2018 தை பிறந்தால் உன் செயலென்ன?

படைப்பின் கமுக்கம் (இரகசியம்)

கடவுள் மனிதனைப் படைத்தார் – அத்துடன்
அவரது பணி முடிந்து விட்டது – அடுத்து
ஆக்குவதும் அழிப்பதும் மனிதன் தான் – அதன்
விளைவுகளைச் சந்திப்பதும் மனிதன் தான் – அதற்கான
அத்தனையும் மனிதனுக்குள் படைத்தவர் கடவுளே!

கடவுளும் அஞ்சுவார்!

ஒரு பக்கத்தில்
எம்மை விழவைத்து
வேடிக்கை பார்க்கும் ஆள்கள்
மறு பக்கத்தில்
விழவைக்கும் வீதிகளின் நிலை
நடுவே நாளும்
விழுந்தெழும்பிப் பயணிக்கும்
நம் வாழ்க்கையை
தன்னம்பிக்கையோடு ஏற்று
வாழத் துணிந்து விட்டால்
கடவுளும்
உன்னைக் கண்டு அஞ்சுவார்!

பின் விளைவு

அன்று
குப்பையில் போட்ட குண்டு மணியும்
ஒரு நாள் தேவைப்படலாம்!
இன்று
என்னைச் செத்துப் போனானென்று
கழித்துவிட்டவர்களும் ஒதுக்கிவைத்தவர்களும்
காலில் விழுந்து வணங்குகின்றனர்!
ஓ! உறவுகளே!
காலமும் நேரமும் தேவையும்
ஒன்றிணைந்துவிட்டால்
குப்பையில் போட்ட எம்மையும்
தேவையெனத் தேடியலைவோர் இருக்கலாம்!
என்றும்
எமது தன்னம்பிக்கையே
எல்லோரையும்
எங்கள் காலில் விழவைக்கிறதே!

முழுமையாகப் பதிவினைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2018/01/2018.html

Advertisements

One Response

  1. மிகவும்அருமையாக உள்ளது பாராட்டுகள்

    Like

Comments are closed.

%d bloggers like this: