பாப்புனைவது பற்றிய தகவல்

தமிழ் இலக்கிய வரலாற்றில்
மு.கருணாநிதி அவர்களின்
இலக்கியத்துக்கு ஆற்றிய பங்கினை
தமிழ் வாழும் வரை – நம்மாளுங்க
உச்சரித்த வண்ணம் இருப்பார்கள்!
கலைஞர் கருணாநிதி – அவரது
இலக்கியப் படைப்புகளில் தான்
மறைந்து இருக்கின்றார்! – அவர்
மறைந்து விட்டார் என்பதை
நான்
ஒரு போதும் ஏற்கமாட்டேன்!


பாப்புனையச் சில தகவல்


எதுகை, மோனை, உவமை, ஒப்பீடு
எதுவுமற்ற எழுத்துகளால்
வரிவரியாகத் தொகுத்த பொய்கள்
என்றும் பா ஆகிவிடாதே!
எண்ணி எண்ணி எழுதித் தான்
எதுகை, மோனை முட்டிக்கொள்ள
உவமை, ஒப்பீடு சுட்டிக்காட்ட
வரிவரியாகத் தொகுத்த உண்மைகள்
என்றும் பா ஆகிவிடாதே!
ஏமாறத் தூண்டிய பொய்கள்
உள்ளத்தை நோகடித்த மெய்கள்
சொல்லத் தோன்றிய எண்ணங்கள்
மெல்ல எழுதத் தூண்டவே
மோனைகள் மோதிக்கொள்ள
எதுகைகள் துள்ளிக்குதிக்க
உவமைகள் ஈர்த்துக்கொள்ள
ஒப்பீடுகள் சுட்டிக்காட்ட
வரிவரியாகத் தொகுத்துக்கொள்ள
வந்தமைவதே ‘பா’ என்கிறார்கள்!
எழுத்து, அசை, சீர், தளை,
அடி, தொடை, அணி, நடை
அடுத்துப் பா, பாவினம் என்றிட
அங்கும் வண்ணத்துப் பா வருமென்றும்
எடுப்பு, தொடுப்பு, கண்ணி, இசையென
பண்ணத்திப் பா (இசைப் பாடல்) வருமென்றும்
யாப்பறிந்த பாவலர் அழகுறச் சொல்வார்!
எந்தன் எழுத்தும் “பா” ஆகாமலே
“பா” நடையிலே புனைவதனாலே
புதுப்பா என்றால் இப்படித் தானென
இணைய வழி, வலைப்பக்க வழி
புதுப்பா புனைவோரிடம் மோதவியலாது
பின்வாங்கும் எளியவன் ஆனாலும்
“பா” பற்றிய தகவலைப் பகிர்ந்தேனே!

முழுவதும் படிக்க: http://www.ypvnpubs.com/2018/08/blog-post_12.html

One Response

Comments are closed.

%d bloggers like this: