போட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்

கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டியென பல போட்டிகளை அறிஞர்கள் சிலருடன் நண்பர் ரூபன் அவர்கள் நடாத்தி வருகின்றார். இதுவரை வெற்றி பெற்றோருக்குப் பதக்கம், சான்றிதழ் வழங்கி வந்தனர். ஆயினும், 2015 சித்திரைப் புத்தாண்டு நாளையொட்டி நடாத்திய போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கும் முறையே 25 டொலர், 20 டொலர், 15 டொலர் வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர்.

ரூபன் குழுவினர் பணம் அனுப்பத் தயார் ஆயினும் வெற்றி பெற்றோர் தமது வங்கிக்கணக்கு விரிப்பை ரூபன் குழுவினருக்கு அனுப்பாது இழுத்தடிப்பதால் பணப்பரிசினை அனுப்ப முடியாது ரூபன் குழுவினர் திணறுவதாக என் காதுக்கு ஒரு செய்தி கிட்டியது. ஆயினும் வெற்றி பெற்ற பத்து ஆளுக்கும் சான்றிதழ் அனுப்பியாச்சு; இந்த ஏழலில் கிடைத்து விடும்.

சரி! ஏன் பணப்பரிசினைப் பெற்றுக்கொள்ள வெற்றி பெற்றோர் தமது வங்கிக்கணக்கு விரிப்பை ரூபன் குழுவினருக்கு அனுப்பாது இழுத்தடிக்கின்றனர்? இந்தக் கேள்வி என்னைக் குடைந்தமையால் என் எண்ணங்களை இங்கு பகிர விரும்புகிறேன்.

முதலில் இப்போட்டிகளை ரூபன் குழுவினர் தமது ஆயுள் முழுவதும் நடாத்த விருப்பதால் பணப் பரிசைச் சிறிதாகப் பேணலாம். ஒரு தடவை மட்டும் பெருந்தொகைப் பரிசினை வழங்கிய பின் ஓடி மறையும் குழுவாக இருக்காமல் ரூபன் குழுவினர் தமது ஆயுள் முழுவதும் சிறு தொகைப் பரிசினை வழங்கி இப்போட்டிகளை நடாத்துவதையே நானும் விரும்புகிறேன்.

வெற்றி பெற்றோர் பணப்பரிசினைப் பெற்றுக்கொள்ள இழுத்தடிப்பதன் நோக்கம் சிறு தொகைப் பணப் பரிசாயின் இம்முறை உடனடியாகப் பெறுங்கள். அடுத்தமுறை முதல் மூன்று இடங்களுக்கும் முறையே எத்தனை டொலர் வழங்கலாம் என்பதைத் தெரிவித்தால் நன்று; அதற்கு ஆவன செய்யலாம்.

சரி! உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணும் பதிவர்களை ஊக்குவிக்கவே இப்போட்டிகளை ரூபன் குழுவினர் நடாத்துகின்றனர். எனவே, இப்போட்டிகள் ஊடாக என்ன மாற்றம் நிகழும்?
சிறந்த தமிழ்ப் பற்றாளர்களை இனம் காணலாம்.
சிறந்த தமிழ்ப் படைப்பாளிகளை இனம் காணலாம்.
சிறந்த தமிழ்ப் படைப்புகளை இனம் காணலாம்.

இதன் அடிப்படையில் பதிவர்கள் எல்லோரும் போட்டி நடாத்த ஒத்துழைப்பதோடு, போட்டிகளில் எல்லோரையும் பங்குபற்றச் செய்து பரிசினைப் பெற்றுச் செல்ல உதவவும். ரூபன் குழுவினர் தமது ஆயுள் முழுவதும் இப்போட்டிகளை நடாத்தி உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண பதிவர்கள் ஆகிய நாம் எல்லோரும் ஒத்துழைக்க முன்வரவேண்டும்.

Advertisements

10 thoughts on “போட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்

 1. வணக்கம்
  அண்ணா

  தாங்கள் சொல்லிய விதம் வெகு சிறப்பு…. நானும் தொலைபேசி வழி தொடர்புகொண்டு கேட்ட போது.. தருவதாக சொல்கின்றார்கள் தந்த பாடு இல்லை… தாங்கள் எழுதிய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • எந்தத் தடை வரினும்
   நம் ஆயுள் உள்ள வரை
   போட்டிகள் நடாத்திப் பரிசில்கள் வழங்கி
   எமது பணியைத் தொடருவோம்!

  • எமது செய்தி பலருக்கு எட்டும் வகையில் பதிவைப் பகிர்ந்து உதவியமைக்கு மிக்க நன்றி.

 2. அன்புள்ள அய்யா,

  வணக்கம். 2015 சித்திரைப் புத்தாண்டு நாளையொட்டி நடாத்திய கவிதைப் போட்டியில் எனக்கு ஆறுதல் பரிசாக தாங்கள் அனுப்பிய அழகான சான்றிதழ் கிடைக்கப் பெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு கையால் தட்டச்சு செய்வதால் அதிகம் தட்டச்சு செய்ய இயலவில்லை. பொறுத்தருள்க!

  -மிக்க நன்றி.

  மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

 3. இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
  அன்புடன் இனிய வாழ்த்துகள்.
  இன்றெமை வாழ்த்தியவர்கள் வாழ்த்த வருவோருக்கும்
  இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.
  அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.