நாம் தமிழர் என்று முழங்கு!

நாம் தமிழர் என்று முழங்குவோம்
நாம் தமிழில் என்றும் முழங்குவோம்
(நாம்)
உலகம் என்றும் தமிழைப் படிக்கட்டும்
உலகம் எங்கும் தமிழே முழங்கட்டும்
(உலகம்)
நாம் குடிப்போம் நம்தமிழின் அழகை
நாம் படிப்போம் தமிழின் தேன்சுவையை
நாம் வெடிப்போம் நம்தமிழ் இலக்கணத்தை
நாம் இடிப்போம் தமிழின் முழக்கத்தை
(நாம்)
(உலகம்)
கம்பன் குடிக்காத நம்தமிழ் அழகா
இளங்கோ படிக்காத தமிழின் தேன்சுவையா
காளமேகம் வெடிக்காத நம்தமிழ் இலக்கணமா
பாரதியார் இடிக்காத தமிழின் முழக்கமா
(நாம்)
(உலகம்)
அழகுத் தமிழைக் குடித்து எழுத வா
தேன்சுவைத் தமிழைப் படித்துப் படைக்க வா
இலக்கணத் தமிழை வெடித்துப் பாட வா
உலகிற்குத் தமிழை இடித்து முழங்க வா
(நாம்)
(உலகம்)

Advertisements

காற்றோடு கலந்த தமிழ்

மோதிக் கொள்ளும் வீசும் காற்றே!
தமிழாய்க் கூவிச் சென்று மோது!
(மோதி)
கூவிச் செல்லும் வீசும் காற்றே!
தமிழைக் காவிச் சென்று பேசு!
(கூவி)
பிறந்த குழந்தை அழுவதும் தமிழாலே!
‘ஆ’வென அழுகையில் எழுவதும் தமிழுயிரே!
‘இம்’என அழுகையில் எழுவதும் தமிழ்மெய்யே!
அம்மாவென அழுகையில் எழுவதும் தமிழ்ச்சொல்லே!
எல்லாம் வாயாலே எழுவதும் காற்றாலே!
(மோதி)
(கூவி)
தேன்தமிழெனத் தழுவிடும் தென்றல் காற்றே
தெற்கால நம்மாளுகள் நலமா சொல்லு
வான்முட்ட மோதிடும் வாடைக் காற்றே
வடக்கால தமிழர் நலமா சொல்லு
நான்பாடக் காற்றே தமிழாலே சொல்லு!
(மோதி)
(கூவி)
தமிழாகக் கூவிடும் கொண்டல் காற்றே
கிழக்கால நம்மாளுகள் நலமா சொல்லு
தமிழெனப் பாடிவரும் மேலைக் காற்றே
மேற்கால வாழ்வதும் தமிழெனச் சொல்லு
காற்றோடு கலந்ததும் தமிழெனச் சொல்லு!
(மோதி)
(கூவி)
மென்காற்றும் மாறி இளந்தென்றல் ஆகலாம்
இளந்தென்றலும் மாறித் தென்றலாக வீசலாம்
தென்றலும் மாறிப் புழுதிக்காற்று ஆகலாம்
புழுதிக்காற்றும் மாறி ஆடிக்காற்றாய் வீசலாம்
ஆடிக்காற்றும் மாறிக் கடுங்காற்று ஆகலாம்
கடுங்காற்றும் மாறிப் புயற்காற்றாய் வீசலாம்
புயற்காற்றும் மாறிச் சூறாவளி ஆகலாம்
சூறாவளியும் கூடவே தமிழாக வீசலாம்
காற்றோடு கலந்தது தமிழென்று பாடுவோம்!
(மோதி)
(கூவி)


காற்றுப் பற்றிய தகவலுக்கு:

http://wp.me/pTOfc-9X

தமிழை நீந்திக் கட

தமிழெனும் கடலைய் நீந்தியே பாரப்பா
மகிழ்வெனும் கடலிலே கரையேறி வருவாயா
(தமிழெனும்)

எழுத்தும் சொல்லுமே தமிழிடம் முழுவதும்
முள்ளும் கல்லும் செல்லிடம் வரைக்கும்
(எழுத்தும்)

வாக்கும் பேச்சும் காட்டுமே இயலிலே
ஆடலும் பாட்டும் மின்னுமே இசையிலே
வாழ்வும் கூத்தும் சுட்டுமே நாடகமே
உடலும் உள்ளமும் உணருமே தமிழையே
(தமிழெனும்)
(எழுத்தும்)
மங்களம் கூறித்தானே உறவினை ஆற்றுவோம்
சிலேடையில் கூறித்தானே உறவுகள் மகிழ்வோம்
அங்கதம் கூறித்தானே எதிரியை வீழ்த்துவோம்
உண்மையைக் கூறித்தானே தமிழைப் போற்றுவோம்
(தமிழெனும்)
(எழுத்தும்)

திருக்குறள் கூறுவதும் அறிவாம் கிட்டுமே
ராமர்கதை கூறுவதும் அறமாம் எட்டுமே
பாண்டவர் போருந்தானே உறவாம் முட்டுமே
காளமேகம் பாடியதும் திறனாம் பட்டோமே
(தமிழெனும்)
(எழுத்தும்)

கேட்டுக் கேட்டுச் சொல்லி வைச்சாம்
புட்டுப் புட்டாச் சொல்லி வைச்சாம்
சட்டுப் புட்டெனச் சொல்லி வைச்சாம்
நல்ல பாட்டாம் நாட்டுப் பாட்டே
(தமிழெனும்)
(எழுத்தும்)

 

தமிழைப் பாடு

உலகம் போற்றும் தாய்மொழி தமிழே
பலரும் ஏற்கும் தேன்மொழி தமிழே
(உலகம்)

முதன்முதல் மொழியும் எங்களின் தமிழே
பழம்பெரும் மொழியும் எங்களின் தமிழே
(முதன்முதல்)

ஈராறாகும் உயிரும் வந்திடும் தமிழிலே
உயிரீறாம் ஆயுதம் வந்திடும் தமிழிலே
மூவாறாம் மெய்யும் வந்திடும் தமிழிலே
பெருக்கிடும் உயிர்மெய் வந்திடும் தமிழிலே
(உலகம்)
(முதன்முதல்)

எழுத்தது இலக்கணம் இருப்பது தமிழிலே
பாடலது இலக்கணம் இருப்பது தமிழிலே
பொருளது இலக்கணம் இருப்பது தமிழிலே
அறமது இலக்கணம் இருப்பது தமிழிலே
(உலகம்)
(முதன்முதல்)

வாழ்க்கையும் உரைத்திடும் இலக்கியம் தமிழிலே
ஒழுக்கமும் விளக்கிடும் இலக்கியம் தமிழிலே
நோய்களும் விலக்கிடும் இலக்கியம் தமிழிலே
நலன்களும் வெளிப்படும் இலக்கியம் தமிழிலே
(உலகம்)
(முதன்முதல்)

வள்ளுவன் வெண்பாவும் நறுக்காகத் தமிழிலே
ஔவையின் அகவலும் மிடுக்காகத் தமிழிலே
கம்பனின் அழகதும் செருகாகத் தமிழிலே
பாரதியின் வரிப்பாவும் விழிப்பாகத் தமிழிலே
(உலகம்)
(முதன்முதல்)