தமிழ் மின்நூல்கள்

ebookstore_banner

உலகெங்கும் தமிழை அழியாது பேண, தமிழ் நூல்கள் கிடைக்க உதவுவோம்.

jeevan  உலகெங்கும் தமிழ் நூல்களைப் பரப்பி, உலகெங்கும் வாழ்வோர் தமிழ் கற்றிடவும் தமிழ் மூலம் எல்லாத் துறைகளிலும் அறிவைப் பெருக்கிடவும் எனது மின்நூல் களஞ்சியம் பின்னூட்டியாக இருக்க உதவும் தோழிகளுக்கும் தோழர்களுக்கும் தனித்தனியே நன்றி. என்றும் உங்கள் மதியுரை(ஆலோசனை)களையும் தமிழ் பேண உதவும் நூல்களை வழங்கும் உதவிகளையும் வரவேற்கிறேன்.

நூல்களுக்கான காப்புரிமை
அறுபதிற்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கும் மேலான மின்நூல்கள்; இம்மின்னூல் களஞ்சியத்தில் குவிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் எனது நண்பர்களூடாகவோ இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கியோ திரட்டப்பட்டவையாகும். இந்நூல்களுக்கான காப்புரிமை; இந்நூல்களை ஆக்கியோருக்கும் வெளியிட்டோருக்கும் உரியதாகும். நூல்களை இலவசமாகப் பதிவிறக்க உரிமையளித்த இணையத்தளங்களிற்கு நன்றிகள்.

நீங்கள் இந்நூல்களை விற்க முடியாது; விற்கவும் கூடாது. ஆனால், ஏனையோரது அறிவை மேம்படுத்த அவர்களுக்கு இலவசமாக அன்பளிப்புச் செய்யலாம்.

தகவல்: உங்கள் யாழ்பாவாணன்

Learn Tamil Know World

 • Tamil is one of the Dravidian Languages spoken in Tamil Nadu of South India, Sri Lanka, Malaysia, Singapore, Mauritius and South Africa. It is spoken in the Diaspora of Tamil people throughout North America, Europe, Australia and New Zealand.
 • Tamil is a geographically widespread Indian language spoken by 70 million people worldwide.
 • Learning Tamil would help one to know about other culture in context for education, cross – cultural engagement and research.. Tamil has a rich ancient cultural tradition. This can be explored by visiting the countries where Tamil is spoken and fostered.

Read More: http://archive.is/JFcpK  or  http://www.artsci.utoronto.ca/languages/languages-offered/tamil

World first language is Tamil. Tamil Nation has good culture. Best Literatures available in Tamil. For Example: Thirukkurel. Thirukkurel is translated to more than 140 languages. So, Learn Tamil Know World.

Few books are available in yarlpavanan’s eBooks store. You can preview and download books which you liked.

Click here and visit the eBooks store

என்றும் அறிவுப் பசி போக்க
நல்ல நூல்களைப் படியுங்கள்…
நூல்கள்/பொத்தகங்கள் – வெறும்
அச்சுத்தாள்களோ மின்தாள்களோ அல்ல – அவை
பல அறிஞர்களின் அறிவைச் சுமந்துகொண்டிருக்கும்
சுமைதாங்கிகளே! – அவற்றை
நாம் எல்லோரும் படிப்பதால்,
எம்மைப் பேரறிஞர்களாக ஆக்கலாமே!
என்றும் தங்கள் உள்ளத்தில்
“யாம் பெற்ற கல்வி
இவ்வையகமும் பெற வேண்டும்”
என்றெண்ணிய அறிஞர்களே
தமிழை மறந்த, தமிழை மறக்கும் உறவுகளுக்கு
இணையத்தள மின்நூல் களஞ்சிய நூல்களை
எண்ணி நூறு நண்பர்கள் அறியச் செய்வீரே!

தமிழறிஞர்களின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.

யாழ்பாவாணன் தன்(சுய)நலவாதியா?

எல்லோரும் இப்படித்தான் என்னைக் கேட்பார்கள். நானும் பொது நலன் கருதி இம் மின்நூல் களஞ்சியத்தைத் தொடங்கவில்லை. நான் பாவிக்கும் நூல்களை; நூல்களே கிடையாத அல்லது நூல்களைத் தேடிப்பெற வசதியற்ற இடத்தவர் பாவிக்க இடமளித்தால் நல்லது என எண்ணினேன். இவற்றைப் பகிர்வதால் பலருக்கு நன்மை கிட்டுமென உணர்ந்தேன். இதனைப் போய் பொது நலன் என்று சொல்லமுடியாது.

