உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!

இனிய வலைவழி உறவுகளே!
1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று ‘உலகமே ஒருகணம் சிலிர்த்தது.’ என்ற அடியில் தொடங்கிய எனது கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் சில பத்திரிகைகளில் பல பதிவுகள் வெளியாகின. இது என் தொடக்க காலம்.

2009 கார்த்திகையில் தான் வலை வழியே என் பதிவுகளைப் பகிர முன்வந்தேன். 2010 இல் தமிழ்நண்பர்கள்.கொம் தான் எனக்கு முதலில் கைகொடுத்தது. பின்னர் வலைப்பூக்களை நடாத்த இறங்கினேன். பின் மின்நூல்களைக் களஞ்சியப்படுத்திப் பகிர்ந்தேன்.

ஆனால், இன்று அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக்கி வெளியிட்டு; இணையக் களஞ்சியத்தில் திரட்டி உலகெங்கும் பகிர விரும்புகிறேன். எனது யாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் துணைப் பணியாக தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி எனப் புதிய தளத்தில் இதனைச் செயல்படுத்தவுள்ளேன்.

எனது புதிய தளத்தை கீழ்வரும் முகவரிகளில் (URL) ஒன்றைத் தட்டச்சுச் செய்து உலாவியில் (Browser) பார்வையிடலாம்.
http://tebooks.friendhood.net/
அல்லது
http://tebooks.2ya.com/

மேலதிகத் தகவலுக்கு எனது புதிய தளத்தில் “யாழ்பாவாணன் வெளியீட்டகம் – அறிவிப்புகள்” என்ற தலைப்பின் கீழுள்ள பதிவுகளைப் படிக்கவும். பின்னர் புதிய தளத்தில் இணைந்து எனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணிக்கு ஒத்துழைப்புத் தருவீர்கள் என நம்புகின்றேன். இச்செய்தியை உங்கள் நட்புகளுடன் பகிர்ந்து உதவுங்கள்.

Advertisements