தமிழா! எழுச்சி கொள்! – பாரதிதாசன் + காசிஆனந்தன்

எது வடமொழி எது தமிழ்மொழி என்றறியாத நம்மாளுங்க பெருகும் வேளை, பாவலர் பாரதிதாசனின் வடமொழி (சமஸ்கிருதம்) எதிர்ப்பு வரிகளாகக் கீழ்வரும் பாடலைப் பகிர விரும்புகிறேன். அவரிட்ட பாடலின் தலைப்பு ‘எழுச்சி’. வடமொழியென்ன பிறமொழியென்ன நம்ம தமிழிற்குள் சேர்க்காது (தேவைப்படின் அவற்றை அடைப்புக்குள் அடைத்துப் பாவிக்கலாம்) தமிழையே முதன்மைப்படுத்தி தூய தமிழாக உலகெங்கும் பரப்பிப் பேணுவோமென நம்மாளுங்க எழுச்சி கொள்ள வேண்டும்.

எழுச்சி

https://www.youtube.com/watch?v=XY6–kB-gto&index=2&list=FL4GrenMOzLV1IZIRc3KB0CQ

தமிழனே இது கேளாய்-உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்.

கமழும் உன் தமிழனை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம் உரிமைதனைக் கடித்த பாம்பு
தமிழனே இது கேளாய்…

தனித்தியங் கும் தன்மை தமிழினுக் குண்டு
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு
தமிழனே இது கேளாய்…

வஞ்சகர், வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; அந்நாள் அவரஞ்சி விழித்தார்
தமிழனே இது கேளாய்…

எது தமிழ்மொழி எது பிறமொழி என்றறியாத நம்மாளுங்க பெருகும் வேளை, பாவலர் காசிஆனந்தனின் பிறமொழி எதிர்ப்பு வரிகளாகக் கீழ்வரும் பாடலைப் பகிர விரும்புகிறேன். அவரிட்ட பாடலின் தலைப்பு ‘தமிழா! நீ பேசுவது தமிழா?’. பிறமொழி எதுவானாலும் நம்ம தமிழிற்குள் சேர்க்காது (தேவைப்படின் அவற்றை அடைப்புக்குள் அடைத்துப் பாவிக்கலாம்) தமிழையே முதன்மைப்படுத்தி தூய தமிழாக உலகெங்கும் பரப்பிப் பேணுவோமென நம்மாளுங்க எழுச்சி கொள்ள வேண்டும்.

தமிழா! நீ பேசுவது தமிழா?

https://www.youtube.com/watch?v=xCmxJCdSPuo&index=1&list=FL4GrenMOzLV1IZIRc3KB0CQ

தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா! நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால் ‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை ‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய்…

தமிழா! நீபேசுவது தமிழா?

உறவை ‘லவ்’ என்றாய் உதவாத சேர்க்கை…
‘ஒய்ப்’ என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…
இரவை ‘நைட்’ என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய் அறுத்தெறி நாக்கை…

தமிழா!நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் ‘லெப்ட்டா? ரைட்டா?
‘வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி ‘பைட்டா?
‘துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை ‘பிரண்டு’ என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் ‘சார்’ என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில ‘வாக்கிங் ஸ்டிக்கா’
பாட்டியின் உதட்டிலே ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின் தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா!

முடிவாக:

பாட்டு வரி படித்து – அதனை
கேட்டு நீ புரிந்து – என்றும்
ஏட்டில் நீ எழுது – நல்ல
தமிழ் உலகெங்கும் வாழ!

ஆம்!, உண்மையில் இந்தப் பாடல்களைப் பகிருவதன் மூலம் நம்மாளுங்க உள்ளத்தில எள்ளளவேனும் மாற்றம் வந்து பிறமொழி எதுவானாலும் நம்ம தமிழிற்குள் சேர்க்காது தமிழையே முதன்மைப்படுத்தி தூய தமிழாக உலகெங்கும் பரப்பிப் பேணவே!
ஒரு பதிவில் பிறமொழி வரவேண்டிய தேவை இருப்பின் அவற்றை அடைப்புக்குள் அடைத்துப் பாவிக்கலாம். அதாவது, வணக்கம் (Welcome) அல்லது நன்றி (Thanks) என்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனது அன்பு நிறைந்த பதிவர்கள் எல்லோரும் முன்மாதிரியாக; நாம் பதிவில் பிறமொழிகள் வரவேண்டிய தேவை இருப்பின் எடுத்துக்காட்டாக நகைச்சுவை (தமாஸ்), குடிநீர் (Water)
என்றவாறு பயன்படுத்தி வெளியிட முன்வாருங்கள். இவ்வாறு முன்மாதிரியாக வெளியிடும் பதிவர்கள் எல்லோரும் இணைந்து உலகெங்கும் தூய தமிழ் பரப்பிப் பேணும் சங்கம் அமைத்துக்கொள்ளலாம்.

Advertisements

தூது பற்றி ஏதாவது சொல்லலாம்

கா… காவென… கரைந்த வண்ணம்
காற்றிலே ஒற்றுமையை உரைத்த வண்ணம்
ஊருக்கு ஊர் தூது போகும் காகமே – உனக்கு
இதை யாரு கற்றுக் கொடுத்தார்!

எனக்கும் இது பற்றித் தெரியாது. ஆயினும் தூது பற்றி ஏதாவது சொல்லலாம் என இப்பதிவை எழுதுகிறேன்.

“மேகத்த தூது விட்டா
தெச மாறிப் போகுமோன்னு
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
சொல்லி விட்ட சேதியெல்லாம்
எப்ப வந்து தரப்போற
எப்ப வந்து தரப்போற” என்றவாறு
‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற படத்தில் இசையரசி பி.சுசீலா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடிய பாவலர் வைரமுத்து எழுதிய ‘ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த’ என்ற தூதுப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். அதன் பின், எனது கருத்துக்குப் போகலாம்.

மாறாத அன்புடன் அறிஞர் மணவை ஜேம்ஸ் அவர்கள் மறக்கமுடியாத ஒரு பதிவைத் தந்திருக்கிறார் என்றால் முழுக்க முழுக்கப் பொய். அவரது பதிவை ஒவ்வொரு தமிழ் ஆசிரியரும் உள்வாங்கி, தமது மாணவர்களுக்குப் பொறுப்புணர்வோடு பகிரவேண்டிய பெறுமதி மிக்க பதிவு என்பேன்.

அதாவது, தூது இலக்கியம் மற்றும் தூது நூல்கள் பற்றி உணர்த்தச் சிறப்பாக முயற்சி எடுத்திருக்கிறார். அதிலும் அன்றைய பாவலர், இன்றைய பாவலர் கையாண்ட தூது இலக்கியச் சான்றுகளை முன்வைத்து தூது நூல்களை படிக்க விரும்ப (ஆசை) வைக்க முயன்றிருக்கிறார்.

சங்க கால, சங்கம் மருவிய கால இலக்கிய நூல்களை நம்மாளுகள் விரும்பிப் (ஆசையுடன்) படிக்க வைக்க அறிஞர் மணவை ஜேம்ஸ் அவர்கள் கையாண்ட நுட்பத்துடன் பதிவுகளை வெளியிடவேண்டி இருக்கிறது. இல்லையேல் இன்றைய இளசுகளின் உள்ளத்தில் நல்ல இலக்கிய அறிவு இல்லாமல் போய்விடலாம். இதனால் உண்மையான தமிழறிவு கிட்டாமல் போகலாம்.

எனவே தான் அறிஞர் மணவை ஜேம்ஸ் அவர்களின் பதிவைப் பகிருவதன் மூலம் இக்குறைகளைச் சீராக்க வழிகிட்டுமென நம்புகின்றேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அவரது பதிவைப் படித்த பின் பலருடன் பகிர்ந்து நம்மவர் தமிழறிவைப் பெருக்க முன்வாருங்கள்.
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/05/blog-post_98.html

தமிழின் தொன்மை பற்றித் தேடிய வேளை…

நான், எனது தளத்தில் தமிழின் தொன்மை பற்றி வெளிப்படுத்தலாமென கூகிழ் தேடுபொறியில் சுழியோடினேன். அவ்வேளை நான்கு வலைப்பூக்கள் என் கண்ணில் சிக்கின. அவற்றை உங்களுடன் பகிர்ந்தால், நீங்களும் அவற்றை உலகெங்கும் பரப்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. சரி, எனது தேடலில் சிக்கிய முக்கிய கருத்துகளின் அடிப்படையில் அவ்வலைப்பூக்களை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

“உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.” என்றும்

“திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே. – பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்.” என்றும்

“தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,
“ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”

“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்று புகழ்கின்றது.

தமிழ் விடுதூது,
“ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.” என்றும்

“ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.” என்றும்

“தமிழ்மொழியின் சிறப்புகள்” என்ற தலைப்பில் அறிஞர் தமிழ்மாறன் அவர்கள் ‘வேய்ங்குழல்’ என்ற வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனை முழுமையாகப் படிக்கவும்.
http://nyanabarati.blogspot.com/2009/03/blog-post_03.html

“தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல்லுகிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். முதலில் பிறந்த மொழி தமிழ். அதனால்தான் தமிழ் அழிந்துபோகாமல் இருக்கிறது. தமிழ் மரபியல் கொண்ட மொழி. தமிழ் வழிவழியாக இளமையோடு வழங்கி வருகிறது. தமிழ் எந்தக் காலத்தும் அழியாது தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுபவர்கள் தானாகவே அழிந்து போவார்கள்.
இயற்கையிலேயே பிறந்து வளர்ந்தது தமிழ். ஆதலால் இயற்கையை யாராலும் அழிக்க முடியாது. ஆகவே தமிழையும் அழிக்க முடியாது என்று மறைமலை அடிகள் தமிழ்ப் பற்றித் தரும் கருத்தை அறியமுடிகின்றது.” என்றும்

“செந்தமிழ் இலக்கணப் பாகுபாடும் மொழியின் தொன்மைக்குச் சான்றாகும். ஒரு மொழியில் இலக்கியங்கள் தோன்றிய பல ஆண்டுகளுக்குப் பிறகே அம்மொழியில் இலக்கணம் தோன்றியது எனக் கூறுவதற்கேற்ப தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்திருக்கிற முதல் நூலே இலக்கண நூலாகிய தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் தோன்றுவதற்குக் காரணமாய் இருந்த இலக்கியங்களெல்லாம் கடலலைகளுக்கு இரையாகிவிட்டன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களும் தொன்மைக் காலத்தே நம் மொழியில் தோன்றித் துலங்கின என்பதும் அறியமுடிகிறது.” என்றும்

“தமிழர்கள் தொன்மையுடையவர்கள் என்பதால் தமிழ் மொழியும் தொன்மையுடையதாகத்தான் இருக்க வேண்டும். தமிழ் மொழி வரலாற்றிற்கு எட்டாத ஆதிகாலத்தே தோன்றிய மொழியாகும். இம்மொழியின் தோற்றம் தெரியாத காரணத்தால் இது சிவபெருமானால் அகத்திய முனிவருக்குக் கற்பிக்கப் பெற்றது என்றும், ஏறத்தாழ கி.மு. 3000 ஆண்டு காலத்திற்கு முன்பே இம்மொழி உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்ந்தது என்ற கருத்தும் உண்டு. இம்மொழி இலக்கிய இலக்கணங்களைத் தன்னகத்தே கொண்டு சிறப்புற விளங்கியும் வருவதை அறிந்துகொள்ள முடிகின்றது.” என்றும்

“தமிழின் தொன்மையும் செவ்விலக்கியங்களும் – முனைவர் கு. ஏஞ்சல்கவிதா” என்ற தலைப்பில் அறிஞர் த.செந்தில்குமார் அவர்கள் ‘செம்மொழி’ என்ற வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனை முழுமையாகப் படிக்கவும்.
http://www.chemmozhi.net/2012/10/blog-post_9.html

“ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம்பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில் வருகிறது. முதலில் அடையாளம் காணப்படுவது செம்மொழி இலக்கியம். அவ்விலக்கியத்தைக் கொண்ட மொழி செம்மொழி எனப்படுகிறது.

ஒரு மொழி செம்மொழித் தன்மை கொண்டது என்பது அம்மொழியின்
1. தொன்மை (Antiquity)
2. ஒத்திசைவு (Harmony)
3. தெளிவு (Clarity)
4. தன்னடக்கம் (Restraint)
5. கண்ணியம் (Serenity)
6. இலட்சியம் (Idealism)
7. பொதுமை (Universality)
8. பகுத்தறிவு (Reason)
9. ஒழுங்கு (Order)
10. கண்ணோட்டம் (Humanism)
போன்ற கூறுபாடுகளின் தொகுப்பாக கருதப்படுகிறது.

இன்றைய உலகச் செம்மொழிகளாகக் கருதப்படுவன
1. கிரேக்கம் (Greek)
2. இலத்தீன் (Latin)
3. அரேபியம் (Arabic)
4. சீனம் (China)
5. ஹீப்ரு (Hebrew)
6. பாரசீகம் (Persian)
7. சமஸ்கிருதம் (Sanskrit)
8. தமிழ் (Tamil)
போன்ற மொழிகளாகும்.” என்று

“செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகளும்” என்ற தலைப்பில் அறிஞர் கோ.புண்ணியமூர்த்தி அவர்கள் ‘முத்துக்கமலம்’ என்ற வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனை முழுமையாகப் படிக்கவும்.
http://www.muthukamalam.com/essay/general/p32.html

“3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் ‘தொல்காப்பியம்’ ஒன்றே. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றி யிருக்கின்றன. இவ்வுண்மையை ‘தோலென மொழிப தொன் மொழிப்புலவர்’ என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.

3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப்பெறுகிற நூல்களில் ‘அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுவோரும் உண்டு.

தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும், இது நடந்த காலம் 3000ம், 5000ம், 9000ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.

மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும் அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர்.

தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்? அதற்கு முன்னே உரைநடை தோன் றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்? அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதேனும் கூற வேண்டுமானால் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.” என்று

“தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே…!” என்ற தலைப்பில் ‘பட்டதும் சுட்டதும்’ என்ற வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனை முழுமையாகப் படிக்கவும்.
http://paddathumsuddathum.blogspot.com/2013/07/blog-post_9062.html

மேற்படி நான்கு வலைப்பூக்களில் நான் பொறுக்கிய சிறு குறிப்புகளை கருத்திற்கொண்டு அவ்வவ் வலைப்பூக்களிற்குச் சென்று தமிழின் தொன்மை பற்றி அறிய முன்வாருங்கள். மேற்படி நான்கு அறிஞர்களைப் போல இன்னும் பலர் தமிழின் தொன்மை பற்றி எழுதியிருக்கலாம். அவர்களது பதிவுகளையும் நாம் அறிமுகம் செய்தால் பலருக்கு நன்மை கிட்டுமென நம்புகின்றேன்.

தமிழில் ஓரெழுத்து ஒரு சொல்

என் இனிய உறவுகளே! ஓரெழுத்துக் கூட ஒரு சொல்லாகப் பொருள் தரும் சூழ்நிலை தமிழில் உண்டு. அதனை அன்றைய மரபுக் கவிதைகளில் கையாளப்பட்டிருக்கிறது. இன்றைய நம்மாளுகள் அதனைப் புரிந்துகொள்ள உதவுமென தினமணி.கொம்/சிறப்பு/கல்விமணி பகுதியில் வெளியான பதிவை அப்படியே படியெடுத்துத் தங்களுடன் பகிருகிறேன். இப்பதிவு ஒவ்வொருவரது தமிழறிவைப் பெருக்க உதவுமென நம்புகிறேன்.

நோக்கம்: தமிழ்நாட்டு டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுக்கான அரங்கம்

பதிவிற்கான உரிமை: தினமணி.கொம்/சிறப்பு/கல்விமணி

பதிவிற்கான இணைப்பு: http://www.dinamani.com/specials/kalvimani/2014/06/19/டிஎன்பிஎஸ்சி-தேர்வுக்கான-அ/article2288598.ece

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: ஒரேழுத்து ஒரு மொழி
(By Venkatesan Sr, First Published : 19 June 2014 01:56 PM IST)

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. இவைத்தவிர மேலும் சில எழுத்துக்களும் தரப்பட்டுள்ளன. தெரிந்து தெளிவு பெறுங்கள்.

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.

உதாரணமாக தை.. இந்த “தை” என்ற எழுத்தானது தமிழ் மாதங்களில் வரும் மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து “தைத்தல்” “பொருத்துதல்” என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்

அ – சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா

ஆ – பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

இ – சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.

ஈ – பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு.

உ – சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்

ஊ – இறைச்சி, உணவு, ஊன், தசை

எ – வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்

ஏ – அம்பு, உயர்ச்சிமிகுதி

ஐ – அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு

ஒ – மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா.

ஔ – பூமி, ஆனந்தம்

க – வியங்கோள் விகுதி

கா – காத்தல், சோலை

கி – இரைச்சல் ஒலி

கு – குவளயம்

கூ – பூமி, கூவுதல், உலகம்

கை – உறுப்பு, கரம்

கோ – அரசன், தந்தை, இறைவன்

கௌ – கொள்ளு, தீங்கு

சா – இறத்தல், சாக்காடு, மரணம், பேய், சாதல்

சீ – லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல், திருமகள்

சு – விரட்டுதல், சுகம், மங்கலம்

சே – காலை, எருது, அழிஞ்சில் மரம்

சை – அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்

சோ – மதில், அரண்

ஞா – பொருத்து, கட்டு

தா – கொடு, கேட்பது

தீ – நெருப்பு , தீமை

து – உண் கெடு, பிரிவு, உணவு, பறவை இறகு

தூ – வெண்மை, தூய்மை

தே – கடவுள் நாயகன், தெய்வம்

தை – தமிழ்மாதம், தைத்தல், பொருத்து

நா – நான், நாக்கு

நி – இன்பம், அதிகம், விருப்பம்

நீ – முன்னிலை ஒருமை, நீக்குதல்

நூ – யானை, ஆபரணம், அணி

நே – அன்பு, அருள், நேயம்

நை – வருந்து, நைதல்

நோ – துன்பப்படுதல், நோவு, வருத்தம்

நௌ – மரக்கலம்

ப – நூறு

பா – பாட்டு, கவிதை, நிழல், அழகு

பூ – மலர்

பே – மேகம், நுரை, அழகு, அச்சம்

பை – கைப்பை, பாம்புப் படம், பசுமை, உறை

போ – செல், ஏவல்

ம – சந்திரன், எமன்

மா – பெரிய, சிறந்த, உயர்ந்த, மாமரம்

மீ – மேலே , உயர்ச்சி, உச்சி, ஆகாயம், உயரம்

மூ – மூப்பு, முதுமை, மூன்று

மே – மேல், மேன்மை

மை – கண்மை (கருமை), அஞ்சனம், இருள்

மோ – மோதல், முகர்தல்

ய – தமிழ் எழுத்து என்பதின் வடிவம்

யா – ஒரு வகை மரம், யாவை, இல்லை, அகலம்

வ – நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்

வா – வருக, ஏவல், அழைத்தல்

வி – அறிவு, நிச்சயம், ஆகாயம்

வீ – மலர் , அழிவு, பறவை

வே – வேம்பு, உளவு

வை – வைக்கவும், கூர்மை, வைக்கோல், வைதல், வைத்தல்

வௌ – வவ்வுதல், கௌவுதல், கொள்ளை அடித்தல்

நொ – நொண்டி, துன்பம்

ள – தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு – நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று – எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

குறிப்பு: தினமணி.கொம் இற்கு எனது நன்றிகள்.

பாவலர் வேதா இலங்காதிலகம் ஆக்கிய ‘உணர்வுப் பூக்கள்’ என்ற கவிதை நூலில் ஓரெழுத்தாலான கவிதை ஒன்று 94 ஆம் பக்கத்தில் இருக்கிறது.

vetha-poem

மேற்காணும் கவிதை நூலைப் பதிவிறக்க, கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://noolaham.net/project/20/1930/1930.pdf
மேற்காணும் பாவலரது பதிவுகளைப் படிக்க, கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://kovaikkavi.wordpress.com/

தூய தமிழ் பேணுவது இயலாத பணி

யாழ்பாவாணன் ஆகிய நான் அறிவில் சின்னப்பொடியன் என்றாலும் படித்த அறிஞர்கள் வெளிப்படுத்திய அறிவைப் பொறுக்கித் தருவதில் எனக்கு விருப்பம். அப்படித் தான் தூய தமிழ் பேணுவது இயலாத பணி எனச் சிலர் சொன்னாலும் “தூய தமிழ் பேணும் பணி” என இவ்வலைப்பூவை நடாத்துகிறேன். இதற்குத் துணையாக தூய தமிழ் பேண உதவும் நூல்களைத் திரட்டி களஞ்சியப்படுத்தி உள்ளேன். (பட்டியைச் (Menu) சொடுக்கிப் பார்த்துப் பதிவிறக்கலாம்.) மேலும், தூய தமிழ் பேணுவது எப்படியென அறிஞர்கள் கூறும் மதியுரைகளையும் இணைத்து வருகிறேன்.

ஆயினும், தூய தமிழ் பேணுவது இயலாத பணி எனத் தான் சிலர் சொல்கின்றனர். “அதெப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம்” என்கிறீர்களா? அதற்கு அவர்கள் கூறும் சாட்டையும் ஏற்றுத் தான் ஆகவேண்டுமே! அதாவது, தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொல்கள் எதனையும் நம்மாளுகளுக்குத் தெரியாமை தான் அவர்களது முதல் சாட்டு. இதனைச் சரிப்படுத்த மணவை முஸ்த்தபா எழுதிய அகரமுதலி ஒன்றைப் படித்தேன். தமிழில் பேசப்படும் ஆங்கிலச் சொல்களுக்கான தமிழ் சொல் காணப்பட்டது. பிறிதொரு பதிவில் (இங்கே http://wp.me/pTOfc-9s சொடுக்குக) பிறமொழி-தமிழ் அகரமுதலியை அறிமுகம் செய்துள்ளேன்.

உறவுகளே உங்களுக்குத் தெரிந்த நூல்கள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். இப்பேற்பட்ட அகரமுதலி மின்னூல்கள் உங்களிடம் இருப்பின் yarpavanan@hotmail.com மின்னஞ்சலூடாக எனக்கு அனுப்பி உதவினால் எனது மின்னூல் களஞ்சியத்தில் இணைத்துக் கொள்ளமுடியும். http://wp.me/PTOfc-58 என்ற இணைப்பைச் சொடுக்கி மின்னூல் களஞ்சியம் செல்லலாம். எத்தனை எத்தனை நூல்கள் இருந்தென்ன நம்மாளுகளும் விருப்புடன் அதனைக் கற்று தூய தமிழ் பேண விரும்பவேண்டும்.

தமிழின் அடையாளமே வேர்ச் சொல்லிருந்து பிறந்த சொல்களே! தமிழ் எழுத்துகள் எல்லாம் மனித உணர்வின் பிறப்பே! மொத்தத்தில் தமிழ் உலகின் முதன்மை மொழி மட்டுமல்ல இயற்கையாய்த் தோன்றிய மொழியும் கூட.

உணர்வின் பிறப்பே தமிழ் எழுத்துகள்!

மேற்காணும் படத்தை கூகிள்+ இல் நண்பர் ஒருவர் பதிவுசெய்திருந்தார். அதனைப் பொறுக்கி இங்கிணைத்துள்ளேன். மேலும், வேர்ச் சொல் ஆய்வில் இறங்கிய தேவநேயப் பாவாணர் அவர்களைப் படிக்க http://ta.wikipedia.org/s/3f1 என்ற இணைப்பைச் சொடுக்கலாம்.

“வேர்ச் சொல் அறியாத, தெரியாத நம்மாளுகள் எப்படித் தமிழில் உள்ள பிறமொழிச் சொல்களைக் கழட்டித் தூக்கி வீசப்போகிறார்கள்.” என்பது தூய தமிழ் பேணுவது இயலாத பணி எனச் சொல்வோர் கூறும் அடுத்த சாட்டு. இதில் உண்மையும் இருக்கத் தானே செய்கிறது. அதாவது, எந்த மொழிச் சொல்லுக்கும் தமிழில் இருப்பது போன்று வேர்ச் சொல் கிடையாது; வேர்ச் சொல் அறிந்தால், தெரிந்தால் தானே பிறமொழிச் சொல்களைக் கழட்டித் தூக்கி வீசலாம். வேர்ச் சொல் பற்றிய அறிவைத் தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அடியேனின் சில பொறுக்கல்களைக் கீழே படிக்கவும்.

வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். ஒரு மொழியில் ஒலியன் அடிப்படையில் தொடர்புள்ளனவும், பொருட் தொடர்புகளைக் கொண்டனவுமான பல சொற்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பொதுமையாக அமைந்திருப்பனவே வேர்ச் சொற்கள் ஆகும்.

எடுத்துக் காட்டாக வளை, வளையம், வளையல், வடை, வட்டம், வட்டு, வட்டில், வடம் போன்ற சொற்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது வள் என்பதாகும். எனவே இச் சொற்களின் வேர்ச்சொல் வள் ஆகும்.

வேர்ச் சொற்களுடன் ஒட்டுக்கள் சேரும்போது பல்வேறு சொற்கள் உருவாகின்றன.
மூலம் : http://ta.wikipedia.org/s/4rs

தமிழ் ஓர் ஒட்டு நிலை மொழியாகும். ஒட்டுநிலை மொழி என்பது ஒரு வேர்ச் சொல்லுடன் விகுதி, இடைநிலை, சாரியை முதலியன சேர்ந்து ஒரு சொல்லாகத் தோன்றுவது ஆகும். தமிழில் முன் ஒட்டுகள் இல்லை; பின் ஒட்டுகளே உள்ளன. வேர்ச் சொல்லுடன் பல உருபுகளும் சேர்ந்து சொற்கள் உருவாகும் முறை இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக:
‘போ’ என்பது ஒரு வேர்ச் சொல்லாகும். இதனுடன் ‘வ்’ என்ற எதிர் கால இடைநிலையும், ‘ஆன்’ என்ற ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதியும் இணைந்து,

போ + வ் + ஆன் = போவான்

என்று ஒரு சொல் உருவாகிறது.
மூலம் : http://tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211114.htm

வேர்ச் சொல், வேர்ச் சொல்லிலிருந்து தமிழ் சொல் எப்படி உருவாகிறது என்பதை விளக்க மேற்படி தளங்களில் பொறுக்கிய பகுதி உதவலாம்.

வேர்ச் சொல் அறிந்து, தெரிந்து தமிழில் உள்ள பிறமொழிச் சொல்களைக் கழட்டித் தூக்கி வீசுவதனாலேயே தூயதமிழ், நற்றமிழ் பேண வாய்ப்பு உண்டு. வேர்ச் சொல் கொண்டு உருவான சொல்கள் புழங்கும் தமிழ் மொழியை, நாம் வேர்ச் சொல்லறிந்து தமிழ் சொல்களால் பேண முயல்வோம். பிறமொழிச் சொல்களைத் தூக்கியெறிந்த பின், வேர்ச் சொல் கொண்ட தமிழ் பேண முடியாவிட்டால் தூய தமிழ் பேணுவது இயலாத பணியே! அப்படியாயின், தமிழரின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த இயலாமல் போகலாம்.

தமிழ் அறிஞர்களே! தமிழ்ப் பதிவர்களே! தமிழ் ஆசிரியர்களே! தூய தமிழ் பேண இயலாத வேளை, தமிழரின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த இயலாமல் போகலாம் எனவுணர்ந்து வலைப்பூக்களை நீங்கள் நடத்தலாம்; நடாத்த வேண்டும். ஏற்கனவே, வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) என்ற தொகுப்பைப் பேணுகிறேன். மேலும், “தமிழ் மொழி ஆய்வுப் பதிவுகள்” என்றொரு தொகுப்பைப் பேணலாம் என எண்ணியுள்ளேன்.

“தமிழ் மொழி ஆய்வுப் பதிவுகள்” என்ற தொகுப்பில் தமிழ் அறிஞர்கள், தமிழ்ப் பதிவர்கள், தமிழ் ஆசிரியர்கள் தாம் நாடாத்தும் வலைப்பூக்களில் பதிந்த தமிழ் மொழி ஆய்வுப் பதிவுகளின் இணைப்பைத் (URL ஐத்) தொகுத்தால் நன்மை கிட்டுமென நம்புகிறேன். அதாவது, அத்தொகுப்பைச் சுட்டிக்காட்டி உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேணும் பணியை ஊக்குவிக்கலாம் என நம்புகிறேன். இது பற்றிய தங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவுங்கள்.

‘ழ்’ கொண்ட தமிழ்

முத்த மொழி – எங்கள்
தாய் மொழி – அது
எங்கள் தமிழ் மொழி!
‘ழ்’ கொண்ட ஒரே மொழி
தமிழ் மொழி ஒன்றே
என்றும் அழியா
எங்கள் தாய் மொழி!
எங்கள்
தாய் மொழிக்கு நிகராக
வேறேதும் மொழி உண்டோ?
உண்டெனின் – அதில்
‘ழ்’ என்னும் ழகரம் உண்டோ?
உலகின் மூத்த மொழி ஆறில்
சீர்குலையாது வாழும் மொழி
எங்கள் தாய்த் தமிழ் மொழியே!

தமிழ் எண்கள்

நாம் பாவிக்கும் எண்கள் யாவும் இந்து அராபிய எண்கள் என்று சொல்லப்படுகிறது. உலகெங்கும் இவைதான் பாவிக்கப்படுகிறது. உலகில் முன்தோன்றிய மூத்த தமிழில் சிறப்பு எழுத்துக்களாலேயே எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனி எழுத்துகள் பயன்பட்டிருந்தன.
அவை இவை தான்…

0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000

சரி… சரி… இத்தமிழ் எண்கள் கொஞ்சம் எப்படி இருக்கும் என்று கீழே பாருங்கள்…

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௱௫௰௬ = 156
௨௱ = 200
௩௱ = 300
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

அட கடவுளே! இப்படி எல்லாம் எழுத்துக்களாலான தமிழ் எண்கள் இருந்ததை நாம் பார்த்ததில்லையே! நம்ப பள்ளிக்கூடத்தில One, Two, Three,.. என, உரோம எண்களென, இந்து அராபிய எண்களென சொல்லித் தந்தாங்க… இதெல்லாம் சொல்லித் தரவில்லையே! நான் நினைக்கிறேன், நமக்குப் படிப்பித்த ஆசிரியர்களுக்குக் கூட இத்தமிழ் எண்கள் பற்றிக் கொஞ்சமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தான்!

என் அப்பப்பா படித்த நூறாண்டுகளுக்கு முந்திய நூல்களில் இவ்வாறான தமிழ் எண்கள் இருக்கக் கண்டேன். எனது வகுப்பு ஆசிரியரிடம் கேட்டால், இதெல்லாம் இப்ப பயன்பாட்டில் இல்லை என்றே சொல்கிறார். இப்ப வெளிவரும் நூல்களில் இவற்றைப் பார்க்க முடியாது தான்.

எளிதாக ஒரு கேள்வி… முதன் முதலில் உருவான தமிழ் இலக்கண நூலை எழுதியவர் யார்? இந்தக் கேள்விக்கு நாவலர் என்று சிலரும் நன்நூலர் என்று சிலரும் தொல்காப்பியர் என்று சிலரும் உண்மையில் நான் எழுதவில்லை என்று சிலரும் சொல்வதைப் பார்க்கலாம்.

உண்மையில் குறுமுனி என்று சொல்லப்படும் அகத்திய முனிவரால் எழுதப்பட்ட அகத்தியம் என்ற நூலே முதன் முதலில் உருவான தமிழ் இலக்கண நூலாகும். அகத்தியம், தொல்காப்பியம் வெளியான காலப்பகுதி நூல்களைப் படிக்க விரும்புவோருக்கு இவ்வெண்கள் உதவலாம்.

உலகெங்கும் தூய தமிழைப் பேணப் பழந் தமிழ் நூல்களைப் படித்து, தமிழில் இல்லாத பிறமொழிச் சொல்களைக் களைந்து தூய தமிழ்ச் சொல்களை அடையாளப்படுத்த முயல்வோர் செய்யும் ஆய்வுக்கு பக்க எண்களைப் பகுத்தறிய உதவுமென இப்பதிவைத் தந்துள்ளேன்.

சான்று: http://ta.wikipedia.org/s/145