எழுதத் தூண்டின எழுதினேன்!

நம்பிக்கை


கடவுள் இருப்பதனால் தான்
நீங்கள் வாழ்கிறீர்கள் – அந்த
கடவுளுக்கு நன்றி கூறுங்கள்!
கடவுள் இல்லை என்போரும்
வாழ்கின்றனர் தான் – அதற்கு
தன்னம்பிக்கை தான் மருந்து!
கடவுள் இருக்கிறரோ இல்லையோ
நாங்கள் இருக்கிறோம் என்றால்
ஏதோ ஒரு நம்பிக்கை தான்
எம்மை வாழ வைக்கிறதே!
வெறுப்புகளைச் சுமப்பவர்களே – அதை
கொஞ்சம் இறக்கி வைத்தால் தானே
நம்பிக்கை மலரும் என்பேன்!
உருள மறுக்கும் உலகையே
நம்பிக்கை என்ற கருவியால்
உருட்டிக் கொண்டே இருக்கலாம்!
நீங்களும்
ஊக்கம் பெற்று உயரப் பறக்கலாம்!!

எழுதத் தூண்டின எழுதினேன்!

“என்னைப் பற்றி
நன்கறிய விரும்பினால் – என்
எதிரியைக் கொஞ்சம் கேட்டறி (விசாரி)
நான் சொல்வதை விட
அவர்கள் தான் அதிகம் சொல்வார்கள்!”
என்றவாறு
பாவலர் மூ.மேத்தா சொன்ன நினைவு!
அதனையே
உள்ளத்தில் இருத்தி
“என்னைப் பற்றி
என்னிடம் கேட்டுப் பயனில்லையே!
எதிரியிடம் கேளுங்கள்…
என்னைப் பற்றி அ – ஃ வரை
அப்படியே சொல்லுவார்கள்!”
என்றவாறு
நானும் பாப்புனைய முனைந்தேன்!
அதற்கு அடுத்தபடியாக
“ஊருக்குள்ளே வந்தும்
நாலாளுகளைக் கேட்டுப் பாருங்கள்
என்னைப் பற்றி எல்லாமே
உள்ளதை உள்ளபடி உரைப்பார்கள்!”
என்றவாறு
பொதுவான எண்ணத்தையும் பகிர்ந்தேன்!
இதற்கெல்லாம்
“வெறித்தும் முறைத்தும் சிரித்தும்
எல்லோரும் என்னைப் பார்க்க…
நானும் கையில காசின்றி
அழுவாரைப் போல அலைய
அதனை
ஏழு தலைமுறைப் பணக்காரன்
பிச்சை எடுப்பதைப் பாரென்று
எதிரிகள் சிலர் பரப்பி விட்டனரே!
என்றவாறு
பட்டறிந்தவையே எழுதத் தூண்டின!

முழுவதும் படிக்க: http://www.ypvnpubs.com/2018/08/blog-post.html

6 Responses

  1. கடவுள் என்கிற சக்திக்கு பாரபட்சம் கிடையாது!

    Like

  2. தொடர வாழ்த்துகள்…

    Like

  3. நன்று.

    2018-08-07 5:18 GMT+05:30 யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்! :

    > yarlpavanan posted: “நம்பிக்கை கடவுள் இருப்பதனால் தான் நீங்கள்
    > வாழ்கிறீர்கள் – அந்த கடவுளுக்கு நன்றி கூறுங்கள்! கடவுள் இல்லை என்போரும்
    > வாழ்கின்றனர் தான் – அதற்கு தன்னம்பிக்கை தான் மருந்து! கடவுள் இருக்கிறரோ
    > இல்லையோ நாங்கள் இருக்கிறோம் என்றால் ஏதோ ஒரு நம்பிக்கை தான் எம்மை வாழ”
    >

    Like

  4. என்னைப் பற்றி
    என்னிடம் கேட்டுப் பயனில்லையே!
    எதிரியிடம் கேளுங்கள்…
    என்னைப் பற்றி அ – ஃ வரை
    அப்படியே சொல்லுவார்கள்!”
    என்றவாறு

    அருமையான வரிகள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    Like

  5. சிறப்பு

    Like

Comments are closed.