வலைப்பூக்களில் பதிவுகளைக் காணவில்லையே!

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அறிஞர்களே! என்னூரில் தீபாவளி நாளன்று ஏஆர்டெல் வலையமைப்புப் பணி சரியாகக் கிட்டவில்லை. கடும்மழையால் கவனிக்க மறந்துவிட்டார்கள் போலும். அதனால். உரிய நேரத்தில் வாழ்த்துகளைப் பகிர முடியாமையால் துயருற்றேன். எல்லாமே கடும்மழையின் வஞ்சனை தான்.

சரி! தீபாவளி நாளுக்கு அடுத்த நாளாவது தீபாவளி வாழ்த்துகளைப் பகிர வலைப்பூப் பக்கம் நுழைந்தேன். எனது பிளக்கர் விருப்பத் தெரிவில் முந்நூறிற்குக் கிட்டவும் எனது வேர்ட்பிரஸ் விருப்பத் தெரிவில் இருநூறிற்குக் கிட்டவும் திரட்டி வைத்திருந்த வலைப்பூக்களில் வாழ்த்துகளைப் பகிர இறங்கினேன். அடக் கடவுளே! நான் 2015 தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து; பின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து; தீபாவளி வாழ்த்துகளைப் பகிரும் வரை 2014 ஆம் ஆண்டு பதிந்த இறுதிப் பதிவோடு பல வலைப்பூக்களைப் பார்த்தேன். அதன் விளைவே ‘வலைப்பூக்களில் பதிவுகளைக் காணவில்லையே!’ என்றொரு பதிவை தர முன்வந்தேன்.

எனது முழுமையான பதிவைப் படிக்க…
http://www.ypvnpubs.com/2015/11/blog-post_15.html

 

Advertisements

2 thoughts on “வலைப்பூக்களில் பதிவுகளைக் காணவில்லையே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.