ஒரு கதையெழுத இரு பதிவைப் படியுங்க…

பா / கவிதை புனைவது என்பது பலருக்கு இயலாமையால் சிறுகதை புனைகிறார்கள் என எவரும் எண்ணிவிடக்கூடாது. பாவில் / கவிதையில் வெளிப்படுத்த முடியாத பலதை சிறுகதையில் வெளிப்படுத்த முடியும் என்பதை எவரறிவார். பா / கவிதை புனையும் போது இலக்கண வரம்பை மீற இயலாமலிருக்கலாம். ஆயினும், சிறுகதை புனையும் போது இலக்கண வரம்பை மீறியும் மணித்துளியில் நிகழ்ந்த வாழ்க்கையை வெளிப்படுத்த முடியும்.

இப்ப தான் இலங்கையிலும் சரி, இந்திய-தமிழ்நாட்டிலும் சரி மின்வெட்டுக்குத் தட்டுப்பாடில்லையே! அப்ப நீங்கள் மின்வெட்டின் போது முகங்கொடுத்த வாழ்க்கையை அப்படியே எழுதிப்பாருங்கள். அது சிறுகதையாக மின்னுவதை உங்களால் உணர முடியுமே! ஆயினும், சிறுகதை புனையும் போது இலக்கண வரம்புக்கு உட்பட்டுப் புனைவதே வெற்றியைத் தரும். சிறுகதைக்கான (பா / கவிதை இற்கானதும் கூட) இலக்கண வரம்பையறியப் பலரது படைப்புகளை வாசித்தறிதல் என்பது ஒவ்வோர் எழுத்தாளரது முயற்சியாக இருக்க வேண்டும்.

இவ்வெண்ணத்தைக் கருத்திற்கொண்டு அறிஞர் முரளிதரன் அவர்களின் மூங்கில்காற்று வலைப்பூவில் என் கண்ணுக்கெட்டிய இரண்டு பதிவுளை சிறுகதை புனைய விரும்பும் எல்லோருக்கும் பகிருகிறேன். கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் பயன்பெறுங்கள். சிறுகதை புனையக் கற்றுக்கொண்டால் சிறுகதை ஊடாகத் தூய தமிழைப் பேணத் தவறாதீர்கள்.

எப்படி கதை எழுதுவது? சுஜாதா+ரா.கி.ரா டிப்ஸ்
http://www.tnmurali.com/2015/02/sujatha-tips-to-write-stories.html

சுஜாதா சொல்கிறார் – சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?
http://www.tnmurali.com/2013/07/sujatha-definition-about-shortstory.html

Advertisements

சிறுகதை எழுதுவது எப்படி – தி.ஜானகிராமன்

2015 தைப்பொங்கல் நாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டியில் பங்கெடுப்போருக்காக இப்பதிவைப் பகிருகிறேன். போட்டி பற்றியறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html

சிறுகதை எழுதுவது எப்படி எனப் பல அறிஞர்களின் பதிவைத் திரட்டி மின்நூலாக்கி எனது களஞ்சியத்தில் பதிவு செய்துள்ளேன். எனது மின்நூல் பக்கம் சென்று தமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் என்பதற்கான இணைப்பைச் சொடுக்கிப் படைப்பாளியாக முயல்வோருக்கு என்ற பகுதியில் பார்வையிடலாம்.

போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!

உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணத் தமிழ் சார்ந்த போட்டிகள் நடாத்துவது தேவை. தமிழறிவை வெளிப்படுத்தப் போட்டிகள் ஓர் ஊடகமாக அமையும். தமிழனாகப் பிறந்து தமிழைப் பேச, எழுத, வாசிக்க முடியாதோர் எல்லோரையும் தமிழைப் பேச, எழுத, வாசிக்கத் தூண்ட வேண்டும். அதற்கு இப்போட்டிகள் உதவவேண்டும். அதாவது, பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கிப் போட்டியில் பங்கெடுப்போரைப் பெருக்கவேண்டும். இதனை மேற்கொள்ள இவ்வாறான போட்டி நடாத்துவோர் எல்லோருடனும் நன்கொடையாளர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

போட்டியென்பது திரட்டிய அறிவில் இருந்து சுழியோடிப் பொறுக்கிய அறிவை அரங்கேற்றுவதே ஆகும். தேர்வுகள் என்பதும் அவ்வாறே! நாம் படித்தோம் என்பதை விட, எத்தனை தேர்வுகள் எழுதினோம்; எத்தனை போட்டிகளில் கலந்துகொண்டோம் என்பதே பெரிது. தேர்வுகளில் குறிப்பிடத்தக்க புள்ளிகள் எடுத்தே ஆகவேண்டும். ஆயினும், போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பது முக்கியமல்ல; வெற்றி பெற முயற்சி எடுத்தே ஆகவேண்டும். அதேவேளை போட்டிகளில் கலந்துகொண்டு தோல்வியைக் கண்டாலும் வெற்றி பெறத் தேவையானதைக் கற்றுக்கொள்கிறோம். அடுத்த வெற்றிக்கு முந்தைய தோல்வியே வழிகாட்டி!

உலகெங்கும் அறிவாளிகள் தங்கள் கல்வித் திறமையை வெளியிட வலைப்பூக்களை (Blogs) நடாத்துகின்றனர். உலகெங்கும் வாழும் தமிழறிஞர்களும் தங்கள் தமிழறிவை வெளியிட வலைப்பூக்களை (Blogs) நடாத்த முன்வந்திருப்பது “இனி மெல்லத் தமிழ் சாகாது” என்பதையே உணர்த்தி நிற்கிறது. இந்நிலையில் இருந்து கொஞ்சம் முன்னேறிய நிலை தான் வலைப்பதிவர்களிடையே நாடாத்தப்படும் போட்டிகள்! இப்போட்டிகள் சிறந்த தமிழறிஞர்களை அடையாளப்படுத்துதோடு புதிய வலைப்பதிவர்களை உருவாக்கவும் உதவ வேண்டும். இதற்குப் போட்டியில் பங்கெடுப்போரின் எண்ணிக்கையே அடித்தளம் ஆகின்றது.

போட்டியில் பங்கெடுப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் தேர்வுகள், போட்டிகள் நாடாத்துவோரிடம் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணத் தேவையான வகையில் போட்டிகள் நடாத்த ஒத்துழைப்பை நாடலாம். நானறிந்த வகையில் கோபாலசுவாமி ஐயா நடாத்தும் சிறுகதை திறனாய்வுப் போட்டி, தம்பி ரூபன் அவர்கள் நடாத்தும் தமிழர் சிறப்பு நாள் போட்டிகள் ஆகியவை இடம்பெறுகின்றன. இவர்களை விட பிறரும் போட்டிகள் நடாத்தலாம். ஆயினும் போட்டிகள் நடாத்த உதவும் நன்கொடையாளர்களையும் நினைவூட்டுவோம். உண்மையில் போட்டியில் பங்கெடுப்போரின் எண்ணிக்கையே இவ்வாறானவர்களுக்கு நாம் வழங்கும் ஒத்துழைப்பாகும். எம்மால் முடியாவிட்டாலும் எமது உறவுகளையாவது போட்டியில் பங்கெடுக்கத் தூண்டுவோம்.

போட்டியென்று வந்துவிட்டால்
அடுப்படியில் உறங்கும் பூனையாகாதே
போட்டியென்று வந்துவிட்டால்
நானோ சிங்கமென்று பாடாதே
போட்டியென்று வந்துவிட்டால்
பாயும்புலியாக செயலில் இறங்கு
நன்றே வெற்றிகளை அள்ளிக் குவிக்கலாம்
இன்றே செயலில் இறங்கு தமிழா!

வலைப்பதிவர்களே! 2014 தீபாவளி நாளன்று மாபெரும் கவிதைப் போட்டி இடம்பெற இருக்கிறதாம். நீங்கள் எல்லோரும் அதில் பங்கு பற்ற முன்வரவேண்டும். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளுங்கள்.

தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

கதைகள் புனையலாம் வாருங்கள்!

 

முதலாம் பகுதி:

கடுகுக்கதை, சிறுகதை, குறும் தொடர்கதை, நெடும்கதை எனப் பல கதைகள் இருக்கின்றன. இவற்றில் நகைச்சுவை அதிகம் சேர்க்கப்பட்டிருந்தால் நகைச்சுவைக் கதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பாவால் எழுதப்படும் கதைகள் (கவிதைக் கதைகள்) பாக்கதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கதைகள் புனையும் போது தன்கூற்று, பிறர்கூற்று, மூன்று காலங்கள், குறியீடுகள் போன்ற தொடக்க இலக்கணம் போதும். பாப்புனைய எப்படி எண்ணமிடுகிறோமோ (கற்பனை செய்கிறோமோ) அது போல இதற்கும் தேவை. கதைகள் புனையும் போது தான் சொல்வதாகவோ தான் பார்த்ததைச் சொல்வதாகவோ இன்னொருவரிடம் கேட்டறிந்ததைச் சொல்வதாகவோ எழுதலாம்.