நானும் எனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான பொத்தகங்களையே இணைய வழியில் பொறுக்கித் திரட்டினேன். தமிழைப் பேண, இலக்கியங்களை அறிய, தமிழைரைப் படிக்க, இலக்கியங்களை ஆக்க, ஊடகங்களில் இட, ஊடகங்களைப் படிக்க, உளவியலைப் படிக்க, உளநல வழிகாட்டலைப் புரிய, மருத்துவர்களின் வழிகாட்டலைப் பெற, தன்(சுய) முன்னேற்ற நூல்களை வாசிக்க, பாலியலையும் வாழ்வியலையும் விளங்கிக்கொள்ள, கோட்பாடுகளை (தத்துவங்களை) அறிய, கணினி சார்ந்த நூல்களைப் படிக்க எனப் பல நோக்கோடு பல நூல்களை நான் விரும்பியவாறு பொறுக்கித் திரட்டினேன்.

அதனையே இம் மின்நூல் களஞ்சியத்தில் நான் விரும்பியவாறு தனித் தனித் தலைப்பிட்டுத் தொகுத்துள்ளேன். இவற்றைப் பல நாடுகளிலும் உள்ள நம்மாளுகளுக்குப் பயன் தரும் வகையில் பகிர்ந்துகொள்ளவே இம் மின்நூல் களஞ்சிய முயற்சி என்பேன். இது எனது தன்(சுய)நலத் தேவைகளை நிறைவு செய்து தந்தாலும் பலருக்குப் பயன்படுமாயின் அல்லது இதனால் பலர் நன்மை அடைவார்களாயின் அதுவே எனக்கு நிறைவைத் தரும்.

இந்நூல்களாற் பயனென்ன?

உலகெங்கும் நூற்றியம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் போர் மற்றும் தொழில் வாய்ப்புத் தேடி புலம் பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களில் பலர் தமிழை மறந்து விட்டனர். ஆங்கில மொழிமூலம் தமிழைக் கற்பதற்கான நூல்களை இங்கு வைத்துள்ளேன். அவற்றைத் தமிழரல்லாத ஏனையோரும் படித்துத் தமிழில் புலமை பெறலாம்.

மேலும் தமிழ் பேணுவோருக்கும் தமிழ் இலக்கிய விரும்பிகளுக்கும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் உளவியல், இதழியல், கணினியியல் துறை சார்ந்தோருக்கும் உளநல மதியுரைஞர்களுக்கும் வாழ்வியல் தேடல்களுக்கும் மூதறிஞர் வழிகாட்டல்களுக்கும் என விரும்பியோர் பயன்படுத்தலாம்.

பயனர் விருப்பங்களை இவை நிறைவு செய்யுமா?

தொடக்கத்தில் முப்பத்தேழு நூல்களையே இணைத்திருந்தேன். அதனைக் கூட நாளுக்கு நாள் பதிவிறக்கி இருந்தனர். தற்போது ஐந்நூறுக்கு மேற்பட்ட நூல்களையே இணைத்துள்ளேன். இனிவரும் காலங்களில் இவை ஆயிரங்களையும் தாண்டலாம். எனது கற்றலும் தேடலும் தொடரும் வரை இணைய வழியாக நூல்களைத் திரட்டிக்கொண்டே இருப்பேன். அதனை இம் மின்நூல் களஞ்சியத்தில் சேர்த்துக்கொண்டே இருப்பேன். ஆயினும், இவை பயனர் விருப்பங்களை நிறைவு செய்யும் என்பது ஐயமே! எப்படி இருப்பினும் எனது தேடல்களுக்கு ஒத்த உள்ளங்களுக்கு நிறைவைத் தரும் என்பதில் நம்பிக்கை உண்டு.

யாழ்பாவாணனின் மின்நூல்கள்

1987 இலிருந்து எழுத்துலகில் யாழ்பாவாணனாகிய நான் இருந்து வருகிறேன். ஈழத்துப் போர்க்காலச் சூழ்ச்நிலை காரணமாக வெளியிடுவதற்காக வைத்திருந்த இரண்டு நூல்களுடன் ஈழநாதம், வீரகேசரி பத்திரிகைகளில் வெளிவந்த பதிவுகள், அரங்குகளில் (மேடைகளில்) வாசித்த பதிவுகள் என எல்லாம் அழிந்து போயின. மீள 2009 கார்த்திகை ஐந்தாம் நாளின் பின் எழுதிய, இணையத் தளங்களில் வெளியாகிய பதிவுகளையே மின்நூல்களாக வெளியிட முடிகிறது.

