (தீபாவளிக்கு வெண்பா எழுதும் போட்டி இருப்பதால் காலநீடிப்பு வழங்கப்படமாட்டாது)

போட்டியாளர்கள் தங்கள் கவிதைகளை ‘தமிழ் இலக்கிய வழி’ தளத்தில் (http://tev-zine.forumta.net/) உறுப்பினராகி, ‘உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்!’ என்ற தலைப்பின் (http://tev-zine.forumta.net/f16-forum) கீழ் பதிவிடவும். 31/05/2019 இன் பின் பதியப்படும் பதிவுகள் போட்டியில் சேர்க்க முடியாது.

உலகெங்கும் தமிழ் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் இப்பணித்திட்டத்திற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றோம். நீங்களும் உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிக்கவும். எமது போட்டிகளில் எல்லோரையும் பங்குபற்றச் செய்து உதவுங்கள்.

கீழ்வரும் அறிவிப்புகளைப் படித்து, உங்கள் பெறுமதி மிக்க படைப்புகளை ‘தமிழ் இலக்கிய வழி’ தளத்தில் (http://tev-zine.forumta.net/) இணைத்துப் பரிசில்களைப் பெறலாம். காலநீடிப்பு வழங்கியுள்ளோம்.

2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
https://seebooks4u.blogspot.com/2018/04/2018-4.html

2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
https://seebooks4u.blogspot.com/2018/04/2018-3.html

தமிழ் இலக்கிய வழி – மின் இதழுக்கான பதிவுகளை இணையுங்கள்!
https://seebooks4u.blogspot.com/2018/04/blog-post.html

யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்

உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

2018 இல் எனது வலைவழிப் பயணம் சோர்வடைந்து இருந்தாலும் வலைப்பதிவர்கள் தந்த ஊக்கம் என்னைச் சோர்வடைய விடவில்லை. அதனைக் கருத்திற்கொண்டு 2019இல் வலைவழியே மரபுக் கவிதைப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் திறம்பட நடாத்தவுள்ளேன். இன்றுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு 2019 இல் இணைந்து செயற்பட அன்புக்கரம் நீட்டுகிறேன்.

2019 தைப்பொங்கலை அடுத்து ‘தமிழில் பாப்புனைய விரும்புங்கள்’ என்ற எனது மின்நூலை வெளியிடவுள்ளேன். 2019 சித்திரைப் புத்தாண்டையொட்டி “உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்” என்ற தலைப்பில் ஆசிரியப்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன். 2019 தீபாவளிப் பெருநாளையொட்டி “தமிழருக்கு ஒற்றுமையே பலம்” என்ற தலைப்பில் வெண்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன்.

“யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்” என்ற தலைப்பிலான மரபுக் கவிதை புனையத் தேவையான குறிப்புகளைக் கீழே விரித்துப் படிக்கலாம். இனிவரும் மரபுக் கவிதைப் போட்டிகளில் பங்கெடுக்க இக்குறிப்புகள் உதவுமென நம்புகிறேன்.

 

கீழ்வரும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கலாம்.
https://drive.google.com/file/d/1BaJJmctgWrttI_CKvNbrFDXnqWm1Bs0D/view
மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!

https://plus.google.com/u/0/communities/110989462720435185590 என்ற இணைப்பைச் சொடுக்கி’உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்’ குழுவில் உங்கள் புதிய பதிவுகளின் இணைப்பைப் பகிர்ந்து உதவுங்கள். 2019 உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் பெருவெற்றிகள் கிட்ட உதவுமென வாழ்த்துகிறேன்.