தேவைப்படும் போது கதையில் எடுத்துக்காட்டுக்களாக ”திருக்குறள் வரிகள், திரையிசைப் பாடல் வரிகள்” என எதையும் பாவிக்கலாம். ஆனால் அதனை எந்தக் குறள், எத்திரைப் பாடல், யார் எழுதியது என்பன சேர்க்கப்பட வேண்டும். ஆயினும் கதையென்பது ஒரு பரப்புரையாக (பிரச்சாரமாக) அமையக் கூடாது. நமது வழமையான வாழ்வின் சில மணித்துளி நிகழ்வுகளாக இருக்கும் போது தான் வாசகன் கதையை வாசிக்கும் போது மகிழ்வடைகின்றான். கதைக்குள்ளே உரையாடல்கள் வரலாம், ஆனால் நீண்டதாக இருக்கக் கூடாது.

கதைகளைப் புனையும் போது (யாவும்) முற்றிலும் கற்பனை, முற்றிலும் உண்மை, கற்பனை கலந்த உண்மை என முடிப்பது வழக்கம். முடிவில் கதையில் வரும் பெயர்கள், நிகழ்வுகள் யாவும் கதாசிரியரின் கற்பனை என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவ்வளவையும் கணக்கில் எடுத்தால் கதை புனைய முடியாதென நீங்கள் வெறுப்பு அடையாமல் கதை புனைவோம் வாருங்கள்.

எடுத்துக்காட்டு 01 :-

நல்ல நித்திரையில் என் கையால் தலைமாட்டில் கிடந்த மண்ணெண்ணை விளக்குத் தட்டுப்பட்டுட்டுது. கை குளிர்ந்த போது வௌ்ளம் வீட்டிற்குள் புகுந்துவிட்டதோ என எண்ணி, நான் எழும்பி தலையணைக்குள் கிடந்த தீப்பெட்டியைப் பற்ற வைத்து விளக்கைத் தேடுகையில் எண்ணெய் பற்றிக் கொண்டது. தீ பரவி என்னைத் துரத்த முன் நானோடி முற்றத்துக்கு வந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் தீ ஓலை வேய்ந்த மண் வீட்டை எரித்துச் சாம்பலாக்கி விட்டது. மண்ணெண்ணை விளக்கை பாதுகாப்பாக வைத்திருந்தால் இப்படி இழப்பு வந்திருக்காது என உணர்ந்தேன். என்றாலும் “காலம் கடந்து ஞானம் வந்தென்ன பயன்” என எண்ணி எனது வீட்டை அண்டை அயலுடன் சேர்ந்து புதிதாகக் கட்டி முடித்து விட்டேன்.

இக்கதையில் நான் பட்டறிந்ததை நானே சொல்லி முடித்திருக்கேன். உறங்கும் போதும் குழந்தைகள் இருக்குமிடத்திலும் மண்ணெண்ணை விளக்கைப் பாதுகாப்பாக வைக்க வேணும் என்பதே இக்கதையில் வரும் செய்தியாகும். இவ்வாறு உங்கள் வீட்டில் நிகழ்ந்த படிப்பினையைக் கதையாகப் புனைந்து பார்க்கலாம்.

எடுத்துக்காட்டு :- 02

இரவு 8 மணியிருக்கும் சாந்தி படித்துக்கொண்டிருக்கும் வேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. அந்நேரம் அவளது காலை உரசிய படி எலி ஒன்று ஓடியது. “ஜயோ! அம்மோய்!” என்று கத்தினாள் சாந்தி. அதைக் கேட்ட தாய் பதறியடித்துக் கொண்டு அவளது அறைக்கு ஓடினாள். அவ்வேளை தாய் கதவில் மோதி பலத்த அடி, செந்நீர் வெளியேற அட கடவுளே! என்னைக் காப்பற்று என்று ஒப்பாரி வைத்தாள்.

