நீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை!

——————————–
——————————–
பெயருக்குத் தான் தமிழ் மொழியில்
வலைப் பூக்கள் வைத்து இருந்தாலும்
ஆங்கில மொழிக் கலப்புப் பதிவுகளையே
எங்கள் கண்களும் பார்த்துக் களிக்கின்றன!

நான் தமிழ் மொழியில் பதிவுகளை வெளியிட்டு உதவுமாறு எல்லோரிடமும் கேட்டுக்கொள்வதுண்டு. அதற்காகப் பிற மொழிகளைத் தமிழுக்குள் நுழைக்கக் கூடாது என்று நான் சொன்னதில்லை. பிற மொழிகளைத் தமிழ் எழுத்துகளால் எழுத வேண்டாமென்றே சொன்னேன். பிற மொழிகளை நேரடியாகவோ அடைப்புகளுக்குள்ளோ எழுதலாம் தானே!
——————————–
——————————–
உண்மையில் ஊடகங்கள் தமது பெயர்களைத் தமிழில் தான் வைக்காவிட்டாலும் தமது நிகழ்சிகளை அல்லது தமது பதிவுகளை எப்போதும் தனித் தமிழில் வெளிப்படுத்தலாமே! வேலியே பயிரை மேய்ந்தாற் போல ஊடகங்களும் தனித் தமிழில் தமது வெளியீடுகளைத் தராவிட்டால், தமிழ் எப்படித் தப்பிப் பிழைக்கும்? இதற்கான பதிலை வலை ஊடகப் பதிவர்களாகிய நாமும் சொல்லித் தான் ஆகவேண்டும். அதேவேளை இதற்கான பதிலை ஊடகங்கள் எப்படி முன்வைக்க இருக்கின்றன. அவர்களின் பதிலில் தான் தமிழ் வாழுமா? அல்லது தமிழ் சாகுமா? என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறதே!

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/07/blog-post_16.html

Advertisements