வாசிப்புப் போட்டி நன்மை தருமா?

readingcompetition

அன்றைய ஆள்களைப் போல
இன்றைய ஆள்களில்
வாசிப்பு நாட்டமுள்ளோரை
காணமுடியவில்லையே!

இன்றைய ஆள்களில்
வாசிப்பு நாட்டமுள்ளோரை
அடையாளம் காண
எங்கட முட்டாள் யாழ்பாவாணன்
வாசிப்புப் போட்டி நடாத்துறாராம்!

யாழ்பாவாணனின் வலைப்பூவைக் கூட
வாசிக்க ஆள் இல்லையாம் – அவரது
வாசிப்புப் போட்டியை எவரறிவார்?
மறக்காமல் பகிருங்கள்…
வாசிப்புப் போட்டி – 2016
https://seebooks4u.blogspot.com/2016/10/2016.html

நாளைக்கோ
வாசிப்புப் போட்டி – அதை
இன்றைக்குப் பகிர்ந்தால் பயனேது?
அதைத் தான் – நானும்
சொல்ல வரவில்லை – ஆனால்
வாசிப்புப் போட்டியால்
பயனேதும் கிட்டுமா என்றறிய வந்தேன்!

வாசிப்பதால் நம்மாளுங்க
அறிவாளி ஆகுவாங்க…
வாசிப்பதால் நம்மாளுங்களுக்கு
உள (மன) நோய் நெருங்காதாமே…
ஆளுக்காள் இப்படிப் பல சொல்லியும்
வாசிப்பு நாட்டமோ ஏற்படவில்லையே!
இனி
யாழ்பாவாணன் “வாசிப்புப் போட்டி” நடாத்தியும்
வாசிப்பு நாட்டம் ஏற்பட்டுவிடுமா?

உறவுகளே! இம்முயற்சி பற்றிய உங்கள் வழிகாட்டலையும் மதியுரையையும் தெரிவிக்க மறவாதீர்கள்!

Advertisements