“கை மின் விளக்கைப் பிடியடா, கொம்மாவுக்கும் கொக்காவுக்கும் என்ன நடந்தது என்று பாரடா” எனத் தகப்பன் மகனை அதட்ட மின்சாரம் வந்து விட்டது. “மின்சாரம் இருந்தாலும் ஆளுக்காள் கை மின்விளக்கை வைச்சிருங்கோ என்று சொன்னால் கேட்கிறேல்ல; எலிக்குப் பொறி வையென்றால் அதுவும் செய்யுறேல்ல; தாயும் மோளும் ஒப்பாரி வைத்து ஊரே கூடி வந்து நிற்குது” என்று தகப்பன் பொரிந்து தள்ளிப்போட்டு வந்தவர்களுக்கு நடந்ததை விளக்கத் தொடக்கினார்.

தகப்பன் வாயாலே இக்கதையில் செய்தி தெரிவிக்கக்கூடியதாகவும் எதற்கும் படபடப்பின்றி அமைதியாகச் செயற்பட்டால் சாந்தியின் தாய்க்கு இவ்வாறு நிகழாதென்பதை வாசகன் ஊகிக்கக் கூடியதாகவும் எழுதியவர் தானே நேரில் கண்டதாகவும் புனையப்பட்டுள்ள இக்கதை போன்று நீங்களும் பார்த்த நிகழ்வொன்றைக் கதையாகப் புனைந்து பார்க்கலாம்.

எடுத்துக்காட்டு :- 03

நடைபேசி நட்புக்காரணமாக ராமன், சீதையின் பேச்சை நம்பி ஜந்து நட்சத்திர விடுதிக்குப் போயிருந்தானாம். மூக்கு முட்ட விழுங்கிப் போட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனராம். உணவு பரிமாறியவர் 1500 உரூபா கட்டணம் செலுத்துமாறு பணித்தராம்.

சீதையிடம் பணம் இல்லையாம் “அப்ப ஏன் இந்த விடுதிக்கு அழைத்தாய்” என ராமன் திட்டிப் போட்டு என்னட்டையும் காசு இல்லையே என்றானாம். “நீ அழைத்து நான் வந்தமையால் உன் தங்க நகையைக் கொடுத்துத் தப்புவோம்” என ராமனே சொன்னானாம். “நான் போட்டிருப்பது போலியாக மின்னும் நகை” என்றாளாம் சீதை.

காலம் கடந்தால் காவற்றுறை வந்துவிடுமென அஞ்சி ராமன் தன் மின்பண அட்டையைப் பாவித்துக் கட்டணத்தைச் செலுத்தினானாம். பிறகென்ன விடுதியை விட்டு வெளியேறிய இருவரும் பிரிந்தனராம். இன்று வரை இருவரும் சந்திக்காமல் இருப்பதாக ராமனின் மனைவி சூர்ப்பனகை, தனது மைத்துனி மண்டோதரிக்குச் சொல்லி முடித்தாள்.

உள்ளத்தைப் புண்படுத்தும் செயலால் அல்லது துக்கத்தால், நொந்த உள்ளத்தால் வெறுப்பு ஏற்படப் பிரிவு நிகழ்கின்றதைச் செய்தியாகவும்; மணமுடிக்க முன் ஈடுபட்ட தமது முந்தையச் செயற்பாடுகளை கணவன், மனைவி பகிர்ந்து கொள்வதால் மகிழ்வாக இருக்கலாம் என்பதை வாசகன் உணரவும் கணவனின் கதையை மனைவி மைத்துனிக்குச் சொல்வதாக இக்கதை புனையப்பட்டுள்ளது.

இம்மூன்று எடுத்துக்காட்டுக்களில் கதை புனையும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியுமென நம்புகிறேன். கடுகுக் கதையென்பது ஒன்று தொடக்கம் நான்கைந்து பக்கங்களில் எழுதலாம். சிறுகதை என்பது ஆறு தொடக்கம் பன்னிரண்டு பக்கங்களில் எழுதலாம். இவை வாழ்க்கையின் குறுகிய பகுதியையோ சிறு நிகழ்வையோ கதைக் கருவாகக் கொண்டிருக்கலாம்.

நெடும் தொடர்கதை என்பது கடுகுக்கதை, சிறுகதையிலிருந்து சற்று வேறுபடும். இதன் கதைக்கரு ஒரு தலைமுறைக் காலம் (25 ஆண்டுகள்) சார்ந்து இருக்கும். பெற்றோர் மணம் முடித்துப் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து காதலில் சிக்கி பெற்றோர் விருப்பமின்றி ஓடிப்போய் தனித்துக் குடும்பம் நடாத்துகின்ற வரையான காலப்பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

குறும் தொடர்கதை என்பது நெடும் தொடர்கதையை ஒத்திருக்கும். மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டில் பிள்ளைகள் காதலித்து பெற்றவர் விருப்பமின்றி ஓடிப்போய் திருமணம் செய்கின்ற காலப்பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். குறைந்தது ஜந்து தொடக்கம் பத்து ஆண்டு காலப்பகுதியில் நிகழ்ந்ததாகப் புனையலாம்.

கதைகள் புனைவதென்றால் இன்னும் எத்தனையோ இலக்கணங்கள், கோட்பாடுகள் தேடிப்படிக்கலாம். என் அறிவிற்கெட்டியவரை இத்தனையும் சுருங்கக்கூறியதைச் சிறு குறிப்பாகக் கருத்திற்கொண்டு நீங்களும் கதைகள் புனையலாம் என நம்புகின்றேன். மேலும் நாடகத் தொடர்கதை ஒன்றும் உள்ளது. எனது அடுத்த படைப்பான “நாடக, திரைக் கதைகள் புனையலாம் வாருங்கள்” என்ற படைப்பில் சேர்த்துக்கொள்வேன்.

இரண்டாம் பகுதி:

கதை எழுதப் புகுமுன்
http://wp.me/pTOfc-6T
மறக்காமல் இவ்விணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்

இலங்கைப் படைப்பாளிகளும் இலக்கியச் சூழலும்

வலைச்சரத்தில் (http://blogintamil.blogspot.com/2014/07/indhu-samuththiraththin-muththukkal.html) சிகரம் பாரதி (http://newsigaram.blogspot.com/2014/06/valaicharaththil-kalam-kaangiradhu-sigaram.html) ஆசிரியராக இருந்த வேளை தெரிவித்த கருத்துகளில் இருந்து சிலவற்றைப் பொறுக்கி அலச விரும்புகிறேன்.

“இலங்கையைப் பொறுத்த வரை மலையகத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உண்டு.” என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும், இந்திய வழித்தோன்றல் (வம்சாவளி), இலங்கை வழித்தோன்றல் (வம்சாவளி) என்ற வேறுபாட்டை நான் எதிர்க்கிறேன்.

“சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த உறவுகள் தான் இன்றைய இந்திய வம்சாவளி மக்கள் என குறிப்பிடப்படும் மலையகத் தமிழர்கள். தமிழகத்துடன் மிக நெருங்கிய தொப்புள்கொடி உறவைக் கொண்டது மலையகம்.” என்ற கருத்தை ஓரளவு ஏற்றுக்கொள்கிறேன். அதற்கான விளக்கத்தைக் கீழே தருகின்றேன்!

இலங்கை, இந்திய நாடுகள் ஒன்றாய்த் தமிழரின் நாடாய் இருந்தது. மேலும் ஆய்வு செய்தால் ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை இந்து சமுத்திரப் பக்கமாய் குமரிக்கண்டம் என்ற இடமும் தமிழருடையதே! கடற்கோள் வந்து எல்லாவற்றையும் உடைத்துவிட்டது. இந்தியாவில் கிந்திக்காரரும் ஈழத்தில் சிங்களவரும் சோழராட்சியில் நிகழ்ந்த ஆரியப் படையெடுப்பின் பின் நுழைந்தவர்கள்.

“தமிழகத்துடன் மிக நெருங்கிய தொப்புள் கொடி உறவைக் கொண்டது மலையகம்.” என்பது பின்னைய வரலாற்றுச் செய்தி. ஆயினும் “இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே” என்ற தமிழரும் தமிழகத்துடனான தொப்புள் கொடி உறவைக் கொண்டவர்கள் என்பது முன்னைய வரலாற்றுச் செய்தி. எப்படியோ மலையகத்தாரும் ஈழவரும் இலங்கை வாழ் மக்களே! எனவே, நாம் தமிழரென்று ஒற்றுமையாய் நிற்போம்.

எனது பாட்டனுக்கு சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை மடம் சொந்தமாக இருந்தது. சிதம்பரக் கோவிலுக்கான வருவாய்களை இலங்கையிலிருந்து திரட்டி வழங்கும் பணியையே செய்து வந்தார். அப்படியாயின் நானும் ஒரு இந்தியனே! எனவே தான் என்னவோ இந்தியத் தமிழரையும் ஈழத் தமிழரையும் தொப்புள் கொடி உறவுகள் என்கிறோம்.

ஐம்பதாண்டு காலப் போர் ஈழவர் துயரங்களை உலகறியச் செய்தளவுக்கு மலையகத்தார் உண்மைகள் (லயன் வாழ்க்கை) உலகறியச் செய்யவில்லை என்பதில் நானும் கவலை அடைகின்றேன். ஈழவர், மலையகத்தார் பிரிவு புவியியல் அடிப்படையில் அமைந்ததை சிகரம் பாரதி அவர்களும் தெரிவித்திருந்தார். ஆயினும், மலையக மக்கள் இலங்கையின் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள்.

எழுத்தை ஆள்பவருக்கு அதாவது எழுத்தாளருக்கு நாடு, இனம், மதம், சாதி, மொழி எதுவும் கிடையாது. இலங்கையின் வடகிழக்குப் படைப்பாளிகளும் மலையகப் படைப்பாளிகளும் சம அளவிலேயே உலகறியச் செய்யப்பட்டுள்ளனர். வீரகேசரி பத்திரிகையிலும் சம அளவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். படைப்பாளிகளுக்குள் ஏற்றத் தாழ்வுகள், வேறுபாடுகள் இருக்கக்கூடாது. அதனை எல்லோரும் இணைந்து சீர்செய்ய வேண்டும்.

மலையகம், வடக்கு, கிழக்கு, கொழும்புத் தமிழரென இலங்கைப் படைப்பாளிகள் இருக்கின்றனர். அவர்களது இலக்கியச் சூழல் என்பது அவர்கள் வாழுமிடங்களே! அதனடிப்படையிலேயே இலங்கை இலக்கியங்கள் காணப்படுகின்றன. அதாவது, அவ்வவ் ஊர்ப் பேச்சு வழக்கிலும் பண்பாட்டிலும் வாழ்விடச் சூழலையும் உள்வாங்கி இருக்கும்.

மலையகப் படைப்பாளிகளை, மலையகத்தார் உண்மைகளை எனது தளங்களிலும் பகிர விரும்புகிறேன். மலையகம், வடகிழக்கு, கொழும்புத் தமிழரென எமக்குள் பாகுபாடின்றிப் பேண வேண்டும். எனது நோக்கம் தமிழர் என்ற அடையாளத்தில் உலகெங்கிலும் வாழும் தமிழரை ஒன்றிணைப்பதே! ஒற்றுமை பேணி ஒன்றுபடுவோம் என்பதற்காக இவ்வுண்மையைப் பகிர்ந்தேன். இவ்வாறான ஆய்வுகளில் இறங்கியுமுள்ளேன்.

 

நகைச்சுவை எழுதுவோருக்கு ஜோக்காளி தளம் உதவுமே!

உலகெங்கும் தூய தமிழ் பேண உதவும் வகையில் எழுதுவோருக்கான வழிகாட்டல் பதிவுகளை எழுதி வருகிறேன். அந்த வகையில் கீழ்வரும்
பதிவுகளைப் படித்திருப்பீர்கள்.

நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்
http://wp.me/pTOfc-66

அறிஞர்களின் நகைச்சுவையை அறிவோமா?
http://wp.me/pTOfc-68

ஆயினும், எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் http://yppubs.blogspot.com/ ஊடாக நகைச்சுவைக்கெனத் தனி வலைப்பூவாக உலாவும் ஜோக்காளி தளத்தை அறிமுகம் செய்திருக்கிறேன். ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது எவ்வளவு சிக்கல் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜோக்காளி தள அறிஞர் எப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நகைச்சுவை எழுதுகிறாரோ எனக்குத் தெரியாது. ஆனால், நாளுக்கொரு கருவோடு எழுதிய நல்ல நகைச்சுவைகளில் சில உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன். அவை உங்களுக்கு நல்ல பயிற்சிகளாக இருக்குமென நம்புகிறேன். சரி! கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்.

மூளைக்கு வேலை தரும் வலைப்பூ
http://yppubs.blogspot.com/2014/07/blog-post_6.html

 

நீங்கள் எழுத்தாளரா? அப்ப இதைப் படியுங்க…

விகடன் மேடை – நாஞ்சில்நாடன் பதில்கள் பகுதியை நீங்கள் படித்திருப்பீர்கள். கடந்த பதிவில் ”ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?” என்று அலசப்பட்டிருக்கிறது. இப்பதிவில் மூன்று கேள்வி-பதில் இடம்பெற்றிருக்கிறது. அவை புதிய எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய வழிகாட்டல்களே! இதனை எமது வாசகருடன் பகிருவதில் மகிழ்வடைகிறேன்!
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பாருங்கள்!
http://wp.me/pYTZZ-2Hh