வாசகி ஒருவள் வேண்டினாள்!


செல்லமாகத் தடவிச் செல்லும் காற்று
மெல்லமாகக் காதில் இசைக்கும் காற்று
என் பாட்டைக் காவிச் சென்றது நேற்று
என் பாட்டைக் கேட்டு வந்தவள் ஈற்றில்
உன் பாட்டில் சுவை இல்லையெனச் சாற்றினாள்!

பாட்டின் புனைவில் சுவையா சுட்டிக் காட்டு
பாட்டின் பொருளில் சுவையா சுட்டிக் காட்டு
பாட்டின் இசையில் சுவையா சுட்டிக் காட்டு
பாடியவர் குரலில் சுவையா சுட்டிக் காட்டு
என்றதுமே சென்றாள் மீளமீள எழுதிக் காட்டென!

பாப்புனைய விரும்பின் மீளமீள எழுதிப் பாடு
பாவலராக விரும்பின் இசையோடு காற்றினில் பாடு
காற்றினில் வருமுன் பாட்டில் சுவை நாடும்
என் உள்ளம் இழகினால் உன்னைத் தேடும்
என்றதுமே எழுதியெழுதிப் பாவலராக வில்லையே!

நல்ல கவிதை

இலக்கணம் கலந்த கவிதை
தைத்த ஆடை போலப் போட்டால் (படித்தால்)
அழகாகத் தான் இருக்குமே!
இலக்கணம் கலக்காத கவிதை
தெருக்கடையில வேண்டிப் போட்ட
அளவில்லாத ஆடை போல
அழகில்லாத/ அமைப்பில்லாத கவிதையே!
கவிதைத் திறம் வெளிப்பட
கற்பனை, கவியாக்கத் திறன் போதாது
சற்றுத் தமிழ் இலக்கணம் கலந்தேனும்
வெளிப்படுத்தினால் தானே
நல்ல கவிதைகளை இனம் காணமுடியுமே!

எவருக்கு ஒறுப்பு வழங்க?


காளை விருப்புக்கு இணங்கிய வாலையோ
வாலை விருப்புக்கு இணங்கிய காளையோ
இருட்டு அறைக்குள் கருவுற்ற படைப்பிதுவோ
திருட்டு வழியாகக் குப்பையிலே சேர்ந்ததுவோ
எவர் தவறில் பிறந்த குழந்தையிதுவோ
எவருக்கு எவர் ஒறுப்பு வழங்குவாரோ?

இப்பதிவின் முழுப் பதிவையும் எனது முதன்மைப் பக்கத்தில் படிக்கலாம் வாங்க! முதன்மைப் பக்கம் வருவதற்கு கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2018/11/blog-post_16.html

%d bloggers like this: