தமிழைத் தமிழ்ப்படுத்த வேண்டுமாம்; ஏற்பீரா?

pannutamilfromfbதமிழை
இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்
என்ற கவிதையைப் படித்தேன் – அதை
உங்களுடன் பகிர எண்ணி – நான்
பொறுக்கிய எடுத்துக் காட்டுகளை
சற்றே படித்துப் பாருங்களேன்!

“ஆயிரக்கணக்கான
ஆண்டுகள் முன்னமல்ல
ஐம்பதுகளில் கூட
மேடையெங்கும் வழிந்த தமிழ்
வடிந்து போனதெங்கே…?” என்ற
கேள்விக்கு
உங்கள் பதில் என்ன?

“பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளை
‘மம்மி டாட்டா’ என்றது
அதன் அன்னை அகம் மகிழ்ந்தாள்
தமிழன்னை தலை கவிழ்ந்தாள்
காரணம்
அது சொன்னது தமிழுக்கு ‘டாட்டா’ …!” என்ற
செயலுக்கு
உங்கள் விளைவு என்ன?

“வயிற்றுப் பாட்டுக்காக
வாய்மொழியை மாற்றாதே…!
வந்த மொழியைப் போற்றாதே…!
உன் தாய்மொழியைத்
தள்ளி வைக்காதே…!” என்ற
வேண்டுகோளுக்கு
உங்கள் முடிவு என்ன?

“தமிழைச் சிதைப்பதில்
சின்னத்திரையும் வண்ணத்திரையும்
சின்னத்தம்பி, பெரியதம்பி…!
இவைகளில்
கன்னித் தமிழ்க் கிளிகள்
கலப்பட மொழி பேசும்…!” என்ற
நிலைக்கு
உங்கள் மாற்றம் என்ன?

“தமிழரையெல்லாம்
தமிழன்பராக்க வேண்டும்…!
கனவு இலக்கியம், பண்பாடுகள்
களவு போகாமல் காக்க வேண்டும்…!” என்ற
எதிர்பார்ப்புக்கு
உங்கள் பங்களிப்பு என்ன?

தமிழை
இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்
என்ற கவிதையைப் படித்தேன் – அதில்
நான் பொறுக்கிய எடுத்துக் காட்டுகளை
சுட்டிக் காட்டிக் கேட்ட கேள்விகளுக்கு
உங்களால் பதிலளிக்க இயலுமா?

பதிலளிக்க முயலு முன் – கொஞ்சம்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கியே
http://dindiguldhanabalan.blogspot.com/2015/07/Tamil.html
திண்டுக்கல் தனபாலன் பதிவை
முழுமையாகப் படித்த பின்னர்
பதிலளிக்க முயன்று பாருங்களேன்!

“தமிழை
இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்” என்ற
கவிதைக்கான தங்கள் கருத்துகளை
திண்டுக்கல் தனபாலன் தளத்திலேயே
தெரிவித்த பின்னரே…
தமிழைத் தமிழ்ப்படுத்த வேண்டுமாம்;
ஏற்பீரா? என்று தொடரும் – எனது
கேள்விக் கணைகளுக்கான – உங்கள்
பதில்க் கணைகளை – வந்திங்கே
குறி வைத்து வீசுங்களேன் – என்
தலை தப்பாட்டிய் பரவாயில்லை
எங்கள் (உங்கள்+என்)
தமிழன்னை தலை கவிழாமல் பேணவே!

Advertisements

10 thoughts on “தமிழைத் தமிழ்ப்படுத்த வேண்டுமாம்; ஏற்பீரா?

  1. வலிந்து இவ்வாறாக பலர் ஆங்கிலத்தோடு கலந்து பேசுவதையும் எழுதுவதையும் பார்க்கும்போது வேதனையாகத்தான் உள்ளது. சிறிதுசிறிதாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் உரையாட முயற்சிப்பது நமக்குப் பெருமையே. இவ்வாறான சீரழிவுகளுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒரு முக்கிய காரணம்.

  2. தமிழன்னை தலை நிமிர்ந்து நிற்க நம்மாலான முயற்சிகளை கட்டாயம் செய்ய முயலுவோம் அறிவுரைக்கு நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.