எனது மின்நூல்களில் காணப்படும் பதிவுகளைப் படித்து, உங்கள் கருத்துகளை Facebook, Google+, Twitter, Linkedin போன்ற தளங்களில் பகிருங்கள்.

யாழ்பாவாணனின் மின்நூல்களைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்.

கணினி மற்றும் ஏனைய மின்னூல்கள்

கணினித் துறைசார் மின்னூல்களைப் பதிவிறக்க.

பல்வகை மின்னூல்களைப் பதிவிறக்க.

நீங்களும் மின்னூல் அனுப்பலாம்

25 Responses

 1. மின்னூல் பகிர்வுப்பணிக்குப் பாராட்டுகள். வளர்க உங்கள் தொண்டு! வெல்க உங்கள் பணி!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

  Like

  • உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்புடன் பல நூறு நூல்களை இம்மின்னூல் களஞ்சியத்தில் இணைத்து இப்பணியை மேலும் மேம்படுத்தவுள்ளேன்.

   Like

 2. நீங்கள் அளித்துள்ள அகராதி செம்மையான அகராதியாக இல்லை. வேறு நல்ல அகராதியைப் பகிரலாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

  Like

  • தங்கள் மதியுரையை ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் பதிவேற்றலில் சிறந்த அகரமுதலிகளை (அகராதிகளை) இணைக்கவுள்ளேன்.

   Like

 3. தங்கள் மறுமொழிக்கு நன்றி.

  Like

 4. வணக்கம் ஐயா, தங்களின் மின்நூல் தொகுப்பு மிகவும் பயனுடைய தொகுப்பாக இருக்கிறது. தங்கள் முயற்சி தொடரட்டும்.

  Like

  • தங்கள் வழிகாட்டலும் வாழ்த்துகளும் இதனை இன்னும் மேம்படுத்த உதவுமென நம்புகிறேன்.

   Like

 5. நூல்களைப் பார்த்தேன். பெரிய சேவை! ஆனால், இதிலுள்ள நூல்களெல்லாம் நாட்டுடைமையாக்கப்பட்டவைதானா?

  Like

  • நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் உண்டு. தன்(சுய) விருப்பில் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களும் உண்டு. எதையும் எவரும் பயன்படுத்தலாம். ஆனால், எவரும் எதையும் விற்க முடியாது. இந்நூல்களை எல்லோரும் பயன்படுத்த ஊக்கப்படுத்துவோம்.

   Liked by 1 person

 6. தங்களின் தமிழ்பணி சிறக்க தமிழ்த்தோட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறோம்

  Like

 7. வணக்கம் ஐயா
  தங்கள் ஒப்பற்ற பணி சிறக்க வாழ்த்துகள். தங்களின் இப்பணி கண்டு வியந்து நிற்கிறேன். அனைவருக்கும் பயன்படட்டும் என்று பகிர்ந்த உங்கள் பொதுநலனிற்கு நன்றிகள் ஐயா. தொடர்க உங்கள் தமிழ்ப்பணியை. நன்றி.

  Like

 8. மிக்க பயனுள்ள செய்தி மற்றும் மின்புத்தகங்களை,பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா! தொடரட்டும் உங்கள் சேவை

  Like

 9. கொடுக்கக் கொடுக்கக் குறையாது கல்விச் செல்வம். நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நீங்கள் செய்யும் பணிக்குப் பாராட்டுக்கள்

  Like

 10. சிறப்பான முயற்சி, தங்கள் தூய்மையான தமிழ் வழக்கு மிக சிறப்பாக உள்ளது, மேலும் புழக்கத்தில் உள்ள பல வழக்கொழிந்த பழந்தமிழ் சொற்களை தொகுத்து தமிழுலகிற்கு அளிக்கவும்

  Like

 11. சிறப்பான முயற்சி, தங்களின் மின்நூல் தொகுப்பு மிகவும் பயனுடையது. தங்கள் முயற்சி தொடரட்டும்.

  Like

 12. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது பழமொழி முயற்சியை தொடருங்கள் உங்களின் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  Like

 13. ஐயா வணக்கம்…..
  இணைய வலையத்தில் கிழமைகள் தமிழில் எழுதப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
  அதனுடன் என்களை தமிழில் எழுதி இருந்தால் சிறப்பாக இருக்கும். தமிழில் எழுதினால் சிலருக்கு புரியாது என்பதால் நீங்கள் எண்களுக்கு அருகில் அடைப்பு குறியில்

  க(1)
  உ(2)
  என்று எழுத்தில் எழுதிருந்தால் சிறப்பாக இருக்கும்.
  நன்றி ……

  Like

  • தங்கள் விருப்பப்படி ஒரு பதிவைப் பதிவேன்.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Like

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: