தமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்

tn_state_india

தமிழக உறவுகளே!
தமிழகத் தேர்தல் வந்தால்
வாக்கு விற்பனை தான் பேசுபொருள்!
பணமீட்டி வாக்குப் போட்டு
தமிழக அரச மொழி தமிழை
நடைமுறைப்படுத்த இயலவில்லையே!
பணமீட்டி வாக்குப் போட்டு
தமிழக மக்கள் மேம்பாடு அடைய
உண்மையான அக்கறையாளர்களை
உங்களால் தெரிவுசெய்ய முடியவில்லையே!
பணமீட்டி வாக்குப் போட்டு
தமிழக மக்களின் எதிர்காலத்தை
புதைக்கத்தானே முடிந்ததே தவிர
விடிவு காலம் கைக்கெட்டியதா?
தமிழக அரச மொழியாகத் தமிழை
ஏற்றுக்கொண்ட பின்னும் நடைமுறைப்படுத்தவோ
தமிழக மக்கள் மேம்பாடு அடைவதே
உயிரிலும் மேலான உயரிய பணியென்றோ
தமிழக மக்களின் எதிர்காலம் பொற்காலமாக
பிறமொழிக் கலப்பின்றி நற்றமிழ் உலகையாள
தமிழக மக்கள் உரிமையுடன் ஒன்றுபட்டு
வாக்கு விற்பனையில் ஈடுபடாது – அதாவது
பணமீட்டி வாக்குப் போடுவதை விட்டிட்டு
தமிழக மக்களின் பொன்னான எதிர்காலம் மின்ன
பலம் மிக்க உங்கள் வாக்கினைப் பயன்படுத்தி
சிறந்த தமிழக ஆட்சியை அமைக்க உதவுங்கள்!

தமிழை ஆட்சி மொழியாக்கிய நாள்
சான்று: https://ta.wikipedia.org/wiki/ஆட்சித்_தமிழ்

பணம் கூட இயமன் ஆகலாம்!

பணம் தானடா இயமன் தானடா! – அந்த
இயமனுக்கும் தான் தெரியுமடா !
(பணம்)

பணம் தானடா பிணம் ஆக்குமடா! – அந்த
சித்திர புத்திரனுக்கும் தான் தெரியுமடா !
(பணம்)

பணம்  தானடா உறவைச் சேர்க்குமடா
பணம்  தானடா மகிழ்வைத் தருமடா
பணம்  தானடா நாம்வாழ உதவுமடா
பணம்  தானடா உறவைப் பிரிக்குமடா
பணம்  தானடா துயரையும் தருமடா
பணம்  தானடா நாம்சாகப் போதுமடா
மனிதரைப் படைத்த கடவுளுக்கும் தெரியுமடா!
(பணம்)
(பணம்)

பணத்தைத் தானடா நம்பித் தானடா
பொருள், பண்டம் வேண்டுவர் தானடா
வேண்டிய கடனை வழங்கத் தானடா
காற்றில பறக்கிற பணம் தானடா
கைக்கு எட்டாமல் சாவதே வழியடா
சித்திர புத்திரன் கணக்குத் தானடா
இயமனுக்கு வேலையைச் சுகமாக்கத் தானடா
(பணம்)
(பணம்)

கடின உழைப்புக்குக் கூலி தானடா
காற்றில பறக்கும் பணம் தானடா!
ஏட்டில படித்தும் ஏறாத குணமடா
பணத்தைச் சேமிக்காத மனிதக் குணமடா!
பணம் இன்றிச் சாவோர் மனிதரடா
சித்திர புத்திரன் கணக்குப் பிழையாதடா
நாளும் இயமனுக்கு வேலை சுகமடா!
(பணம்)
(பணம்)

http://www.ypvnpubs.com/

பாப்புனைய விரும்புங்கள் (மின்நூல்)

வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா / கவிதை போன்ற எனது கிறுக்கல்களை “பாப்புனைய விரும்புங்கள்” என்ற தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.

https://app.box.com/s/rgrz50j6qg7q1awkq1u6ynd0wxpchbcw

எனது மின்நூலைப் பக்கம் பக்கமாகப் (பிளாஷ் வியூவரில்) படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.

http://online.fliphtml5.com/insb/qapv/

எனது மின்நூலின் PDF தொழில் நுட்பப் பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.

