வலைப்பூக்களும் பதிவுகளும் தெரியாதா?

உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேண வலைப்பூக்கள் சிறந்த ஊடகமே! நான் 1995 இல கணினி படிக்கையிலே இப்படி எதிர்பார்க்க வில்லை. இன்றைய இளசுகள் இது பற்றி எண்ணிப் பார்க்காமல் இருப்பது துயர் தரும் செய்தியாகவே இருக்கிறது. ஆயினும், தமிழ் நாட்டில் இருந்து எண்பத்தாறு அகவையிலும் புலவர் ஐயா வலைப்பூ நாடாத்தித் தமிழ் பரப்பிப் பேண முன்நிற்கையில் இன்றைய இளசுகள் பின் நிற்பது சரியா?

எனவே, இன்றைய இளசுகள் வலைப்பூக்களையும் பதிவுகளையும் தெரிந்து கொண்டு உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேண முன்வரவேண்டும். அவர்களுக்கு வசதியாக அறிஞர்களின் அறிவுரைகளை இங்கு அறிமுகம் செய்கிறேன்.

“நீங்களும் வெப்சைட் செய்யலாம்” என்ற தலைப்பின் கீழ் “இன்னும் உங்கள் வலை மனையைக் கட்டலையா?” என்ற கேள்வியுடன் வலைப்பூக்கள் வடிவமைப்பது பற்றித் தேவையான தகவலைக் ‘கணணித்தமிழ்’ தளம் விளக்குகிறது. அதனைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://www.kananithamil.blogspot.com/2010/12/blog-post_29.html

“பதிவுத் திருட்டைத் தடுக்கப் புதிய பூட்டு” என்ற தலைப்பின் கீழ் காப்புரிமை, தகவல் திருட்டு, பாதுகாப்பு என ‘எதிர்நீச்சல்’ தளம் பதிவர்களுக்கு வழிகாட்டுகிறது. அதனைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://tech.neechalkaran.com/2011/09/protect-your-blog-post.html

வலைப் பதிவில் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய நுட்பங்களைக் கற்றிட “திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டல்” என்ற பதிவை ஏற்கனவே நான் அறிமுகம் செய்துள்ளேன். அதனைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://wp.me/pTOfc-9q

உறவுகளே! இப்படிப் பெரிய அறிஞர்கள் கூறும் தகவலைக் கற்றுத்தேறினால் உங்களாலும் வலைப்பூக்கள் நாடாத்தித் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே! தமிழில் ஒருங்குகுறி (Unicode) தட்டச்சு சிக்கலா? கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://www.thamizhagam.net/fonts/fonts.html
மேலும், பாமினி எழுத்துருவில் தட்டச்சுச் செய்து லதா ஒருங்குகுறிக்கு (Unicode) மாற்றிக்கொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_b-u.xml
ஈற்றில் எனது முயற்சித் தள இணைப்பையும் தருகிறேன்.
http://devkjeevan.webs.com/

உறவுகளே! இனி உங்களால் வலைப்பூக்கள் நாடாத்தித் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே! அதற்காகக் கிணற்றுத் தவழை போன்று இருந்துவிடாது, பிற அறிஞர்களின் வலைப்பூக்களையும் படித்து முன்னேறுங்கள்.

Advertisements

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டல்

இன்றைய உலகில் வலைப்பதிவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய உதவிக்குறிப்புகள், வலைப்பூக்களை முதன் நிலைக்கு உயர்த்த, வாசகர்களை தம் வலைக்கு இழுக்க என ஒரு Web Developer எமக்குச் சொல்லித்தரக் கூடிய எல்லாத் தகவலையும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எமக்குத் தந்திருக்கின்றார்.

திண்டுக்கல் தனபாலன்

வலைப்பூக்களூடாக உலகெங்கும் தமிழ் பேண முன்வருவோர் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டலாக இப்பதிவு அமையும் என்பதை விட, அவரவர் தமது வலைப்பூக்களை முன்னிலை வரிசைக்குத் தரமுயர்த்த உதவும் பயனுள்ள பதிவிது. எனது நண்பர்களே, இப்பதிவை உங்கள் தளங்களிலும் அறிமுகம் செய்து உதவுங்கள். அதனால் சிறந்த வலைப்பதிவர்கள் முன்னுக்கு வர உதவியதாக அமையும்.

http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதன் நோக்கம்; உலகெங்கும் தமிழ் பேண முன்வருவோருக்குப் பயனுள்ள தகவலை வழங்கியமையே! எனவே, இவரது பதிவைப் படித்துப் பயன்பெறுக; வலைப்பூக்களூடாக உலகெங்கும் தமிழ் பேண முன்வருக. எல்லோரும் ஒன்றிணைந்து வலைப்பூக்களூடாகத் தமிழ் பேணுவோம்; உலகெங்கும் தமிழை வாழவைப்போம்.

கணினி வழியில் தமிழை வெளிப்படுத்த…

தமிழ் இணையத் தளங்கள் பலவற்றில் நம்மாளுகள் தமிழுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்களால் தமிழ் உச்சரிப்பினைத் தட்டச்சுச் செய்கிறார்கள். இது ஒருபோதும் தூயதமிழை உலகெங்கும் பரப்பிப் பேண உதவப்போவதில்லை. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் கவிதையைப் பார்க்கவும்.

 

enakku avalai pidikkum

aanaal,

avalai kaathalikka mudiyathe…

ean theriyuma?

aval manamaanavale!

 

இப்படி ஆங்கில உச்சரிப்பில் தமிழ்க் கவிதை எழுதினால் எப்படி வாசித்து விளங்கிக் கொள்வது? சரி! தமிழ்ப்படுத்திப் பார்ப்போமா…

 

எனக்கு அவளைப் பிடிக்கும்

ஆனால்,

அவளைக் காதலிக்க முடியாதே…

ஏன் தெரியுமா?

அவள் மணமானவளே!

 

“அழகான பெண்ணென்றால் விருப்பம் வரலாம். அவளோ மணமானவள் என்றறிந்தால் துயரந்தான்.” என ஒருவர் தன் துயரை ஆங்கில உச்சரிப்பில் பகிர்ந்துள்ளார். ஆங்கிலத்தில் சொல்களை உச்சரிக்கத் தெரியாதோரால் எப்படித் தமிழ்க் கவிதையைச் சுவைக்க முடியும். இதனைத் தமிழில் தட்டச்சுச் செய்திருந்தால், நன்றாக விளங்கிக்கொள்ள உதவியிருக்கும். இவ்வுண்மையை உணர்ந்து ஆங்கில உச்சரிப்பில் தமிழ் பரப்புவதை நிறுத்துங்கள். தமிழைத் தமிழாலே பரப்ப முன்வாருங்கள்.

 

“அடேய்! யாழ்பாவாணா! இணையத் தளங்களில் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) எழுத்துகள் பாவிப்பது தெரியாதா? ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) எழுத்துகளைத் தட்டச்சுச் செய்ய முடியாதென்பதை அறியாயோ? எங்களுக்கும் தமிழ் மீது பற்று இருக்கு… அதனால் தானே, ஆங்கில உச்சரிப்பிலாவது தமிழ் பரவட்டுமென எழுதுகிறோம்.” என்ற உங்கள்  விளக்கத்தை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.

 

நானும் ஆங்கிலத்தில் முழு முட்டாள் தான்! அதனாலன்றோ ஆங்கில உச்சரிப்பிலாவது தமிழ் பரப்ப முடியாமல் திணறினேன். ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) எழுத்துச் சிக்கலை நண்பர் ஒருவரிடம் முறையிட்டேன். அவரோ ‘http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/‘ என்ற இணைப்பைச் சொடுக்கினால் கூகிளின் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) தட்டச்சு முறையில் தமிழைப் பரப்பலாம் என்றார்.

 

எனக்கும் கொஞ்சம் கணினி அறிவு இருந்தது. நானும் ‘எழுத்துப்பலகை’ என்றொரு தளத்தை ஆக்கியுள்ளேன். பின்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது தளத்தைப் பாருங்கள்.

http://devkjeevan.webs.com/

எனது தளத்தில் சுட்டெலியால் (Mouse) சொடுக்கியதும் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) எழுத்துகள் திரையில் தோன்றும். அதனைப் படியெடுத்து இணையப் பக்கங்களில் பாவிக்கலாமே! “அடடே! இதில் முழுமை இல்லையே” என்று ஏங்க வேண்டாம். விரைவில் இத்தளத்தில் முழுமை கிட்டும் வண்ணம் மறுசீரமைக்கவுள்ளேன். இதே போன்று மென்பொருள் ஒன்றும் ஆக்கி வெளியிடவுள்ளேன்.

 

எனது முயற்சிகள் முழுமை அடையும் வரை எவராலும் காத்திருக்க முடியாது. அதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். கணினி அறிவிலும் நானொரு சின்னப் பொடியன். என்னை விடப் பெரிய அறிஞர்களின் முயற்சிகளை கீழே அறிமுகம் செய்கிறேன். அவற்றைப் பயன்படுத்தி ஆங்கில உச்சரிப்பில் கருத்துப் பகிராமல், தமிழிலேயே கருத்துப் பகிர முன்வாருங்கள்.

 

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தமிழைப் பெற…

http://english-to-tamil-keyboard.appspot.com/

http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

http://www.islamkalvi.com/web/converter.htm

http://www.utvpkallar.sch.lk/images/school/ramanicom/arial.html

http://www.tamilnenjam.com/unicode.htm

http://ezilnila.com/nila/unicode_writer.htm

 

பிற எழுத்துருவை லதா எழுத்துருவாக மாற்ற

http://www.suratha.com/unicode.htm

http://edu.tamilclone.com/tamil-unicode-converter-online/

http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_b-u.xml

http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_u-b.xml

http://www.islamkalvi.com/web/tfonts2unicode.htm

http://www.pathidaran.com/anything/UnicodeConvertor.htm

http://kandupidi.com/converter/

 

தமிழ் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) தட்டச்சு மென்பொருளைப் பதிவிறக்க.

 

http://azhagi.com/docs.html

http://ezilnila.com/archives/1172

http://thamizha.com/project/ekalappai

http://www.kuralsoft.com/index_t.htm

அல்லது

http://ezilnila.com/archives/810

http://www.nilapennukku.com/2012/07/tamil-typing-software-download.html

 

என் கண்ணில் சிக்கிய இணைப்புகளைத் தொகுத்துத் தந்துள்ளேன். இவை, ஆங்கில எழுத்துக்களால் தமிழ் உச்சரிப்பினைத் தட்டச்சுச் செய்வோர் நேரடியாகத் தமிழ் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) இல் தமிழை வெளிப்படுத்த உதவுமென நம்புகிறேன். எத்தனையோ அறிஞர்களின் இவ்வாறான வசதிகளைப் பாவித்து கணினி வழியில் தமிழை வெளிப்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவோம் வாரீர்.

 

தூயதமிழை உலகெங்கும் பரப்பிப் பேண மேற்காணும் இணைப்புகளைப் பாவித்து தமிழ் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) இல் தமிழை வெளிப்படுத்த வேண்டும். இவற்றைவிடப் பிற இணைப்புகள் இருப்பின் நீங்கள் உங்கள் கருத்தில் வெளிப்படுத்தலாம்.

 

நீங்கள் எந்தவொரு இணையப்பக்கத்திலும் ஆங்கில எழுத்துக்களால் தமிழ் உச்சரிப்பினை வெளிப்படுத்தும் ஆள்களைக் கண்டால் இப்பதிவினை அல்லது இப்பதிவு முகவரியினைச் சுட்டி, அவர்கள் தங்கள் கருத்துகளைத் தமிழில் வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.

