கதை, கட்டுரை எழுதினால் இரண்டு இலட்சமா? – அருமையான போட்டி

உரூபா ஒரு இலட்சம் பரிசுத் தொகை கொண்ட உலகளாவிய சிறுகதைப் போட்டி மட்டுமல்ல, உரூபா ஒரு இலட்சம் பரிசுத் தொகை கொண்ட “தாயெனும் கோயில்” என்ற தலைப்பிலான உலகளாவிய மற்றொரு போட்டியும் உண்டு. இரண்டு போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றி பெற்றால் ஆக மொத்தம் இரண்டு இலட்சம் கிடைக்குமே!

புதிய பதிவர்களுக்காக ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஊக்க மருந்தைத் தரலாம் என எண்ணுகிறேன்.

தேநீருக்கு எழுந்த வேளை…

நான் இடப்பெயர்வின் போது எனது பெற்றோரைப் பிரிந்து பிறிதொரு இடத்தில் வாழ்ந்தேன். அவ்விடத்தில் நானே தேநீர் ஊற்றிக் குடிக்க வேண்டிய நிலை. அதுவும் மாசிப் பனி மூசிப் பெய்கின்ற வேளை, காலையில் எழுவதே சிக்கல் அதாவது குளிர் என்னை வாட்டுமே!

குளிரை முறித்து எழுந்த வேளை பகலவன் வெறித்துக் காய்த்தான். எப்படியும் ஏழு மணி ஆகியிருக்கும். அடுப்பு மூட்டித் தேநீர் ஊற்றிக் குடிக்கையில் ஏழரை மணி ஆகியிருக்கும். எனக்கு இதெல்லாம் பெருந்துன்பம். என்னை ஈன்ற தாய், நாலரை மணிக்கு எழுந்து தேநீர் ஊற்றி என்னை ஐந்து மணிக்குப் படுக்கையாலே எழுப்பி ஊட்டிவிட்ட நாள்களை எண்ணிப் பார்க்கிறேன்.

நானுணர்ந்த பெருந்துன்பம் போல, என் தாயவள் எத்தனையோ பெருந்துன்பங்களை அடைந்திருப்பார். இப்படித் தான் 281 நாள்கள் வயிற்றில் சுமந்து, பின் 21 அகவை (வயது) ஆண் சிங்கம் ஆக்கும் வரை எத்தனை கோடி துன்பங்களை அடைந்திருப்பார். அந்தத் தாயை இந்தத் தேநீர் ஊற்றிக் குடிக்கையில் எண்ணிப் பார்க்கிறேன்.

இது “தாயெனும் கோயில்” என்ற போட்டிக்கான ஊக்க மருந்து. இப்படி உங்கள் தாயன்பை வைத்து A-4 அளவு காகிதத்தில் மூன்று முதல் நான்கு பக்கங்களுக்குள் தமிழில் எழுதி அனுப்பலாம் தானே!

தெருவீதியில் ஆணொருவரைப் பெண்ணொருவள் அடிக்கின்றாள். பின் அமைதியாக இருவரும் பிரிந்து செல்கின்றனர். இந்தக் காட்சியை உள்ளத்தில் வைத்து எழும் எண்ணங்களைத் தொகுத்துக் கதை ஒன்றைப் புனைந்து பாருங்கள்.

முழுவிரிப்பையும் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/03/blog-post_27.html

Advertisements