இரட்டைக்கிளவியோடு விளையாடினேன்!

ஓர் இணையாக வருகின்ற சொல்களாயும் அவை பிரிந்தால் பொருள் தராததுமாக அமைவன இரட்டைக்கிளவி எனத் தமிழில் பேசப்படுகிறது. எ-கா: நறநற என பல்லைக் கடித்துக் காட்டினாள் என்பதில் “நறநற” என்பது இரட்டைக்கிளவி எனலாம்.

“சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ” என
பாவலர் வைரமுத்து அழகாகச் சொல்லியுள்ளார்.

சின்னப் பொடியன் நானும் இரட்டைக் கிளவி எனும் இணைச் சொல்களை கையாண்டு ‘பா’ நடையில கதையளந்துள்ளேன். ‘பா’ புனைய விரும்புவோர் இதனைக் கையாண்டால் சுவையான பாக்களை உருவாக்கலாம். வாருங்கள் இரட்டைக்கிளவியோடு விளையாடுவோம்!

இரட்டைக் கிளவி எனும் இணைச் சொல்களைக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடலாம்.
https://ta.wikipedia.org/s/85w

சலசல என ஓடிய ஆற்றின் மேலே
மடமட என முறிந்தன மரங்கள்!
சரசர என்று மான்கள் ஓடின
கீசுகீசு என குருவிகள் கத்தின
கிசுகிசுவாக “ஆறு வேரைக் கரைத்தது” என
பரபரப்பாக ஊரெங்கும் செய்தி!
கரகரத்த குரலில் “விரைவாக முடி” என
தொள தொளச் சட்டைக்காரர் சொல்ல
சாரைசாரையாக வந்த மக்கள்
கசகச என வியர்வை சிந்தி
மளமள என மரங்களை அகற்றிய பின்
சிலுசிலு என வீசும் காற்றில் ஓய்வாம்!
கிச்சுக்கிச்சு மூட்டியவாறு ஓய்வெடுத்தோரிருக்க
குளுகுளு ஆற்றங்கரைப் பக்கமாய்
கிளுகிளு படங்களில் வருவோரைப் போல
கலகலப்பான பேச்சோடு வாலைகள் வர
தளதளவென்று நின்ற காளைகள் நோக்க
குடுகுடு கிழவர் “காதல் அரும்புதோ?” என்றார்!
சொரசொரப்பான தாடிக்காரக் காளை
மொசுமொசுவென மயிருள்ள வாலையிடம்
குசுகுசு என்று “காதலிப்பியா?” எனக் கேட்க
சவசவ என்று முகம் சிவக்க – அவளோ
கடகட எனச் சிரித்தவாறு சொன்னாள்
தகதக என மின்னும் தன்னவரைக் கேளென்று!
விறுவிறுப்பாக உரையாடல் நடக்கையிலே
தைதை என்று ஆடினாள் அந்த வாலை
திடுதிடு என நுழைந்த அவளது கணவன்
கும்கும் என “காதலிப்பியா?” என்றவனைக் குத்த
வெடவெட என நடுங்கியது அவனது உடல்
பொலபொல எனக் கண்ணீரும் வடித்தான்!
பேந்தப்பேந்த விழித்தோரும் சிரித்தோரும்
வழவழ என்று பேசியவாறு அமைதியாக
லொடலொட எனப் பேசும் வாலை ஒருவள்
மொறுமொறு என்று சுட்ட முறுக்கு விற்று வர
சுடச்சுட வேண்டிக் கடித்துக் கொறித்துண்டு
மடமட என ஆற்று நீரைக் குடித்துக் கலைந்தனரே!

பள்ளத்தில் விழ முன்
தரதர என நண்பன் இழுத்துச் செல்ல
சதசத என்ற சேற்றில் விழுந்ததும்
குபுகுபு எனக் குருதி சிந்தாது கசிய
வடவட என உடல் வேர்க்கும் வேளை
கமகம என மணந்த பக்கம் திரும்ப
கிடுகிடு பள்ளம் தெரியக் கண்டதும்
படபட என இமைகள் கொட்ட
கிறுகிறு என்று தலை சுற்றியதே!

சுற்றுலாச் சொன்ன செய்தி!
கலகலப்பாக நண்பர்களோடு கதைத்து
அழகழகென மின்னுமிடங்களை எண்ணி
அடுக்கடுக்காகத் திட்டங்களைத் தீட்டி
மளமளவெனச் சுற்றுலாச் சென்றோம்!
சலசலவென அலைகள் வீசும் கடற்கரைகள்
பளபளவென வெயிலில் மின்னும் மலைகள்
கமகமவென மணம் பரப்பும் பூங்காக்கள்
சரசரவென ஓடியோடி உலாவந்தோம்!
புகைபுகையாய் வெண்சுருட்டை ஊதினோம்
கசக்கக்கசக்க மதுபானத்தையே குடித்தோம்
குளுகுளுவெனக் குளிரக் குளித்தோம் – ஆயினும்
சிலுசிலுவென்ற காற்றிலே கெடுநாற்றம் போகலையே!
கடகடவெனச் சிரித்து மகிழ்ந்தோம் – நாம்
கிடுகிடுவெனப் பலவிடம் போய்ப் பார்த்தோம்
புதுப்புதுச் சூழலைச் சுற்றிவரவே – ஈற்றில்
திருதிருவென ஊர்திரும்பப் பணமின்றி விழித்தோம்!
டிக் டிக் என நல்லநேரம் கரைய
பட்டுக்கெட்டுப் பொற்காலம் வீணாக
அடிக்கடி நாம் விட்ட தவறுகளால்…
பக்குப்பக்கென எங்கள் நெஞ்சு அடித்ததே!

குறிப்பு: ஒன்றிலே திட்டமிட்டு இன்னொன்றிலே கோட்டைவிடும் உறவுகளுக்காக எழுதியது.

மூலம்: http://www.ypvnpubs.com/2018/07/blog-post_25.html

பணம் உறவுக்கு அளவுகோலா?

அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்றதால்
எனக்கும் இல்லாளுக்கும்
மணமுறிவில்லைப் பாருங்கோ!
இந்தக் காலத்தில அன்புக்கும் கூட
பணம் தான் அளவுகோலாம்!
பணம் உண்டெனின்
அன்பைப் பொழிவாங்களாம்!
பணம் இல்லையெனின்
ஆளையே மாற்றிப் போடுவாங்களாம்!

பணத்தை அளவுகோலாகக் கொண்டு
அன்பு, நட்பு, காதல், திருமணம்
எல்லாம் இடம்பெற்ற பின்னே…
பணம் இல்லாத வேளை பார்த்து
அன்பு முறிவு, நட்பு முறிவு, காதல் முறிவு,
ஈற்றில் திருமண முறிவும் அமையுமாமே!

பணம் உறவுக்கு அளவுகோலா?
இல்லையே! – அது
உறவைப் பிரிக்கும் ஊடகமே!
அன்பு, நட்பு, காதல், திருமணம் – எதனையும்
பணத்தை வைத்து அரங்கேற்றாதீர்கள்! – பணம்
கைக்குக் கைமாறும் குணம் கொண்டது – அதேபோல
ஆள்களும் ஆளை ஆள் மாற்றுவாங்களே!


இந்தக் காதல் புளிக்கும்!

பதிவினை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2018/05/blog-post_23.html

சும்மா சொல்லக் கூடாது!

9496212221_c855ba7b2d_o
“நல்ல மனைவியைத் தெரிவு செய்வதில் தவறியவர்கடைசியில் சாவையே தெரிவு செய்ய முனைகின்றார்” என
பாவரசர் கண்ணதாசன் சொன்ன நினைவு!
சும்மா சொல்லக் கூடாது – சற்று
நம்மாளுங்க மூளைக்கு வேலை கொடுப்பாங்களா?
“நல்ல கணவனைத் தெரிவு செய்வதில் தவறியவர்
கடைசியில் தாலிக்கொடியைத் தூக்குக்கொடி ஆக்குகின்றார்” என
நல்ல மனைவிமாரின் சாவு பறைசாற்றுகிறதே!
சும்மா சொல்லக் கூடாது – எப்பவும்
நாலு ஆளை நல்லா கேட்டறிந்து (விசாரித்து)
நல்ல ஆளைத் தெரிவு செய்வதில் வெல்லுங்கள்!
அது தான் பாருங்கோ – நம்மாளுங்க
முடிவு எடுப்பதில் தவறு செய்வதனாலேயே
தம் வாழ்வுக்கு முடிவு தேடுவது ஆச்சோ!

முடிவு எடுக்கும் போது
அக்கம், பக்கம், முன், பின்,
கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்,
நேர் எண்ணம், எதிர் எண்ணம்,
நேர் மறை எண்ணம், எதிர் மறை எண்ணம் என
எல்லா வழியிலும் கிட்டும் விளைவுகளை
நல்லா எண்ணிப் பார்த்தே முடிவு எடுக்க வேணும்!
முடிவு எடுக்கும் போது தவறிவிட்டால்
முன்னேறும் போது இடறி விழலாம்…
சும்மா சொல்லக் கூடாது – நாம்
எடுக்கின்ற முடிவிலேயே நல்வாழ்வும் இருக்கிறதே!

முடிவு எடுத்தலை இலகுவாக்கக் கீழ்வரும் பதிவையும் படிக்கலாம்.
http://www.ypvnpubs.com/2017/02/blog-post_17.html

இறைவனின் ஒறுப்புத் தானோ!

41470891941_5b41dcd256_o

நீரிழிவுக்காரனும்
நெடும் தூரப் பயணியும்
கட்டுப்படுத்த இயலாத ஒன்று
சிறுநீர் கழித்தலையே!
கட்டுப்படுத்த இயலாத சிறுநீரை
கண்ட இடத்திலும் கழிப்பதாலே
மாற்றாருக்கு நோய்கள் உண்டாவதை
கட்டுப்படுத்த இயலாமல் போகுமே!

முழுவதும் படிக்க: http://www.ypvnpubs.com/2018/05/blog-post.html

தமிழ் இலக்கிய வழி

tev_zine_ads

வலைப்பதிவர்களையும் (Bloggers) மின்வாசகர்களையும் (eReaders) இணைக்கும் பாலமாக “தமிழ் இலக்கிய வழி” என்ற கருத்துக்களம்; மின்இதழ், மின்நூல் வெளியீட்டிற்கு வேண்டிய பதிவுகளைத் திரட்டும் நோக்கில் 2018 சித்திரைப் புத்தாண்டில் களமிறங்குகிறது. இணைப்பு: http://tev-zine.forumta.net/

தமிழ் மக்கள் நெடுநாள் நலமோடு வாழ வழிகாட்டும் தமது சொந்தப் பதிவுகளை எமது தளத்தில் இணைந்து பதிவு செய்ய முன்வாருங்கள். சிறந்த பதிவுகளுக்குப் பரிசிலும் உண்டு. எமது தளத்தில் இணைந்து தாங்கள் பதிவு செய்த பதிவுகளை மின்இதழ், மின்நூல் ஆக்கி வெளியிடுவோம்.

நடத்துநர்: யாழ்பாவாணன்

 

%d bloggers like this: