மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்

முந்தியெல்லாம் யாழ்பாவாணன் எமது வலைப்பூக்களுக்கு அடிக்கடி வருவார். இப்பவெல்லாம் அத்தி புத்தாற் போல அருமையாக வந்து தலையைக் காட்டுகிறார் என்றெல்லாம் நீங்கள் நினைக்கக்கூடும், விரைவில் தங்கள் வலைப்பூக்களுக்கு அடிக்கடி வருவேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். மேலும்,

2016 சித்திரைப் புத்தாண்டிலிருந்து வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூலாக்கும் பணியினைத் தொடங்கவுள்ளேன். இனி வரும் காலங்களில் நமது உறவுகள் நெருக்கமடையும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாழ்பாவாணன் வெளியீட்டகத்தின் பணியே மின்பொத்தகங்களை வெளியிட்டு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவுவதாகும். இதுவரை எனது இரண்டு மின்பொத்தகங்களையும் நண்பர் ‘தனிமரம்’ வலைப்பூ அறிஞர் நேசனுக்காக ஒரு மின்பொத்தகத்தையும் வெளியிட்டுள்ளேன். அந்த வகையில் ஒரு மின்பொத்தகம் / மின்நூல் உருவாக்கி வெளியிட நான் மேற்கொண்ட முயற்சிகளைத் தங்களுடன் பகிரலாமென விரும்புகிறேன்.

மின்பொத்தகம் / மின்நூல் வெளியிடும் வேளை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். அந்த நோக்கம் வாசகரின் விருப்பங்களை நிறைவேற்றத் தவறுமாயின் மின்நூலோ அச்சடித்த நூலோ தோல்வியில் தான் முடியும். அதாவது, வாசகர் வாசிக்க விரும்பாத நூல்கள் எவர் கையில் தவழும்? அப்படியாயின் வாசகர் விரும்பும் நூல்கள் எப்படி இருக்கும்? வாசிப்பதால் வாசகர் மகிழ்ச்சி அடைய வேண்டும் அல்லது வாசகர் தேடல் (வாசகருக்குப் பயன்தரும் தகவல்) உள்வாங்கப்பட்டு இருக்க வேண்டும். இவ்விரண்டையும் விரும்பும் வாசகர்களுக்கு ஏற்ப மின்நூல் வெளியிட விரும்பும்

எல்லோரும் தொடர்ந்து படியுங்கள்.

முதலில் மின்நூலுக்கான தலைப்பைத் தீர்மானிக்கவும். அதாவது, மின்நூலின் உள்ளடக்கத்திற்கான உயிராக அத்தலைப்பு அமையட்டும். அடுத்து மின்நூல் தலைப்பைச் சார்ந்த பதிவுகளைத் தொகுக்கவும். அடுத்துத் தாளின் அளவு, எழுத்தின் அளவு, நிறங்கள், அட்டைப் படங்கள் போன்ற நூலின் அமைப்பைத் தீர்மானிக்கவும். எல்லாம் ஒழுங்காக இருந்தால், கணினியில் தட்டச்சுச் செய்யலாம். அதற்குக் கீழ்வரும் வழிகளைக் கையாளுங்கள்.

அ) முற்பகுதித் தொகுப்பு
1. முன் அட்டை
2. உரிமம் (Creative Commons license)
3. மின்நூல் பற்றிய தகவல்
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.

ஆ) உள்ளடக்கத் தொகுப்பு
4. வெளியீட்டாளர் உரை, நூலாசிரியர் உரை, ஏனைய உரைகள், நூலின் உள்ளடக்கம் (Table of contents) ஆகியவற்றை உரோம எண்ணைப் பக்க எண்களாக இட்டுத் தொகுக்கவும்.
5. மின்நூலில் உள்வாங்கப்பட்ட பதிவுகளைத் தொகுக்கவும். ஒவ்வொரு பதிவும் புதிய பக்கத்தில் தொடங்க வேண்டும். இடைவெளிகள் இருப்பின் இடைச்செருகலாக குட்டித் தகவலை நுழைக்கலாம். இவ்வாறு இந்து அராபிய எண்ணைப் பக்க எண்களாக இட்டுத் தொகுக்கவும்.
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.

இ) பிற்பகுதித் தொகுப்பு
6. உங்கள் விருப்பப் பக்கம் (எடுத்துக்காட்டாக அடுத்த வெளியீடு பற்றிக் குறிப்பிடலாம்)
7. பின் அட்டை
இவை முறையே தனித்தனியாக PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும்.

இவ்வாறு தட்டச்சுச் செய்து PDF நுட்பக் கோப்பாகச் சேமித்து வைத்த பின், எல்லாத் தனித்தனி PDF கோப்புகளையும் 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற ஒழுங்கில் ஒருங்கிணைத்து (Merge) ஒரே ஒரு தனி PDF நுட்பக் கோப்பாகச் சேமிக்கவும். இந்தத் தனி PDF நுட்பக் கோப்பைத் தான் மின்பொத்தகம் / மின்நூல் என்கிறோம். இவ்வாறு மின்நூலாக்கத் தேவையான கணினி மென்பொருள்களைக் கீழே தருகின்றேன்.

இதனைத் தொடர்ந்து வரும் பகுதிகளுடன் முழுமையான பதிவைப் படிக்க மற்றும் வழிகாட்டல் இணைப்புகளைப் பெறக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

 http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

Advertisements

One thought on “மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.