வெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா?

23651220735_167bd78353_o

பொருண்மிய இழப்பென்றால் எவராவது உதவி செய்து சரிப்படுத்தலாம். மனித உயிரிழப்பு என்றால் எப்படி ஈடு செய்வது? அதேபோல விருப்புக்குரிய உடைமைகளை இழந்தாலும் கூட, எங்காவது தேடிப் பிடித்து வேண்டிக்கொள்ளலாம். ஆனால், விருப்புக்குரிய மனித உறவுகளை இழந்தால் எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? இக்கேள்விகளுக்குப் பதில் தரமுடியாதுள்ள வேளை, இவ்வாறு பாதிப்புற்ற உள்ளங்கள் எத்தனை துயரைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தனை துயரையும் தாங்கிக்கொள்ள முடியாத வேளை, அவர்களது உள்ளம் உடைந்து போகலாம். எனவே அவரவர் உள்ளம் உடைந்து போகாமல் அதாவது உள்ளம் நொந்துவிடாமல், சிறப்பாகக் கூறின் உள்ளப் புண் ஏற்பட்டுவிடாமல் ஆற்றுப்படுத்துதல் மேற்கொள்ள வேண்டும்.

உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் அறிஞர்கள் அல்லது உளநல வழிகாட்டலும் மதியுரையும் (Counselling) வழங்கும் நிறுவனங்கள் பொருண்மிய இழப்போடு உயிரிழப்பையும் சந்தித்த கடலூரில் தொட்டு சென்னை வரையான தமிழக மக்களை ஆற்றுப்படுத்த முன்வரவேண்டும். பொருண்மிய உதவிகளும் மருத்துவ உதவிகளும் எவ்வளவுக்கு முதன்மை பெறுகின்றதோ, அதற்கு நிகராக ஆற்றுப்படுத்துதல் தேவைப்படுகிறது. ஆற்றுப்படுத்துதல் மூலம் உளநலம் பேணுவதோடு உள (மன) நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவோ குறைகவோ முடியும். எனவே, உள (மன) நோய்கள் அற்ற மக்களாயம் (சமூகம் – Society) உருவாக நாம் எல்லோரும் பொருண்மிய உதவி, மருத்துவ வழிகாட்டல் வழங்குவதோடு நின்றுவிடாமல் துயருற்ற உள்ளங்களை ஆற்றுப்படுத்துதல் மூலம் இயல்பு வாழ்க்கையைத் தொடர உதவவேண்டும்

எனது முழுமையான பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_10.html

Advertisements