கோணல்

https://groups.google.com/forum/#!topic/mhcd/-bWyYKF1nEY

இத்தனை நாளும் எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிய “முதற் கோணல் முற்றும் கோணல்” என்று மாற்றார் சொல்வதைக் கேட்டுப் பின்வாங்குவது சரியா?

 

Advertisements

தீக்குளிக்கப் போறவங்களுக்கு

தீக்குளிப்பு, தமிழரின் எண்ணிக்கையைக் குறைக்குமே தவிர தீர்வைப் பெற்றுத் தராதே! தீக்குளித்தல் நிகழாது கவன ஈர்ப்புச் செய்ய மாற்றுவழி கூறுங்கள்? உங்கள் மதியுரை தீக்குளிக்க உள்ளோருக்கு உதவுமா;?

Continue reading

கோணல்

https://groups.google.com/forum/#!topic/mhcd/-bWyYKF1nEY

இத்தனை நாளும் எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிய “முதற் கோணல் முற்றும் கோணல்” என்று மாற்றார் சொல்வதைக் கேட்டுப் பின்வாங்குவது சரியா?

மாதகலூர் முரல் மீன் சுவையில…

https://www.facebook.com/mathagal1net/media_set?set=a.190851131402670.1073741913.100014333532099&type=3&pnref=story

எனது ஊர்க் கடலில் இரவு வேளை புரட்டாதி மாதத்தில தேறை மீனும்
மாசி மாதத்தில முரல் மீனும் பிடிப்பார்கள். அதனை வேண்டி வந்து பால் சொதி வைத்து பிட்டோ இடியப்பமோ சோறோ ஏதாவது ஒன்றோட சாப்பிடுவோம். அந்த நினைவோடு தகவலும் படங்களும் என் உள்ளத்தில் எழுதத் தூண்டியது. அதன் விளைவு “மாதகலூர் முரல் மீன் சுவையில…” என்ற தலைப்பில என்னை எழுதவைத்தது. அதனை முகநூலில (Facebook) ஏற்கனவே பகிர்ந்துவிட்டேன். எனது வலைப்பூ வாசகர்களுக்காக அதனைக் கீழே தருகின்றேன்.

வாங்க… வாங்க…
மாதகலூரிற்கு வாங்க…
மாசி பனி மூசிப் பெய்ய
ஆணும் பெண்ணும்
ஆளை ஆள் அணைத்த படி
ஏட்டிக்குப் போட்டியாக ஓடிப் போறாங்க…
மாதகல்துறை, சம்பில்துறை, குசுமந்துறை
எங்கு பார்த்தாலும் எட்டிப் பார்த்தாலும்
முரல் மீனுக்கு முண்டியடிக்கிறாங்க…

முழுவதும் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2017/03/blog-post.html

தமிழை வாழ வைக்க (உங்கள் பதில் என்ன?)

உலகத் தமிழ் உறவுகளே! தாய்த் தமிழில் இருபத்தைந்திற்கு மேற்பட்ட பிறமொழிகள் கலந்திருப்பதை அறிவீரா? உலகெங்கும் உலா வரும் தமிழ் உறவுகளே! தமிழ் + ஆங்கிலம் = தமிழாங்கிலம் அல்லது தமிழ் + இங்கிலிசு = தமிங்கிலிசு பேசும் தமிழரே அதிகம். இப்படிப் போனால் இனி மெல்லத் தமிழ் சாகுமென்பேன்!

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2017/02/blog-post_11.html

2017 தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்
பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றி கூறும்
உழவர் பெருநாள் மட்டுமல்ல
தமிழுக்கு ஆண்டின் முதல் நாள்
தமிழர் புத்தாண்டு நாள் – இந்த
நல்ல நாளில் நன்மைகள் வந்து சேர
வாழ்வில் பதினாறு செல்வங்களையும் பெற்று
நாம் எல்லோரும் நற்செயலில் இறங்கி
வெற்றிகளை பெற்று வாழ வாழ்த்துகிறேன்!

எனது வலைப்பூக்கள், மக்களாய (சமூக) வலையமைப்புகள், உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எனப் வழிகளிலும் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி நட்பைப் பேணும் உறவுகள் எல்லோருக்கும் எனது போகிப்பொங்கல், தைப்பொங்கல், பட்டிப் (மாட்டுப்) பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்!

https://seebooks4u.blogspot.com/
http://fliphtml5.com/homepage/insb
http://www.ypvnpubs.com/
http://www.yarlsoft.com/