காதலர் நாள் படிப்பு

kaadhal_love

30 ஆண்டுகளுக்கு முன்
(இப்ப எனக்கு 50)
நான்
காதலிக்க நினைத்த எவரையும்
என்னால் காதலிக்க முடியவில்லை…
எவளோ
என்னைக் காதலிக்க நினைத்தாலும்
அவளால் காதலிக்க முடியவில்லை…
வாழ்வில்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
கடவுளை நினைப்பவர் எவர்?
சிலர் ஒரு தலைக் காதலாக
சொல்லிக் கொள்ளாமல் இணைவதில்லை
சிலர்
காதலைச் சொல்லி இணைந்தாலும்
திருமணம் வரை செல்வதில்லை
சிலர்
திருமணமான பின்னர் காதலிப்பதும்
(நானும் என்னில்லாளும் போல)
வாழ்வில் நிகழ்ந்தே தீரும்
ஆதாலால்,
உள்ளங்கள் உரசுவதால்
ஊற்றெடுக்கும் அன்பால் (காதலால்)
உறவாடும் உறவுகள் எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!
அதுவும்
வலன்டைன் நினைவாய் – எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!

முழுமையான காதலர் நாள் படிப்பைத் தொடர, என் முதன்மைப் பக்கம் வருக.
http://www.ypvnpubs.com/2018/02/blog-post_14.html

Advertisements
%d bloggers like this: