யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்

உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

2018 இல் எனது வலைவழிப் பயணம் சோர்வடைந்து இருந்தாலும் வலைப்பதிவர்கள் தந்த ஊக்கம் என்னைச் சோர்வடைய விடவில்லை. அதனைக் கருத்திற்கொண்டு 2019இல் வலைவழியே மரபுக் கவிதைப் போட்டிகளும் மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் திறம்பட நடாத்தவுள்ளேன். இன்றுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு 2019 இல் இணைந்து செயற்பட அன்புக்கரம் நீட்டுகிறேன்.

2019 தைப்பொங்கலை அடுத்து ‘தமிழில் பாப்புனைய விரும்புங்கள்’ என்ற எனது மின்நூலை வெளியிடவுள்ளேன். 2019 சித்திரைப் புத்தாண்டையொட்டி “உலகெங்கும் நற்றமிழ் பேணுவோம்” என்ற தலைப்பில் ஆசிரியப்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன். 2019 தீபாவளிப் பெருநாளையொட்டி “தமிழருக்கு ஒற்றுமையே பலம்” என்ற தலைப்பில் வெண்பா எழுதும் போட்டி நடாத்தவுள்ளேன்.

“யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள்” என்ற தலைப்பிலான மரபுக் கவிதை புனையத் தேவையான குறிப்புகளைக் கீழே விரித்துப் படிக்கலாம். இனிவரும் மரபுக் கவிதைப் போட்டிகளில் பங்கெடுக்க இக்குறிப்புகள் உதவுமென நம்புகிறேன்.

கீழ்வரும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கலாம்.
https://drive.google.com/file/d/1BaJJmctgWrttI_CKvNbrFDXnqWm1Bs0D/view
மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!

https://plus.google.com/u/0/communities/110989462720435185590 என்ற இணைப்பைச் சொடுக்கி’உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்’ குழுவில் உங்கள் புதிய பதிவுகளின் இணைப்பைப் பகிர்ந்து உதவுங்கள். 2019 உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் பெருவெற்றிகள் கிட்ட உதவுமென வாழ்த்துகிறேன்.

Advertisements

புகைத்தல் சாவைத் தருமே!

https://seebooks4u.blogspot.com/2018/04/2018-3.html 2018-3 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் என்ற இணைப்பிலுள் அறிவிப்பின் படி “புகைத்தல் உயிரைக் குடிக்கும்” என்ற மின்நூலுக்காக http://tev-zine.forumta.net/t10-topic தமிழ் இலக்கிய வழி தளத்தில் எழுதிய கவிதை.

41457656682_6331b96907_o

தம்பி! புகைக்காதே தம்பி!
புகைத்துப் போட்டு நீ சாகாதே!
தம்பி! தம்பி! தம்பி!
தங்கச்சி! புகைக்காதே தங்கச்சி!
புகைத்துப் போட்டு நீ சாகாதே!
தங்கச்சி! தங்கச்சி! தங்கச்சி!

“புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு” என
எச்சரிப்பது வெறும் பொய்யல்ல – அது
உன் உயிரைக் குடிக்குமென்ற மெய்யே!
புகைக்கத் துணிந்த உனக்கு – இந்த
உண்மையை உணர நேரமிருக்காதே! – நீ
சாகத் துடிக்கும் போதே படிப்பாய்!

மாரடைப்பு, புற்றுநோய் மட்டுமல்ல
ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு என
பாலியல் நாட்டமின்மை, மலட்டுத் தன்மை என
நோய்களின் பட்டியலைப் போட்டு நீட்டி
புகைத்தல் தரும் பரிசில்கள் எனப் பகிரும்
விளம்பரங்களை நம்பிப் புகைப்பது சரியாகுமோ?

ஒவ்வொரு சுருட்டும் புகைக்கும் வேளை
உடலுக்கு உள்ளே புகையை உறிஞ்சுவாய்
உன் வாழ்வில் 11 மணித்துளியை இழப்பாய்
நோய் எதிர்பு சக்தியை இழப்பாய் – அதனால்
நோய்கள் வந்து உன்னுடலில் குந்தியிருக்க
புகைத்தல் உன்னுயிரைக் குடிப்பது உறுதியே!

புகைக்காதே தம்பி! தங்கச்சி!
வாழவே முடியாமல் சினுங்காதே!
சாகத் துடிக்கையிலே அழுவாதே!
புகைத்துப் போட்டு நீ சாகாதே!
தம்பி! தம்பி! தம்பி!
தங்கச்சி! தங்கச்சி! தங்கச்சி!

குழந்தை பெற்றுச் சாகடிப்பது காதலாகுமோ?

26230076_1832538130121801_6496534663133271435_n

நம்பி நம்பி நடைபயின்றுச் சுற்றி
கம்பி வேலி கடந்துசென்று கைகுலுக்கி
தெருக்களிலும் பூங்காக்களிலும் நெருங்கிப் பழகி
காதலெனக் காமம் மேலிடக் கூடியதில்
பெண்ணுக்கு வயிறு பெருத்திடப் பார்த்து – கெட்ட
ஆணுக்கு அச்சம் முட்ட ஒளிந்தோட – ஒளிக்க
முடியாத நல்ல பெண்ணின் அறுவடையாக
தெருவோர, குப்பைமேடு குழந்தைகளின் நிலை!
“வெளுத்ததெல்லாம் வெள்ளையென நம்பி
பதிவுத் திருமணம் செய்யாது கூடியவளே – உன்
அழுக்ககலக் குழந்தையைப் பெற்று வீசலாமோ?
காமம் மேலிட்டதால் காதல் நீங்கிட – ஓடி
ஒழியும் காமவெறி ஆண்களே பதில்கூறுவீரா?” என
இருபாலாரிடமும் இப்படித்தான் கேட்க முடிகிறது!
“பொதுவெளியில் காமம் மேலிட அலைவதும்
பொதுவெளியில் பிள்ளை பெற்று வீசுவதும்
காதலென்ற போர்வையில் பண்பாட்டை மிதிப்பதும்
சுத்தமான காதலுக்கு அழுக்குப் பூசுவதும் – உங்கள்
செயல் என்றால் சாவை நாடலாமே! – ஏன் தான்
குழந்தையைப் பெற்றுவீசிச் சாகடிக்கிறீர்கள்?” என
இருபாலாரிடமும் இப்படித்தான் கேட்க முடிகிறது!
“இது தான் காதலா?” என்று கேட்டால்
இருபாலாரது பதிலும் வீசியெறிந்த குழந்தைகளா?

யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடவுள்ள “இது தான் காதலா?” என்ற மின்நூலுக்கு மேற்காணும் படத்திற்கு மேற்காணும் கவிதையை விடச் சிறந்த கவிதைகளை 20/03/2018 இற்கு முன் wds0@live.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பரிசில் விரிப்பை அறியலாம்.
https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

வெற்றி பெற்றோரை வாழ்த்துங்கள்

“மதுவை விரட்டினால் கோடி நன்மை” என்ற மின்நூலுக்கு அனுப்பிய கவிதைகளில் கீழ்வருவன பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

competitionநடுவர்களின் தீர்ப்பின் படி

முதற் பரிசு
வாழ்வை வீணாக்கும் மது
சுஷ்ரூவா

இரண்டாம் பரிசு
மதுவும் நானும்
யோகராஜா முரளீதரன்

முன்றாம் பரிசு
பயனற்ற பொருள்
சரண்

பரிசுப் பெறுமதி சமனாகவே இருக்கும்.
வெற்றியாளரை வாழ்த்துவோம் வாருங்க!

அடுத்த போட்டியில் நீங்களும் வெல்லலாம்!
தகவல் பெற
2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html
விரிப்பினைப் பெற்றுப் பரிசினை வெல்ல உங்கள் கவிதையினை அனுப்பி உதவுங்கள்.

காதல் மாதத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவை!

அன்புக்கு மறுபெயர் காதல் என்பாங்க! வாழ்க்கைப் பயணம் இலகுவாக நகர “அன்பு” என்ற ஊக்க உணர்வு தேவை. அந்த ஊக்க உணர்வான அன்பு அதிகமாகப் பற்றுதல் அதிகமாகிறது. ஒருவர், ஒருவர் மீது வைத்திருக்கும் பற்றுத் தான் “காதல்” எனலாம். அதாவது அதிக அன்பு காட்டுதலைக் “காதல்” என்று சொல்லலாம். அதிக அன்பு காட்டுதலால் ஒருவரது உள்ளத் தாழ்ப்பாளைத் (கதவைத்) திறக்க முடிகிறது. அதனால் தான் “அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்!” என்பாங்க! இவ்வாறான காதல் இயற்கையாக அமையும். இவ்வாறு அமைந்த காதல் இணையர்களுக்குச் சோதிடத்தில் குறிப்புப் பார்க்கத் தேவை இல்லையாம்.

27979756279_aace6ed6f0_o

சமகாலத்தில் (2000 இன் பின்) திரைப்படப் பாணியில் “காதல்” என்ற போர்வையில் நல்லுறவுகள் கெட்டுப் போகின்றன. “கண்டதே காதல் கொண்டதே கோலம்” என்ற நாடகமல்லவா அரங்கேறுகிறது. இன்றைய இளசுகள் நடித்துக் காட்டுவது “காதல்” என்றால் என்னவென்று அறியாத தெருக்கூத்துத் தானே! இந்நிலை குமுகாயத்தில்/ மக்களாயத்தில (சமூகத்தில) பல கெடுதல்களை விளைவிக்கின்றன.

