ஆண்டவனுக்கு (கடவுளுக்கு) என்ன வேலை?

ஆண்டவன் ஒருவர்
ஆண்டவனை அடைய அறநெறி (மதம்) ஒன்று
அது தான் உண்மை!
நம்மாளுங்க
ஆளுக்கொரு அறநெறியைப் (மதத்தைப்) பின்பற்றுவதால்
எனக்கு இப்படித்தான் பா/கவிதை வருகிறதே!

நம்மாளுங்க நிலையைப் பார்த்த
ஆண்டவன் கண்ணீர் வடிக்க – அது
மழையாக வந்து மலையுச்சியில் வீழ்ந்து
நாலா பக்கமும் வழிந்தோட
வீழ்ந்த மழை நீர் அருவியாகப் பெருகி
கடலோடு கைகுலுக்கிக் கலந்துவிடுகிறதே!

கலந்த மழை நீர்
கடல் நீர் நிலையை உயர்த்த
உயர்ந்த கடல் நீர் நிலையால்
தரைவாழ் நம்மாளுங்க சாகாமல் இருக்க
கடல் நீரை உறிஞ்சவே
ஆண்டவனும் பகலவன் (சூரியன்) ஆனாரே!

முழுமையாக இப்பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/02/blog-post_28.html

Advertisements

One thought on “ஆண்டவனுக்கு (கடவுளுக்கு) என்ன வேலை?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.