தமிழுக்காக நீங்களும்…

 

யாழ்பாவாணன் ஒரு சின்னப்பொடியன். பெரிசா படிச்ச ஆளுமில்லை. ஆனால், தமிழுக்கு ஏதோ செய்வதாக https://yarlpavanan.wordpress.com/ தளத்தில் மின்நூல் களஞ்சியம் ஒன்றைப் பேணுகிறார். அம்மின்நூல் களஞ்சியத்தில் உள்ள நூல்களை எங்கே பொறுக்கினார் என்றால், https://yarlpavanan.wordpress.com/ தளத்தில் ‘கலைக்களஞ்சியங்கள்’ பக்கத்தில் உள்ள இணைப்புகளைச் சொடுக்கினால் நீங்களே கண்டுபிடித்துவிடுவியள்.

உந்தச் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் உப்பிடி எல்லாம் செய்யேக்க, எந்தப் பெரியாளுகளாகிய நீங்களும் தமிழுக்காக எத்தனையோ பெரிய பணிகளைச் செய்யலாமே! இப்ப தானே வலைப்பூக்களையோ வலைத்தளங்களையோ இணையச் சேமிப்பகங்களையோ என எல்லாமே சும்மா /இலவசமாகப் பெறலாமே!

சின்னப்பொடியன் யாழ்பாவாணன் கீழ்வரும் தளங்களில் விளையாடி இருக்கிறார் என்றால் பாருங்களேன். இவற்றில் சிறந்த வழங்கி எதுவென அறிந்து நாமும் பயன்படுத்தலாம்.

ஒளிஒலி (வீடியோ) சேமிப்பிற்கு:
http://www.youtube.com/

ஒளிப்(புகைப்) பட சேமிப்பிற்கு:
https://www.flickr.com/

வலைப் பூக்கள்
https://www.blogger.com
https://wordpress.com/
https://www.tumblr.com/
http://blog.com/
http://www.livejournal.com/

கருத்துக் களங்கள்
http://www.forumta.net/
http://www.forumer.com/
http://www.freeforums.org/
http://www.forumotion.com/
http://www.proboards.com/
http://www.prophpbb.com/
http://www.createaforum.com/
http://www.zetaboards.com/

இணையப் பக்கங்கள்
https://sites.google.com
http://www.webs.com/
https://www.yola.com/
http://www.jimdo.com/
http://www.hpage.com/
http://www.weebly.com/
http://us.webnode.com/
http://www.ucoz.com/
http://yep.com/
http://www.freewebsite.com/

இணையத் தளங்கள்
http://www.serversfree.com/
http://hostinghood.com/
http://www.hostinger.in/
http://0hna.com/
http://www.2freehosting.com/
http://www.freewebhostingarea.com/
http://www.freehostia.com/
http://www.000webhost.com/
http://www.zymic.com/
http://www.50webs.com/
http://www.5gbfree.com/
https://www.x10hosting.com
http://www.awardspace.com/
http://googiehost.com/
http://xlphp.net/
http://www.uhostfull.com/
http://1gb.me/
http://3owl.com/
http://www.heliohost.org/home/
http://gegahost.net/

இணையச் சேமிப்பகங்கள்
https://drive.google.com/
https://onedrive.live.com
https://mega.co.nz/
https://www.box.com
http://www.4shared.com/
http://www.drivehq.com/
https://www.dropbox.com/

மேலும், பல இணைய வழங்கிகள் இருக்கலாம்.

உவன் யாழ்பாவாணனைப் போல நீங்களும் ஏதாவது தளங்களைத் தயாரிக்கலாமே. அதற்கு வழிகாட்டும் நூல்கள் யாழ்பாவாணனின் மின்நூல் களஞ்சியத்தில் இருக்குமே! அடடே! வலைப்பூவையோ வலைத்தளத்தையோ வடிவமைத்த பின்னர், “தமிழுக்காக நீங்களும்…” என்ற தலைபில எதை எழுதுறது என்று திணறலா? அதற்கும் கதை, பாட்டு, கட்டுரை, நாடகம் என இலக்கியம் எழுத வழிகாட்டும் நூல்கள் யாழ்பாவாணனின் மின்நூல் களஞ்சியத்தில் இருக்குமே!

“அடே! யாழ்பாவாணா! ‘தமிழுக்காக நீங்களும்…’ என்று ஏன்டா எழுதவேணும்?” என்பது உங்கள் கருத்து. உலகில பல கோடி தமிழருக்குத் தமிழ் தெரியாதாம். மொறீசியஸ் தனித் தமிழ் நாடாம்; அங்கு தமிழ் பேசத் தெரியாத தமிழரால் அது பிறமொழி நாடாயிற்று. இன்னும் பத்தோ இருபதோ ஆண்டுகளின் பின் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கை குறைந்து விடுமாம். அட கடவுளே! “தமிழ் இனி மெல்லச் சாகும்” என்றும் சிலர் ஒப்பாரி வைக்கிறாங்க!

தமிழை வாழ வைக்க, தமிழ் இனி மெல்லச் சாகாமல், உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வலைப்பூவையோ வலைத்தளத்தையோ வடிவமைத்துப் பணி செய்ய முன்வாருங்கள். “அடே! யாழ்பாவாணா! முந்திய நாள் பெய்த மழைக்கு நீயோ நேற்று முளைத்த காளான் போல… நாங்கள் எப்பவோ இப்பணியைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்” என்னும் பெரியோர்களே! இளைய தலைமுறையினருக்கு இவ்வாறு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழிகாட்டுவோம் வாருங்கள்.

இணையத்தள வடிவமைப்புக்கு உதவும் தளங்களைத் தேட “தமிழுக்காக…” என்ற தலைப்பில் https://yarlpavanan.wordpress.com/ தளத்தில் வலப்பக்கப் பட்டை(Side Bar)யில் தகவல் பகுதி இணைத்துள்ளேன். சில இணைப்புகள் இயங்கவில்லை. இயங்காத தலைப்புகளை கூகிளில் தேடலாம். உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண, தாங்கள் எதிர்பார்க்கும் மதியரைகளை யாழ்பாவாணனிடம் கேட்டுப் பெறலாம். இணையத்தள வடிவமைப்பும் தெரிந்து, தமிழானயிருந்தும் இணைய வழியில் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண எல்லோரும் ஒன்றுபடுவோம்.

கணினி, இணைய வழித் தமிழ்

ஒரு காலத்தில் எத்தனையோ ஆள்கள் கணினி படிக்கப் பின்நின்றனர். கேட்டால்; ஆங்கிலம் தெரியாது என்று சாட்டுக் கூறினர். ஆனால், இன்றோ எல்லோரும் கணினிக் கல்வியிலே நாட்டம் கொள்கின்றனர். காரணம் கணினி நுட்பங்களில் தமிழ் இழையோடிவிட்டது. இந்நிலை எதிர்காலத்தில் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப் பேண உதவலாம்.

நானும் ஒரு கணினி விரிவுரையாளர் தான். ஒரு நாள் அகவை அறுபத்தேழில் ஓர் அப்பு என் வீட்டிற்கு வந்தார். அறிவுக்கதிர் மாதாந்த இதழ் (அச்சு வழியிலும் இணைய வழியிலும்) நாடாத்தத் தேவையான பாடங்களைச் சொல்லித் தருமாறு கேட்டுப்படித்தார். இதை ஏன் சொல்ல வந்தேன்? கணினி நுட்பமும் முதுமையும் தமிழைப் பேண முன்வருமாயின்; இன்றைய நம் இளசுகளுக்கு ஏன் மொழிப்பற்று எள்ளளவேனும் எட்டிப்பார்க்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வந்தேன்.

ஆளுக்கொரு வலைப்பூ, குமுகாய(சமூக) வலைத்தளம், இணையத் தளம், தமிழ் மென்பொருள் வெளியீடு என எத்தனையோ இளசுகள் கணினி, இணைய வழியில் இறங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவற்றினூடாகத் தூய தமிழைப் பேண முன்வராத துயரையே இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கணினி, இணையம் மட்டுமன்றி இன்று நடைபேசியிலும் கூடத் தமிழ் உலாவுகிறதே! மாறும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதோடு அத்தொழில் நுட்பங்களூடாகத் தமிழைப் பேண முயன்றால் தமிழ் இனி மெல்லச் சாக இடமில்லையே!