அப்படியொரு கெடுதல் ‘தற்கொலை செய்தல்’ எனலாம். இன்னொரு கெடுதல் ‘கருக்கலைப்பு’ எனலாம். அடுத்தொரு கெடுதல் “குழந்தையைப் பெற்றுத் தெருக் குப்பையில் இடுதல்” எனலாம். இன்னும் பல அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் கருத்தில் வைத்து “இது தான் காதலா?” என்ற தலைப்பில் மின்நூல் வெளியிடுவதோடு மூன்று சிறந்த கவிதைகளுக்குப் பரிசில் வழங்குவதாகவும் அறிவித்துள்ளோம். தாங்கள் கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 28-02-2018 என்பதனை நினைவூட்டுகிறோம்.

கவியரசர்களே!

கவிமன்னர்களே!

கவிவேந்தர்களே!

கவிக்கோக்களே!

உங்கள் கவித்திறனை வெளிக்காட்ட நல்ல களம். உடனே உங்கள் கவிதைகளை கீழ்வரும் இணைப்பில் தெரிவித்தவாறு அனுப்பி வைக்கவும்.

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

படத்திற்குக் கவிதை எழுதுங்கள் 26230076_1832538130121801_6496534663133271435_n

படத்தைப் பார்த்தீர்களா? நம்ம பிள்ளைகள் பூங்காக்கள் போய் காதலில் மூழ்கித் தங்களை மறந்து தவறு செய்த பின், செய்த தவறின் பரிசாகக் கிடைத்த குழந்தைகளைத் தெருவில் போட்டுச் செல்கின்றனர். இந்நிலை மேற்கத்தியப் பண்பாட்டில் இருந்து தமிழ் பண்பாட்டிற்குத் தொற்றிய நஞ்சு தான். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள் ஆகிய நீங்கள், உங்கள் பாத்திறம் /கவியாற்றல் மூலம் நல்ல தீர்வினை முன்வையுங்கள் பார்ப்போம்.

தலைப்பு: இது தான் காதலா?

பரிசு: 500INR பெறுமதியான பொத்தகங்கள்

வசதி: மின்நூலாக்கி வெளியிடுவோம்

கட்டுப்பாடு: 10-20 வரிகளில் மரபுக் கவிதை / புதுக் கவிதை. பின்னூட்டங்களில் வரும் கவிதைகள் ஏற்கப்படமாட்டாது.

கவிதைகள் வந்து சேரவேண்டிய முகவரி: wds0@live.com

மின்னஞ்சலுக்கான தலைப்பு (Subject): ‘2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்’ என்றவாறு இருக்க வேண்டும்.

கவிதைகள் அனுப்புவோர்: PP Size படம், பெயர், முகவரி, முகநூல்/வலைப்பக்க முகவரி, நடைபேசி எண் ஆகியன இணைத்து அனுப்பவேண்டும். குறித்த மின்நூலில் தங்களை அறிமுகப்படுத்த அதுவே பயன்படும்.

முடிவு நாள்: 10/02/2018

வெளியிடுவோர்: யாழ்பாவாணன் வெளியீட்டகம்

மின்நூல் வெளியீடு: 08/03/2018

முழுமையான தகவலைப் பெற்றுத் தாங்களும் பங்குபெறக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

குடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க!

குறிப்பு:-  “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற
மின்நூலுக்காக எழுதிய கவிதை இது. நீங்களும் இம்மின்நூலுக்குக்
கவிதை எழுதியனுப்பக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

முடிவுத் திகதி: 31/12/2017

https://seebooks4u.blogspot.com/2017/12/2018-1.html

குடிக்காதீங்க! பிஞ்சுகளே குடிக்காதீங்க!

                      (குடிக்காதீங்க!)

குட்டிப் பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!

குடிச்சவங்க சாகத் துடிப்பதைப் பாருங்க

நீங்க குடிச்சிட்டுச் சாகக் கிடக்காதீங்க

உங்க வாழ்வை வீணாகக் கரைக்காதீங்க!

                       (குடிக்காதீங்க!)

படிச்ச பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!

குடிச்ச பின்னே தெருவில கிடக்காதீங்க

உடுத்த துணியும் இல்லாமல் கிடக்காதீங்க

நடுவழியே ஊராக்கள் பார்த்துச் சிரிப்பாங்க!

                      (குடிக்காதீங்க!)

பச்சைப் பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!

போதையிலே மூழ்கி மயங்கிக் கிடக்காதீங்க

காதலரோ உம்மைக் கண்டால் வெறுப்பாங்க

பெத்தவங்க குடும்பம் இருக்கு மறக்காதீங்க!

                      (குடிக்காதீங்க!)

குஞ்சுகளே பிஞ்சுகளே நீங்க குடிக்காதீங்க!

கைக்குள் உருளும் பணத்தை எரிக்காதீங்க

கொஞ்சும் உறவுகளை வெறுக்க வைக்காதீங்க

குடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க!

                      (குடிக்காதீங்க!)

https://seebooks4u.blogspot.com/2017/12/2018-1.html

மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி விரிப்பைப் படித்து விரையுங்கள்!உங்கள் கவிதைகளை அனுப்புங்கள்; மின்நூலாக்குவோம், பரிசில் வழங்குவோம்! முடிவுத் திகதி: 31/12/2017

%d bloggers like this: