மனிதன் நாயைக் கடித்தானெனப் பேசப்படுவதான
நாட்டில வழமைக்கு மாறாக நிகழும் செயல்களை
செய்திகள் என்றெல்லோ தகவல் பரப்புவாங்க!
சில ஊடகங்களும் ஊரில சிலரும் தானே
உண்மைச் செய்திகளைப் போலப் பேசப்படுவதான
போலிச் செய்திகளைப் பரப்பி விடுவதால
குடும்பங்கள், ஊர்கள், நாடுகளென உலகிலே
பெரும் பெரும் பாதிப்புகளை விதைத்துவிடுகின்றன!
உறவுகள் முறிந்தால் சேர்த்து விடலாம் தான்…
பொருளிழப்புகள் வந்தாலும் தேடிக்கொள்ளலாமே…
உயிரிழப்புகள் நிகழ்ந்தால் எவரையும் மீட்கலாமோ?
உலகத்தில எத்தனையோ கண்டுபிடிக்கும் அறிவாளிகள்
உயிரிழந்த மனிதருக்கு உயிர்கொடுக்கக் கண்டுபிடிக்கல
உலகையே அழிக்கவல்ல போலிச் செய்திகளை
உண்மைச் செய்தியாகப் பரப்பிவிடக் கண்டுபிடித்தனரோ?
நானொரு பேயன் தெருவில விழுந்தவளைத் தூக்கிவிட
அழகான குமரியோட முட்டிமுனகியதைக் கண்டதாக
பழக்கமே இல்லாத பரதேசிமகள் அறியாமல் பரப்பிவிட
என்ர பெண்டிலோ என்னை நம்பாமல் வெட்டிவிட
கட்டையிலே வே(போ)கும்வரை தனிக்கட்டை ஆனேனே!
இலங்கையிலே என்ரநிலை இப்படியாகி இருக்கலாம்…
இந்தியாவிலே விழுந்தவளையும் தூக்கியவனையும் சேர்த்தே
வேற்றுச் சாதிக்காரன் கட்டியணைக்கவோ என்றெல்லோ
எரிபற்றெண்ணெய் (பெற்றோல்) ஊற்றியெரித்து இருப்பாங்களே!
காதலிப்பதற்கு நானொருசாதி அவளொருசாதி அவ்வளவே…
சாதிப்புரளியைக் கிளப்பிவிட்ட ஆங்கொரு கத்தரிவெருளியாலே
இலங்கையிலே ஊரைவிட்டு ஓடிமறைந்து வாழ்ந்தாலும் கூட
நானாண்சாதி பெண்சாதியவள் நாம் மனிதச்சாதி என்றாலும்
இந்தியாவிலே எம்மிருவரின் தலைகளையே அறுப்பாங்களே!
வீசும் காற்றில் கலந்துவிட்ட போலிச் செய்திகளாலே
எரியிற நெருப்பில நெய்யூற்றினால் போலவே
இனமோதலோ மதக்கலவரமோ ஊரிரண்டாகிப் போராகவோ
இலங்கையிலும் இந்தியாவிலும் அழிவது தமிழினமென்றதும்
என்நெஞ்சு வெடித்துப் பலதுண்டாகப் பிளக்கிறதே!
ஊரழிந்தென்ன உலகழிந்தென்ன கடவுளுமளிந்தென்ன
தமிழழிந்தென்ன தமிழரழிந்தென்ன யாருக்குத் தேட்டமென
பெருந்தீங்கினை விளைவிக்கும் போலிச்செய்தி பரப்பும்
ஊரவங்களாயினும் ஊடகங்களாயினும் உணரவேண்டுமே!
போலிச் செய்திகளை உள்வாங்கும் உறவுகளே…
உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே
மூளைக்கு வேலைகொடுத்து நன்றெண்ணிப் பார்த்தே
நம்பிச் செயலாற்றினால் உயிரிழப்புகளைத் தடுக்கலாமே!
முழுவதும் படிக்க…
http://www.ypvnpubs.com/2018/12/fake-news.html
Filed under: வலைப் பதிவுகள் | Tagged: செய்தி |
போலிச் செய்திகளை உள்வாங்கும் உறவுகளே…
உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே
மூளைக்கு வேலைகொடுத்து நன்றெண்ணிப் பார்த்தே
நம்பிச் செயலாற்றினால் உயிரிழப்புகளைத் தடுக்கலாமே
உண்மை உண்மை
LikeLike