பெண்ணொருவள் தமிழர் மீது பாய்ச்சல்

இழகிய உள்ளம் கொண்டவள்
அழகிய தமிழ் சொல்லெடுத்து
“எதையடா இழந்துவிட்டாய்
இன்பத் தமிழை மறப்பதற்கு?” என்று
கேட்குமளவுக்கு
இடம் கொடுத்தது யார் தமிழா?

தமிழா – நீ
” “அம்மா” என்ற அழகிய தமிழை
“மம்மி” என்று
மரணக் கல்லறை ஆக்கிவிட்டாய்!” என்று
பெண்ணொருவள்
தமிழர் மீது பாய்ச்சலா? – அதற்கு
இடம் கொடுத்தது யார் தமிழா?

ஈழநாட்டில் பிறந்த பெண்ணவள் – தன்
அடிவயிற்றிலிருந்து எழும் கோபத்தை
எங்கள் தமிழ் உறவுகள் மீது
கொட்டி மோதுவதில் தவறில்லையே! – அந்த
தங்கச்சியின் அருமையான பாவடிகளை – நான்
உங்களுடன் பகிர விரும்புகிறேன்!

இணைப்பு: http://www.vallamai.com/?p=59883

Advertisements

தமிழைத் தமிழ்ப்படுத்த வேண்டுமாம்; ஏற்பீரா?

pannutamilfromfbதமிழை
இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்
என்ற கவிதையைப் படித்தேன் – அதை
உங்களுடன் பகிர எண்ணி – நான்
பொறுக்கிய எடுத்துக் காட்டுகளை
சற்றே படித்துப் பாருங்களேன்!

“ஆயிரக்கணக்கான
ஆண்டுகள் முன்னமல்ல
ஐம்பதுகளில் கூட
மேடையெங்கும் வழிந்த தமிழ்
வடிந்து போனதெங்கே…?” என்ற
கேள்விக்கு
உங்கள் பதில் என்ன?

“பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளை
‘மம்மி டாட்டா’ என்றது
அதன் அன்னை அகம் மகிழ்ந்தாள்
தமிழன்னை தலை கவிழ்ந்தாள்
காரணம்
அது சொன்னது தமிழுக்கு ‘டாட்டா’ …!” என்ற
செயலுக்கு
உங்கள் விளைவு என்ன?

“வயிற்றுப் பாட்டுக்காக
வாய்மொழியை மாற்றாதே…!
வந்த மொழியைப் போற்றாதே…!
உன் தாய்மொழியைத்
தள்ளி வைக்காதே…!” என்ற
வேண்டுகோளுக்கு
உங்கள் முடிவு என்ன?

“தமிழைச் சிதைப்பதில்
சின்னத்திரையும் வண்ணத்திரையும்
சின்னத்தம்பி, பெரியதம்பி…!
இவைகளில்
கன்னித் தமிழ்க் கிளிகள்
கலப்பட மொழி பேசும்…!” என்ற
நிலைக்கு
உங்கள் மாற்றம் என்ன?

“தமிழரையெல்லாம்
தமிழன்பராக்க வேண்டும்…!
கனவு இலக்கியம், பண்பாடுகள்
களவு போகாமல் காக்க வேண்டும்…!” என்ற
எதிர்பார்ப்புக்கு
உங்கள் பங்களிப்பு என்ன?

தமிழை
இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்
என்ற கவிதையைப் படித்தேன் – அதில்
நான் பொறுக்கிய எடுத்துக் காட்டுகளை
சுட்டிக் காட்டிக் கேட்ட கேள்விகளுக்கு
உங்களால் பதிலளிக்க இயலுமா?

பதிலளிக்க முயலு முன் – கொஞ்சம்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கியே
http://dindiguldhanabalan.blogspot.com/2015/07/Tamil.html
திண்டுக்கல் தனபாலன் பதிவை
முழுமையாகப் படித்த பின்னர்
பதிலளிக்க முயன்று பாருங்களேன்!

“தமிழை
இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்” என்ற
கவிதைக்கான தங்கள் கருத்துகளை
திண்டுக்கல் தனபாலன் தளத்திலேயே
தெரிவித்த பின்னரே…
தமிழைத் தமிழ்ப்படுத்த வேண்டுமாம்;
ஏற்பீரா? என்று தொடரும் – எனது
கேள்விக் கணைகளுக்கான – உங்கள்
பதில்க் கணைகளை – வந்திங்கே
குறி வைத்து வீசுங்களேன் – என்
தலை தப்பாட்டிய் பரவாயில்லை
எங்கள் (உங்கள்+என்)
தமிழன்னை தலை கவிழாமல் பேணவே!

நாளைய தமிழ் எப்படி இருக்கும்?

நேற்றைய தமிழ்
நல்ல தமிழ் தான் – அதனை
நாங்கள் தான் பாவிப்பதில்லையே!

இன்றைய தமிழ்
நல்ல தமிழாக இல்லையே – அதனை
நாங்கள் தான் வெளிப்படுத்துவதில்லையே!

நம்மாளுகளின் தமிழ்
பிறமொழிக் கலவை தான் – அதனை
நாங்கள் தான் உணருவதாயில்லையே!

எந்த நாளும் தமிழ்
தூயதமிழ் ஆவதில்லைப் பாரும் – அதனை
நாங்கள் தான் பேணுவதாயில்லையே!

நாளைய தமிழ்
எப்படி இருக்கும் என்பீர்? – அதனை
நாங்கள் தான் மறந்துவிடுவோமே!

தமிழ் உறவுகளே!
அறிஞர் பிரேமலதா  அவர்கள்
‘பாழ் செய்யும் உட்பகை’ என்ற தலைப்பில்
நாளைய தமிழை ஆய்வு செய்துள்ளார் – அதனை
மறக்காமல் படித்திட – கீழ்வரும்
இணைப்பைச் சொடுக்கிப் பாருங்களேன்!
http://vjpremalatha.blogspot.com/2014/11/blog-post.html

நற்றமிழ் பற்றிய உங்கள் கருத்தென்ன?

“நற்றமிழ் பற்றிய உங்கள் கருத்தென்ன?” என்ற கேள்வியை உங்கள் முன் வைக்க எண்ணும் போதே எனக்கு அச்சம் (பயம்) தோன்றிற்று. ஒருவாறு என்னைச் சரிப்படுத்தி, கேள்வியை உங்கள் முன் வைத்தாச்சு.

உலகெங்கும் தூயதமிழைப் பரப்பிப் பேணுவோம் என இவ்வலைப் பூவைத் தொடங்கினேன். தூயதமிழ் என்றால் தூய்மையான அல்லது சுத்தமான தமிழ் எனலாம். அப்படியாயின் நல்ல தமிழ் என்றால் என்ன? நன்மை தரும் தமிழ் எனலாம்.

நாம் பேசும் தமிழில் இருபத்தி நான்கு மொழிகளுக்கு மேல் காணப்படுகிறதாம். அப்படியாயின், நாம் பேசும் மொழி நல் + தமிழ் = நற்றமிழ் என்று கூற முடியாதே! அப்ப என்ன தான் பண்ணலாம்?

இருபத்தி நான்கு மொழிகளையும் நம்ம தமிழில் இருந்து அகற்ற வேண்டியது தானே! அது தானே முடியாதே! ஆமாம், நம்மாளுகளுக்கு “எது தமிழ்? எது பிறமொழி?” என்று தெரியாத வேளை நல்ல தமிழ்/ நற்றமிழ் எதுவென்றும் புரியாதே!

நல்ல தமிழ்/ நற்றமிழ் எதுவென விவரிக்கும் நூல்களை எனது மின்னூல் களஞ்சியத்திலிருந்து நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். அதற்கு முன் கீழே நற்றமிழ் பற்றிய சிலரது கருத்தைப் பார்க்கவும்.

நற்றமிழ் பற்றி விக்கிப்பீடியா சொல்வதைப் படியுங்க…
இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம். நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது.
மேலும் படிக்க: http://ta.wikipedia.org/s/sqi

நற்றமிழ் பற்றி விக்சனரி அகரமுதலி கூறும் பொருளென்ன…
நற்றமிழ்(பெ) : வேற்று மொழிச் சொற்கள் கலக்காமல் இருக்கும் தமிழ்.
மேலும் படிக்க: http://ta.wiktionary.org/s/3js

என்னை விடப் பெரிய அறிவாளிகள் நீங்கள், எனது உலகெங்கும் தூயதமிழைப் பரப்பிப் பேணும் பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தங்கள் கருத்துக்களைப் பகிரலாம். எனவே தான் “நற்றமிழ் பற்றிய உங்கள் கருத்தென்ன?” என்ற கேள்வியை முன்வைக்கிறேன்.