தமிழில் மெய்யெழுத்து ஒழுங்கை நினைவூட்ட

தமிழில்
இருபத்தைந்திற்கு மேற்பட்ட மொழிகள்
கலந்துள்ளது என்பதை எவரறிவார்? – அத்தனையும்
ஊடகங்களில் உலாவுகின்றதை
எண்ணிப் பார்த்தால் – எங்கள்
தமிழ் இனி மெல்லச் சாகலாம்! – அதைவிட
நம்ம தமிழருக்கு – தமிழிலுள்ள
தேவாரம், திருவாசகம்,
திருப்பல்லாண்டு, திருவிசைப்பா,
திருப்புகழ், திருப்புராணம் கூறி
“நெடுநாள் மகிழ்வாக வாழ
அருள் தாரும் கடவுளே” என்று
வேண்டிக்கொள்ளத் தெரியாமை
தமிழ் மறந்து போச்சு என்று
எண்ணிக்கொள்ள இடமிருக்கே! – அதற்கு மேல்
நம்ம தமிழருக்கு
உயிரெழுத்து ஒழுங்கும்
மெய்யெழுத்து ஒழுங்கும்
ஒழுங்காகச் சொல்ல முடியாத நிலை
இருப்பதை எவரறிவார்? – அத்தனையும்
தமிழ் வாழ வழி விடுமா?

அருமையான தமிழ் செய்திகளைத் தரும்
அறிஞர் புதுவை வேலு (யாதவன் நம்பி) அவர்கள்
உயிரெழுத்து ஒழுங்கை நினைவூட்ட
நேரங்காட்டி/மணிக்கூடு வந்தாச்சு என
எண்ணும் வகையில்
பதிவொன்றைப் பகிர்ந்திருப்பதைப் படித்ததும்
தமிழில் மெய்யெழுத்து ஒழுங்கை நினைவூட்ட
ஏதாவது
கண்டுபிடித்து ஆகவேண்டுமே? என்று
என் உள்ளத்தில் எண்ணிப் பார்த்தேன் – அதை
அறிஞர்களாகிய உங்களிடம் பகிருகிறேன்!
அதற்கான இணைப்பையும் தந்துள்ளேன் – அங்குச் சென்று
தங்கள் கருத்துகளையும் தெரிவித்துக் கொள்ளலாம்!

படம்: http://kuzhalinnisai.blogspot.com/2015/05/blog-post_17.html

Advertisements

14 thoughts on “தமிழில் மெய்யெழுத்து ஒழுங்கை நினைவூட்ட

  1. அன்புள்ள அய்யா,

    ‘தமிழில் மெய்யெழுத்து ஒழுங்கை நினைவூட்ட’ தமிழ் மெல்ல மெல்ல வாழ வழி சொல்லியிருக்கிறீர்கள்.

    நன்றி.

  2. நண்பரே உலகின் கடைக்கோடி தமிழன் வாழும்வரை நம் தமிழும் வாழும்.
    நண்பர் யாதவன் நம்பியின் பதிவைக்கண்டிருந்தேன் நன்றி.

  3. புதுவை வேலு தளத்தில் சென்று முன்னரே பதிவினைப் படித்து கருத்துரை இட்டுவிட்டேன். அந்தப் பயனுள்ள பகிர்வினைப் பகிர்ந்தமைக்கு தங்களுக்கு நன்றி.

  4. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.