உலகெங்கும் தமிழ் வாழ வேணும்!

இசையும் காற்றும் போல – அழகான
எழுத்தும் பொருளுள்ள சொல்லும் வேணும்
இசை பாடும் காற்றிலே – நாமும்
எமது எண்ணங்களை வெளியிட வேணும்
தோலும் தசையுமாக – நாமும்
மொழியோடு இணைந்தே வாழ வேணும்
எதுகையும் மோனையும்
முட்டி மோதி விளையாட வேணும்
உவமையும் ஒப்பீடும்
அணி அணியாக விளையாட வேணும்
தாய்மொழியாம் நற்றமிழால்
எண்ணும் எழுத்தும் சொல்ல வேணும்
சுற்றமும் சூழ்ந்தோரும்
நன்றே தமிழைப் படிக்க வேணும்
தமிழைப் படித்த பின்னே
உலகெங்கும் தமிழ் வாழப் பேண வேணும்!
தமிழைப் பரப்பிப் பேண
உலகத்தார் தமிழைப் பயில வேணும்
உலகெங்கும் தமிழ்
எட்டுத் திக்கும் பட்டுத் தெறிக்க வேணும்
தமிழ் வளம் மின்ன எழுத வேணும்
எழுத எழுத இலக்கியம் மலர வேணும்
தமிழ் மணம் வீசப் பேச வேணும்
பேசப் பேச இயற்றமிழ் முழங்க வேணும்
இசையால் கட்டுண்டு விழப் பாட வேணும்
பாடப் பாட இசைத்தமிழ் ஒலிக்க வேணும்
அழுகையும் கண்ணீரும் வர நடிக்க வேணும்
நடிக்க நடிக்க நாடகத்தமிழ் பார்க்க வேணும்
இயல், இசை, நாடகம் இயல்பாய் பரவ வேணும்
உலகெங்கும் தமிழ் வாழப் பேண வேணும்!

முழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.
http://www.ypvnpubs.com/2018/09/blog-post.html

 

One Response

  1. ​.ரசித்தேன்.​

    Like

Comments are closed.

%d bloggers like this: