எழுது முன் எது கவிதை என்றறிந்திடு!

கட்டுரை வரிகளை உடைத்து ஆக்குவதோ
கதை உணர்வுகளை ஒழுங்கு படுத்துவதோ
உரை நடையாக எழுதியதைச் சிதைத்தோ
சொல்களைக் குழுவாக ஆக்கியோ – சொல்களை
அங்கும் இங்குமாய் அழகாக அடுக்கியோ
புனைவது எல்லாம் பா (கவிதை) ஆகாதே!

“கல கலவென கதைத்துக் கொண்டிருந்த கவிதா, காத்தானின்
நினைவுவரத் துளித் துளியாகக் கண்ணீர் வடிக்கிறாள்.” என
உணர்வினை அப்படியே எழுதினால்
வரிப் பா (வசன கவிதை) என்கிறோம்!

“ஆளும் ஆளும் நேருக்குநேர் நோக்கவே
கண்ணும் கண்ணும் வெட்டாமல் பார்க்கவே
“பாய்ந்தது அன்பு!”
” என ஈரடிச் செயலும் ஈற்றடிச் செய்தியாய்
புனைவது துளிப்பா (ஹைக்கூக் கவிதை) என்கிறோம்!

“யாழ்பாவாணன் பாப்புனையக் கற்றுத்தர வந்தாராம்
வாழ்க்கையில் தொல்லையாம் அடிக்கடி தொடராராம்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களோ தளராராம்
பாப்புனைய உதவும் பதிவுகளைப் பகிருவாராம்”
என
முதலிரு அடிகளில் யாழ்பாவாணனின் இழுபறியும்
ஈற்றிரு அடிகளில் பிறர் பதிவுகளின் பகிர்வுமாக
என யாழ்பாவாணனை நையாண்டி (கேலி) செய்து
புனைவது மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) என்கிறோம்!

“பள்ளிக்குப் போற பொண்ணு – மாலையில்
பள்ளி ஆசிரியர் வீட்டில படிக்க போனாளாம்.
தேர்வு எழுதிய பள்ளிப் பொண்ணு – தேர்வில்
எல்லாப் பாடத்திலும் குறைந்த மதிப்பெண்ணாம்.
“உருளும் நினைவில் காதலாம்…”
” என நான்கடிச் செயலும் ஈற்றடிச் செய்தியாய்
புனைவது குறும்பா (லிமரிக்) என்கிறோம்!

“கழுத்தில தங்கச் சங்கிலி
திறந்த மேற்சட்டை
எடுப்பான நடை
எல்லாம்
தெருவால போன பெண்ணை ஈர்த்திட – அவளும்
காளை மேலே கண்ணைப் போட்டாள்!
காளையின் கழுத்தில மின்னியது
போலித் தங்கச் சங்கிலி என்றறிய – வாலையும்
காளையைக் கைகழுவி விட்டாளாம்!” என
உணர்வு வீச்சாகத் தொடுத்துப் புனைவதும்
புதுப்பா (புதுக் கவிதை) என்கிறோம்!

பா (கவிதை) புனைய விரும்பும் – எவரும்
பாப்புனைய முன் ‘எது கவிதை’ என்றறிந்தாலும்
பாவிற்கு (கவிதைக்கு) இலக்கணம் இருப்பதை
மறக்க இயலாதே – எப்படி இருப்பினும்
இலக்கியம் தோன்றிய பின்னர் தான்
இலக்கணம் தோன்றியது என்றெண்ணி
இலக்கணம் அறியாமல் புனைவது எல்லாம்
பா (கவிதை) என்றமையாது என்பேன்!

மிகுதியைப் படிக்க கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_14.html


உறவுகளே! உங்கள் வலைப்பூக்களை
‘ஊற்று’ திரட்டியில் இணைத்து – உங்கள்
பதிவுகளைப் பரப்பலாம் வாருங்கள்!
http://ootru.yarlsoft.com/

Advertisements

6 thoughts on “எழுது முன் எது கவிதை என்றறிந்திடு!

    • 2016 தைப்பொங்கல் நாளில்
      கோடி நன்மைகள் தேடி வர
      என்றும் நல்லதையே செய்யும்
      தங்களுக்கும்
      தங்கள் குடும்பத்தினருக்கும்
      உங்கள் யாழ்பாவாணனின்
      இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    • 2016 தைப்பொங்கல் நாளில்
      கோடி நன்மைகள் தேடி வர
      என்றும் நல்லதையே செய்யும்
      தங்களுக்கும்
      தங்கள் குடும்பத்தினருக்கும்
      உங்கள் யாழ்பாவாணனின்
      இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    • 2016 தைப்பொங்கல் நாளில்
      கோடி நன்மைகள் தேடி வர
      என்றும் நல்லதையே செய்யும்
      தங்களுக்கும்
      தங்கள் குடும்பத்தினருக்கும்
      உங்கள் யாழ்பாவாணனின்
      இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.