உழைப்பில்லையேல் பிழைப்பில்லைக் காண்!

முற்சந்தி, நாற்சந்தி, ஐந்து சந்திகளில்

வேலை இல்லாமல் அலைகின்ற ஆண்களே!

நாலு காசு உழைக்கத் தான்

நல்ல வேலையில சேர்ந்தால் தான்

எந்தப் பெண்ணும் உனக்கிசைவாள் காண்!

நாலு காசு உழைத்துக் கொண்டிருந்தால்

நாளும் மகிழ்வாய் வாழலாம் ஆண்களே!

அன்பான, அறிவான, அழகான, பண்பான, பலமான குமரி ஒருத்திக்கு நானும் தாலி கட்டினேன். நான் தாலி கட்டின பிறகு, அவள் தானே என்னில்லத்தை ஆளும் இல்லாள். என்னைப் பெத்த அம்மையும் அப்பனும் “பிள்ளை உழைச்சுப் போட்டால் சமைச்சுப் போடு” என மருமகளுக்கு மதியரையும் வழங்கியிருந்தனர். எனக்கோ வேலை இல்லாமல் போச்சு; அந்த நேரம் பார்த்து உழைச்சுப் போட்டால் சமைச்சுப் போடுகிறேனென இல்லாளும் எனக்கு ஒத்துழையாமல் இருந்தாள்.

நல்லாய் உழைத்து வருவாய் பெருக்கினால்

இல்லாள் பிழைக்கத் துணையிருப்பாள் – இல்லையேல்

நல்லாய் உழைக்கத்தான் போ!

அந்த நேரம் பார்த்து வந்த மேலுள்ள ‘ஒரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா’ கூட நாலு காசு ஈட்ட உதவவில்லை. அடுத்ததென்ன? வேலை தேடி நாலு காசு ஈட்டின பிறகு தானே இல்வாழ்வும் இனித்தது.

வேலையற்று இருக்கும் ஆண்களே!

புண்பட்ட என் கதை அறிந்தாவது

“உழைப்பாளியே ஆண்களின் அழகானவர்” என்று

பெண்கள் ஒத்துழைப்போடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

என் வாழ்வும் உனக்கு வழிகாட்டுமென

நானுரைத்தேன் நீ மகிழ்வாய் வாழவே!

வேலையற்ற இளையோரும் தாலி கட்டிய இல்லத்து அரசர்களும் “ஒழுங்காய் உழைத்துப் போடும் ஆண்கள்” என நாலு காசு உழைக்க முயலுங்கள். அப்ப தான் உங்கள் காதலியோ இல்லாளோ உங்களுக்கு ஒத்துழைப்பாள். உங்களைப் பார்த்தாவது நாளைய இளையோர் வேலையின்றித் தெருச் சுற்றாமல் உழைத்துப் பிழைத்து வாழட்டும்.

கவிதை அரங்கேறும் நேரம்! – Dec2020

கொரோனா (COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவது  ZOOM, Cisco Webex, Meet.Jit.Si, Google Meet, Microsoft Teams, Lifesize, Eztalks, Teamlink எனப் பல காணொளி (ஒளிஒலி) உரையாடல் செயலி ஊடாக இணையவழிக் கருத்தரங்குகள் நடாத்தி நம்மாளுங்க தம் அறிவாற்றலைப் பகிர்ந்த வண்ணம் வாழப் பழகிட்டாங்க.

அவ்வாறான இணையவழிக் கருத்தரங்குகள் போன்றே “கவிதை அரங்கேறும் நேரம்!” என்ற நிகழ்வை நடாத்திப் பன்னாட்டுக் கவிஞர்களுக்குக் களம் அமைத்துத்தர யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் முன்வருகின்றது. “தமிழரின் பலம் ஒற்றுமை தான்!” என்ற தலைப்பில் மரபுக் கவிதை அல்லது புதுக் கவிதை எதுவாயினும் மூன்று மணித்துளி (3 minute) நேரத்தில் வாசிக்கத் தக்கதாக இருக்கவேண்டும். சமகாலச் சூழலை உள்ளத்தில் இருத்தி மேற்படி தலைப்பிலான கவிதைகளை எல்லோரும் எழுதி அனுப்பலாம். முடிவு நாள் : 30/12/2020, முடிவு நாள் நீடிக்கப்பட மாட்டாது.

தங்கள் கவிதைகளை அனுப்ப விரும்புவோர் PP Size Photo, பெயர், முகவரி ஆகியவற்றுடன் wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். எல்லோரும் பங்கேற்கலாம்; எல்லோருக்கும் பகிர்ந்து உதவுங்கள். எமக்குக் கிடைத்த கவிதைகளை “யாழ்பாவாணன் வெளியீட்டகம்” ஊடாக மின்நூலாக்கி வெளியிட்டு உதவுவோம். கவிதைகள் எமக்குக் கிடைத்த ஒழுங்கில் “கவிதை அரங்கேறும் நேரம்!” என்ற நிகழ்வில் கவிஞர்களைச் சேர்த்துக்கொள்வோம். விரைவாக உங்கள் சிறந்த கவிதைகளை அனுப்பி உதவுங்கள்; பன்னாட்டுக் கவிஞர்களுடன் கவிதை வாசிக்கலாம்.

குறிப்பு:-

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் (https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html) அறிவிப்பின் அறுவடையாக “இது தான் காதலா?” மின்நூல் அடுத்த வாரம் வெளிவரும்.

மூலம்: https://seebooks4u.blogspot.com/2020/11/dec2020.html

இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளா? பயன் தருமா?

ஒவ்வொரு வெள்ளி மாலை ஏழு மணிக்கும் (இல. இந். நேரம்) எமது இணைய (Team Link) வழி மரபுக் கவிதைப் பயிலரங்க (https://m.teamlink.co/9159510023…) நிகழ்வு இடம் பெறும். விரும்பும் உள்ளங்கள் இணையலாம். விரும்பியோர் தங்கள் நண்பர்கள் எல்லோரையும் இணைத்து உதவலாம். பயன்மிக்க பயிலரங்கம் என்பதை ஒருமுறை பங்குபற்றினால் தெரியவரும். இப்பயிலரங்கத் தொடரினைத் தொடர்ந்து வருகை தந்து பங்குபற்றியோருக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.

இலக்கியத்தில் கட்டுரைகதைகவிதைபாட்டுநகைச்சுவைநாடகம் எனப் பல இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். இவற்றில் கவிதை எழுதுவதையே முதலில் எந்தப் படைப்பாளியும் முயற்சித்திருப்பாரென நான் நம்புகின்றேன். கடுகு போலச் சிறிய கவிதைக்குள் உலகம் போன்ற பெரிய செய்தியைச் சொல்ல முடிவதால் எல்லோரும் முதலில் கவிதையை நாடியிருக்கலாம்.

கவிதைக்கு உயிர் ஓசை / சந்தம் / இசை என்பார்கள். அப்படி அமையப் பெற்ற படைப்புகளே கவிதையாம். பொதுவாக வசனகவிதைபுதுக்கவிதைமரபுக்கவிதை என்பன பேசப்படுகிறது. அதிகமானோர் புதுக்கவிதைச் சொந்தங்கள் தான். சிலருக்குத் தான் மரபுக்கவிதை நாட்டமாம்.

எதுகைமோனை எட்டிப் பார்க்க

சந்தம் எனும் ஓசை நயம்

பாக்களில் ஒட்டிக் கொள்ளவே

மரபுக் கவிதைகள்

எளிதில் உள்ளத்தில் இருக்குமாமே!

இவ்வாறான மரபுக்கவிதைகளை எழுதிப் பழக ஊக்குவிக்கும் முகமாக இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளை யாழ்பாவாணன் போன்றோர் நடாத்தி வருகின்றனர். தமிழ் அறிஞர்கள் இப்பயிலரங்குகளில் சிறப்பாகப் பயிற்றுவிக்கின்றனர். இதற்கிடையே “இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளாபயன் தருமா?” என்ற கேள்விகள் எழுகின்றன.

இணையத்திலாஅக்கல்வி சரிவராது என்பார்! உள்ளத்தில் கவித்துவம் இருந்தால் கவிதை வருமேபிறகேன் இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகள்இணையக் கல்வி காற்றோடு கரையலாம்உள்ளத்தில் நிலைக்காது!” என்று எவரும் சொல்லலாம்.

எழுத்துஅசைசீர்தளைஅடிதொடைபா வகை என்பன மரபுக் கவிதைகளைப் புனையத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல நூல்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இருப்பினும் ஆசிரியரின் வழிகாட்டலோடு பயில்வது சிறப்பாகும். அதேவேளை இணைய வழிப் பயிலரங்குகளிலும் பயின்று மரபுப் பாக்களைப் புனைய முடியுமே! நீங்கள் விரும்பினால் உங்களால் முடியுமே!

விரும்பும் கவிதைகளை நீபுனையத் தானே

விரும்பிநீ தான்புனை நன்று

                   (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 விருப்பம் உள்ள உள்ளங்கள் யாழ்பாவாணன் நடாத்தும் இணைய வழி மரபுக் கவிதைப் பயிலரங்குகளில் இணையலாம். முழுமையாகப் பயின்றோருக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.

 நன்றி.

தொடரும் இணையவழிப் பயிலரங்குகள்

மேற்படி பயிலரங்கில் முழுமையாகப் பங்கெடுக்கும் பயிலுநர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். விரும்பும் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.

கொரோனா (Covid-19) உலகெங்கும் உலாவி உயிர்களைப் பறிப்பதும் உறவுகளைத் தனிமைப்படுத்துவதுமாக நகர்ந்தாலும் நம்மாளுங்க அதிலிருந்து தப்பிக்கப் போராடிய வண்ணம் வாழ்கின்றனர். அந்த வகையில் தமது அறிவினைப் பெருக்கப் பலரும் இணையவழிப் பயிலரங்கினைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் யாழ்பாவாணன் கலைப்பணி மன்றமும் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்கப் பயிலரங்குகளை நடாத்தி வருகிறது.

இதுவரை புதுக்கவிதைப் பயிலரங்கம், நகைச்சுவைப் பயிலரங்கம், மரபுக் கவிதைப் பயிலரங்கம்-01 நடாத்தியிருந்தோம். தற்போது மரபுக் கவிதைப் பயிலரங்கம்-02 நடைபெறுகிறது. கீழ்வரும் இணைப்பில் அதற்கான காணொளிகளைப் பார்க்கலாம்.

நாம் நடாத்தும் மரபுக் கவிதைப் பயிலரங்கப் பிந்திய காணொளிகளைக் கீழே பார்க்கவும்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 02 – தொடர் – 05

மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 02 – தொடர் – 06

மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 02 – தொடர் – 07

மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 02 – தொடர் – 08

மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 02 – தொடர் – 09

யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்க நடாத்தும் பயிலரங்குகளில் விரும்பும் உள்ளங்களை இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.

எங்கள் அம்மா நினைவுப் பதிவுகள் (மின்நூல்)

உலகத் தமிழ் வலைப் பதிவர்களே! எங்கள் அம்மா 28/09/2020 அன்று இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் ஆற்றுப்படுத்திய எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

மேலும், 28/10/2020 அன்று எங்கள் அம்மாவின் 31ஆம் நாள் நிறைவு (அந்தியேட்டிக் கிரியைகள்) கொரோனா (Covid – 19) காரணமாகச் சுருக்கமாக இடம்பெறுகிறது. இருப்பினும் எங்கள் அம்மா பற்றிய நினைவுப் பதிவுகளை மின்நூலாகத் தொகுத்துள்ளேன். அதனைத் தங்களுடன் பின்வரும் வழிகளில் பகிருகிறேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.

https://app.box.com/s/l7eze79wozqsreozbcbi57fsr1mo4ejq

எனது மின்நூலைப் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.

https://online.fliphtml5.com/insb/gqmb/

எனது மின்நூலை திறன்பேசிச் செயலியாகப் பதிவிறக்கித் தங்கள் Android, Windows திறன்பேசிகளில் நிறுவிப் பின் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://mobincube.mobi/E8H7RJ

(இவ்விணைப்பைத் திறன்பேசியில் மட்டும் பாவிக்குக)

எனது மின்நூலின் PDF தொழில் நுட்பப் பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.

https://drive.google.com/file/d/1XchV0nPPnKhRCyRYNHVqDLF6eWow0oLq/preview

ஒன்றுபடு தமிழா! ஒன்றுபடு!

 28/08/2020 வெள்ளி மறக்காமல் இணையுங்கள்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 02 – தொடர் – 02

தமிழா! தமிழரே உலகின் முதற்குடி!

தமிழா! தமிழே உலகின் முதன்மொழி!

தமிழா! தமிழில் தான் நல்ல பண்பாடு!

தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!

https://ypvnpubs.blogspot.com/2020/08/blog-post_27.html
மேற்காணும் இணைப்பினைச் சொடுக்கி எனது முழுமையான பதிவையும் படிக்கலாம் வாங்க.

Zoom ஆல தான் எனக்குச் சாவு!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், , ’யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் இணைய வழி நடத்தும் TeamLink ID: 9159510023 PWD: 7101969 மரபுக் கவிதைப் பயிலரங்கம் பள்ளிக்கூட, பல்கலைக்கழக மாணவர்களுடன் பயில விரும்பும் எவரும் எந்நாட்டவரும் ரீம்லிங் செயலி வழி இணையலாம். பயிலரங்க ஆசிரியர்:- முனைவர். .திருஞானசம்பந்தம் ஒவ்வொரு வெள்ளியும் (இல., நேரம்) மாலை 7 மணிக்கு இடம்பெறும். 7.00 மணிக்கு முன்னதாக இணைய வேண்டும். ஒருங்கிணைப்பு: யாழ்பாவாணன் சி.ஜீவலிங்கம்) Mobi: 094 070 3445441 (Whatsapp) email: vazlpayanan@hotmail.com நேரலை: https://w.acebokco/g/pag/Live’ எனச்சொல்லும் உரை

17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்திவருகிறேன். அடுத்த பயிலரங்கம் 21/08/2020 வெள்ளி இடம்பெறும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கெடுக்க உதவுங்கள்.

Zoom ஆல தான் எனக்குச் சாவு!

இப்பவெல்லாம்

இணையக் கலந்துரையாடல் தான்…

Teams என்கிறாங்க… Meet என்கிறாங்க…

அடிக்கடி Zoom என்கிறாங்க…

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கோ

(Data குடிப்பதால்) வருவாய் என்கிறாங்க…

எவரும் எம்மைச் சிந்தித்தார்களோ

எங்களுக்குத் தெரிவதில்லை…

(Covid -19) கொரோனா வந்தபின்

வீட்டுக்காவல் போல முடக்கிவிட

இணையக் கலந்துரையாடல் தான்

ஆற்றுப்படுத்த உதவினாலும் கூட

Zoom ஆல தான் உனக்குச் சாவு என்று

என் பெண்டாட்டி திட்டித் தீர்ப்பதை

கடவுள் தான் கண்டிருப்பார்…

உண்ணாண உண்மை தான்!

மூன்று மணிக்குக் கவிஞர் சந்திப்பு

நான்கு மணிக்குப் பாடகர் சந்திப்பு

ஐந்து மணிக்கு வெளியீட்டாளர் சந்திப்பு

ஆறு மணிக்கு எழுத்தாளர் சந்திப்பு

ஏழு மணிக்கு வாசகர் சந்திப்பு

இப்படியே நீண்டு செல்கிறது…

 நாளுக்கு நாள்

ஓய்வின்றி ஒன்றுக்கு மேற்பட்ட

இணையக் கலந்துரையாடல் தான்…

இதைப் பார்க்கிற பெண்டாட்டி

தன்னைக் கட்டியதை விட

Zoom ஐக் கட்டியிருக்கலாமே என்கிறாள்…

எல்லோரும் தேவை தான்

எல்லாமும் தேவை தான்

Zoom இல தலையைக் காட்டாட்டி

உள்ளத்தில அமைதியில்லை என்போர்க்கு

Zoom ஆல தான் சாவு போல…

எனக்கு இப்ப Zoom ஆஅ

என் பெண்டாட்டியா தேவை?

எனக்கே தலையைச் சுற்றுகிறதே!

யாழ்பாவாணன் ஏன் இப்படி எழுதினார் என்று பலரும் கேட்கலாம். இணையக் கலந்துரையாடல் எனப் பலர் படையெடுக்கின்றனர். அக்கலந்துரையாடல்கள் ஆவணப்படுத்தப்பட்டுப் பேணப்பட்டால் நன்மையுண்டு. அதேவேளை குடும்பம் பற்றியும் சிந்திக்க வேண்டுமே! அதனை எண்ணிப் பார்த்தேன்; அதனால் எழுதியதை அப்படியே பகிர்ந்தேன்.

%d bloggers like this: