‘ஊற்று’ வலைப்பூப் பதிவுத் திரட்டியில் இணையலாம் வாங்க!

உலகெங்கும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப் பதிவர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். நான் ஏற்கனவே http://tamilsites.doomby.com/ என்ற தளமூடாகத் தங்கள் தங்கள் வலைப்பூக்களை இணைக்குமாறு பணிவாகக் கேட்டிருந்தேன். அத்தளத்தில் நூறுக்குக் குறைவான வலைப்பூ முகவரிகளே இணைக்கப்பட்டிருந்தன. ஆயினும், இன்று உங்களை ” ‘ஊற்று’ வலைப்பூப் பதிவுத் திரட்டியில் இணையலாம் வாங்க!” என்று அழைக்கின்றேன்.

இத்திரட்டி உங்கள் புதிய பதிவுகளைத் தானியங்கி (Automatic) முறையில் திரட்டி வெளியிடும். அதேவேளை பதிவுச் சுருக்கம், பதிவுத் தலைப்பு எல்லாமே இங்கு எழுமாறாகப் (Randomise) பார்வையிட முடியும். கூகிளின் Dynamic Feed Control Wizard ஐப் பயன்படுத்தி இத்திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் எனலாம். ‘ஊற்று’ குழுவினரின் ஒத்துழைப்பே எனது இம்முயற்சிக்கு உந்துதலாக இருந்தது.

‘ஊற்று’ திரட்டியில் நடுப் பகுதியின் மேல் பகுதியில் மாறும் திரையில் இணைக்கப்பட்ட பதிவுகளின் சுருக்கம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த மாறும் திரையிற்குக் கீழே உங்கள் வலைப்பூவின் பெயரும் இணைக்கப்பட்ட புதிய பதிவின் தலைப்பும் காணப்படும். எல்லாமே இங்கு எழுமாறாகப் (Randomise) பார்வையிட முடியும். அதாவது இணைக்கப்பட்ட ஒழுங்கின்றி எவரது பதிவும் நடுப் பகுதியின் மேல் பகுதியில் தோன்றும். ‘ஊற்று’ திரட்டிக்கான கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

http://ootru.yarlsoft.com/

இப்பதிவின் முழுவிரிப்பையும் படிக்க, இத்திரட்டியில இணையும் முறையை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://www.ypvnpubs.com/2016/01/blog-post.html

Advertisements