பெண்ணொருவள் தமிழர் மீது பாய்ச்சல்

இழகிய உள்ளம் கொண்டவள்
அழகிய தமிழ் சொல்லெடுத்து
“எதையடா இழந்துவிட்டாய்
இன்பத் தமிழை மறப்பதற்கு?” என்று
கேட்குமளவுக்கு
இடம் கொடுத்தது யார் தமிழா?

தமிழா – நீ
” “அம்மா” என்ற அழகிய தமிழை
“மம்மி” என்று
மரணக் கல்லறை ஆக்கிவிட்டாய்!” என்று
பெண்ணொருவள்
தமிழர் மீது பாய்ச்சலா? – அதற்கு
இடம் கொடுத்தது யார் தமிழா?

ஈழநாட்டில் பிறந்த பெண்ணவள் – தன்
அடிவயிற்றிலிருந்து எழும் கோபத்தை
எங்கள் தமிழ் உறவுகள் மீது
கொட்டி மோதுவதில் தவறில்லையே! – அந்த
தங்கச்சியின் அருமையான பாவடிகளை – நான்
உங்களுடன் பகிர விரும்புகிறேன்!

இணைப்பு: http://www.vallamai.com/?p=59883

Advertisements

10 thoughts on “பெண்ணொருவள் தமிழர் மீது பாய்ச்சல்

 1. ஐயா தங்களின் தமிழன்பை பாராட்டுகின்றேன், ஆனால் அதே சமயம் தமிழை பிழையின்றி எழுதுவதும் நம் கடமை. தமிழில் ஆங்கிலத்தை கலப்பது எவ்வளவு பிழையோ, அதே அளவு தமிழையும் தவறாக பேசுவதும் எழுதுவதும்.

  ஒருவள் என்ற சொல் தமிழில் வராது. ஒருவன் என்பதற்கு தமிழில் ஒருத்தி என்பதே சரியானது. சிலர் ஒருவள் சரி என வாதிடுவது உண்டு, ஆனால் நான் கற்றவரையில் ஒருத்தி என்பதே சரியாகவும், பெரும்வழக்காகவும் இருப்பதை அறிகின்றேன். திருடன் என்பதற்கு திருடள் என்று சொல்வதில்லை, மாறாக திருடி என்போம், அதே போல ஒருத்தன் என்பதற்கு பெண்பால் சொல்லான ஒருத்தி என்பதே மிகச் சரி.

  நன்றிகள் !

  • அறிஞரே!
   “ஒருவள் என்ற சொல் தமிழில் வராது.” என்பது தங்கள் கருத்தாக இருக்கலாம். அதற்கான தங்கள் விளக்கத்தை வரவேற்கிறேன்.
   ஆயினும்,
   பாவலர் பாரதிதாசன் என்ற தமிழறிஞரே, ‘ஒருவன்’ என்று ஆணை அழைப்பது போல ‘ஒருவள்’ என்று பெண்ணை அழைக்கலாம் என அறிவூட்டிய பின்; மாற்றுக் கருத்துக் கூற எனக்குத் தகுதி இல்லை ஐயா!
   (சான்று நூல்: தமிழ் அறிவோம் அட்டை நிறம்: நீலம், ஆக்கியவர்: பாவலர் பாரதிதாசன்)

   தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
   மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.