தூது பற்றி ஏதாவது சொல்லலாம்

கா… காவென… கரைந்த வண்ணம்
காற்றிலே ஒற்றுமையை உரைத்த வண்ணம்
ஊருக்கு ஊர் தூது போகும் காகமே – உனக்கு
இதை யாரு கற்றுக் கொடுத்தார்!

எனக்கும் இது பற்றித் தெரியாது. ஆயினும் தூது பற்றி ஏதாவது சொல்லலாம் என இப்பதிவை எழுதுகிறேன்.

“மேகத்த தூது விட்டா
தெச மாறிப் போகுமோன்னு
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
சொல்லி விட்ட சேதியெல்லாம்
எப்ப வந்து தரப்போற
எப்ப வந்து தரப்போற” என்றவாறு
‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற படத்தில் இசையரசி பி.சுசீலா, மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடிய பாவலர் வைரமுத்து எழுதிய ‘ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த’ என்ற தூதுப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். அதன் பின், எனது கருத்துக்குப் போகலாம்.

மாறாத அன்புடன் அறிஞர் மணவை ஜேம்ஸ் அவர்கள் மறக்கமுடியாத ஒரு பதிவைத் தந்திருக்கிறார் என்றால் முழுக்க முழுக்கப் பொய். அவரது பதிவை ஒவ்வொரு தமிழ் ஆசிரியரும் உள்வாங்கி, தமது மாணவர்களுக்குப் பொறுப்புணர்வோடு பகிரவேண்டிய பெறுமதி மிக்க பதிவு என்பேன்.

அதாவது, தூது இலக்கியம் மற்றும் தூது நூல்கள் பற்றி உணர்த்தச் சிறப்பாக முயற்சி எடுத்திருக்கிறார். அதிலும் அன்றைய பாவலர், இன்றைய பாவலர் கையாண்ட தூது இலக்கியச் சான்றுகளை முன்வைத்து தூது நூல்களை படிக்க விரும்ப (ஆசை) வைக்க முயன்றிருக்கிறார்.

சங்க கால, சங்கம் மருவிய கால இலக்கிய நூல்களை நம்மாளுகள் விரும்பிப் (ஆசையுடன்) படிக்க வைக்க அறிஞர் மணவை ஜேம்ஸ் அவர்கள் கையாண்ட நுட்பத்துடன் பதிவுகளை வெளியிடவேண்டி இருக்கிறது. இல்லையேல் இன்றைய இளசுகளின் உள்ளத்தில் நல்ல இலக்கிய அறிவு இல்லாமல் போய்விடலாம். இதனால் உண்மையான தமிழறிவு கிட்டாமல் போகலாம்.

எனவே தான் அறிஞர் மணவை ஜேம்ஸ் அவர்களின் பதிவைப் பகிருவதன் மூலம் இக்குறைகளைச் சீராக்க வழிகிட்டுமென நம்புகின்றேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அவரது பதிவைப் படித்த பின் பலருடன் பகிர்ந்து நம்மவர் தமிழறிவைப் பெருக்க முன்வாருங்கள்.
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/05/blog-post_98.html

Advertisements

14 thoughts on “தூது பற்றி ஏதாவது சொல்லலாம்

 1. “மேகத்த தூது விட்டா
  தெச மாறிப் போகுமோன்னு (பாசமுள்ள மச்சானே)
  தண்ணிய நான் தூது விட்டேன்
  தண்ணிக்கு இந்தக் கன்னி (தந்தனுப்பும் முத்தமெல்லாம் எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப்போறே? எப்ப வந்து தரப்போறே)
  சொல்லி விட்ட சேதியெல்லாம்
  எப்ப வந்து தரப்போற
  எப்ப வந்து தரப்போற”……….
  அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர்கள் விடுபட்டுள்ளது என நினைக்கிறேன். நல்ல சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள். பதிவுக்கு நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.