வெற்றிகரமாக வலைப்பூ நடாத்தலாம் வாங்க…

இப்பவெல்லாம் வலைப்பூப் பதிவர்கள் முகநூல் பக்கம் ஓட்டம் பிடிக்கையில், வலைப்பூப் பதிவர்களுக்கான வழிகாட்டலைப் பகிருவதனால் நன்மை கிட்டாது. ஆயினும் முகநூல் பக்கப் பதிவர்கள் வலைப்பூப் பக்கம் ஓட்டம் பிடித்து வரலாம். அவர்களுக்காகவும் புதிய வலைப்பூப் பதிவர்களுக்காகவும் வலைப்பூக்களில் பற்று வைத்துத் தொடர்ந்து வலைப்பூ நடாத்துவோருக்காகவும் சில வழிகாட்டல் குறிப்புகளைத் தரலாம் என விரும்புகிறேன்.

அச்சு ஊடக எழுத்துகளில் எழுத்துடன் இயங்காத/ பேசாத படங்கள் இணைக்கலாம். ஆனால் மின் ஊடக (வலைப்பூ – Blog) எழுத்துகளில் இயங்காத/ பேசாத படங்கள், இயங்கும்/ பேசும் படங்கள், ஒலி இணைப்பு (Audio), ஒளிஒலி இணைப்பு (Video) எனப் பல இணைக்கலாம். எதுவாயினும் பதிவின் கருப்பொருளை விழுங்காது; பதிவின் கருப்பொருளுக்கு உயிரூட்ட உதவும் வகையில் அளவாக, அழகாக இணைக்கலாம்.

அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் எதுவும் தமக்கெனத் தனி அடையாளத்தைப் பேணுகின்றன. அவற்றில், உங்கள் பதிவுகள் இடம்பெறுமாயின் அதிக வாசகர்களைச் சென்றடையும். ஆனால், வலைப்பூவில்(Blog) அதெல்லாம் கிடையாது. அதற்காக வலைப்பூவில்(Blog) பதிவுகளை இடுகை செய்த பின், அதன் இணைப்பைத் திரட்டிகளிலும் மக்களாய (சமூக) வலைத்தளங்களிலும் பகிருகிறார்கள். அதுவும் எனக்கு நிறைவைத் தரவில்லை.

இப்பதிவை முழுமையாகப் படிக்க எனது புதிய வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். இதோ இணைப்பு: http://www.ypvnpubs.com/2016/08/blog-post_17.html

 

Advertisements

3 thoughts on “வெற்றிகரமாக வலைப்பூ நடாத்தலாம் வாங்க…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.