ஒன்றுபடு தமிழா! ஒன்றுபடு!

 28/08/2020 வெள்ளி மறக்காமல் இணையுங்கள்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 02 – தொடர் – 02

தமிழா! தமிழரே உலகின் முதற்குடி!

தமிழா! தமிழே உலகின் முதன்மொழி!

தமிழா! தமிழில் தான் நல்ல பண்பாடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

https://ypvnpubs.blogspot.com/2020/08/blog-post_27.html
மேற்காணும் இணைப்பினைச் சொடுக்கி எனது முழுமையான பதிவையும் படிக்கலாம் வாங்க.

இணையக் கலந்துரையாடலும் ஒளிஒலி (வீடியோ) வெளியீடும்

இணையம் வந்த போதே, உலகம் உள்ளங்கையில் உருளும் என்றோம். அதனைத் திறன்பேசியில் கண்டுகொண்டோம். உலகம் எங்கும் இருக்கும் எவருடனும் முகம் பார்த்துக் கதைக்கின்ற நுட்பம் ஏற்கனவே வந்துவிட்டது. இப்ப இணையம் வழி கலந்துரையாடிவிட்டு, அதனை ஒளியும் ஒலியும் (வீடியோ) ஆக வெளியிடும் நுட்பத்தைப் பார்க்கின்றோம்.

இதனால் கற்பித்தல், கலந்துரையாடல், பட்டிமன்றம் எனப் பல நடாத்திய பின்னர், ஒளியும் ஒலியும் (வீடியோ) ஆக வெளியிட முடியும். கொரோனா (COVID-19) நோய்த் தொற்றுப் பரவாமல் தடுக்க, தனிமைப்படுத்தல் பேணப்பட்ட காலத்தில் கல்வியியலாளர்கள்,  அறிஞர்கள் எனப் பலரும் இவற்றையே கையாளுகின்றனர்.

சிறிய தனிப்பட்ட கலந்துரையாடல் என்றால் Skype Meet Now, Teamviewer போன்றன போதும். பெரும் எடுப்பிலான கற்பித்தல், கலந்துரையாடல், பட்டிமன்றம் எனக் கருதும் வேளை அன்பளிப்பு (இலவசம்) ஆகக்கிட்டும் செயலிகளையே நம்மாளுங்க முதலில் தேடுவது வழக்கம். அதன்படிக்கே Zoom, Cissco Webex, EZTalks, Lifesize, Teamlink, Meet_Jit_Si போன்றவை என் கண்ணில் பட்டது.

மேற்காணும்  செயலிகளைப் பற்றி  வலையொளி (Youtube) தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.  அன்பளிப்பு (இலவசம்) என்றால் சில கட்டுப்பாடுகளும் இருக்கும். அவற்றில் அதிகமானோர் 40Min இல் Zoom ஐப் பாவிக்க, அதிக நேரமென  Teamlink, Meet_Jit_Si பாவிப்போரும் உள்ளனர். Zoom ஐப் போலப் பாவிக்கலாமென Cissco Webex, EZTalks, Lifesize பாவிப்போரும் உள்ளனர்.

எதனைப் பாவித்தாலும் இணைய இணைப்பும் பயனர் ஒழுக்கமும் தேவை. அவ்வாறாயின் இணையக் கலந்துரையாடல் சிறப்பாக இருக்கும். சரி! இனி எனது முதலாவது ஒளியும் ஒலியும் (வீடியோ) இல் Meet_Jit_Si, lifesize, eztalks, zoom போன்ற செயலிகளைப் பாருங்கள்; இரண்டாவதில் Skype Meet Now, Teamviewer, Cissco Webex, Teamlink போன்ற செயலிகளைப் பாருங்கள். எனினும் இவற்றையும் அறிந்து வைத்திருப்பதில் நன்மைகள் இருக்கே.

Video-01

Video-02

இங்கு குறிப்பிட்ட Teamlink செயலி ஊடாக நானும் உரையாற்றி இருந்தேன். அதன் ஒளியும் ஒலியும் (வீடியோ) கீழே இணைத்துள்ளேன். என்னூரில் இணைய இணைப்புச் சீரின்மையால் என் பேச்சில் தடங்கல் ஏற்பட்டதை உரையில் காணலாம். மேலும்ஒருவர் பேசும் போது அடுத்வர் ஒலிவாங்கியை (Mic) நிறுத்திவைக்க வேண்டும். அதாவது ஒருவர் பின் ஒருவராகக் கலந்துரையாடுவதே சிறப்பு. அடுத்த பதிவில் எனது முழுமையான உரையைப் பதிவு செய்கிறேன்.

%d bloggers like this: