தமிழின் தொன்மை பற்றித் தேடிய வேளை…

நான், எனது தளத்தில் தமிழின் தொன்மை பற்றி வெளிப்படுத்தலாமென கூகிழ் தேடுபொறியில் சுழியோடினேன். அவ்வேளை நான்கு வலைப்பூக்கள் என் கண்ணில் சிக்கின. அவற்றை உங்களுடன் பகிர்ந்தால், நீங்களும் அவற்றை உலகெங்கும் பரப்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. சரி, எனது தேடலில் சிக்கிய முக்கிய கருத்துகளின் அடிப்படையில் அவ்வலைப்பூக்களை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.

“உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.” என்றும்

“திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே. – பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்.” என்றும்

“தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,
“ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”

“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்று புகழ்கின்றது.

தமிழ் விடுதூது,
“ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.” என்றும்

“ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.” என்றும்

“தமிழ்மொழியின் சிறப்புகள்” என்ற தலைப்பில் அறிஞர் தமிழ்மாறன் அவர்கள் ‘வேய்ங்குழல்’ என்ற வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனை முழுமையாகப் படிக்கவும்.
http://nyanabarati.blogspot.com/2009/03/blog-post_03.html

“தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல்லுகிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். முதலில் பிறந்த மொழி தமிழ். அதனால்தான் தமிழ் அழிந்துபோகாமல் இருக்கிறது. தமிழ் மரபியல் கொண்ட மொழி. தமிழ் வழிவழியாக இளமையோடு வழங்கி வருகிறது. தமிழ் எந்தக் காலத்தும் அழியாது தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுபவர்கள் தானாகவே அழிந்து போவார்கள்.
இயற்கையிலேயே பிறந்து வளர்ந்தது தமிழ். ஆதலால் இயற்கையை யாராலும் அழிக்க முடியாது. ஆகவே தமிழையும் அழிக்க முடியாது என்று மறைமலை அடிகள் தமிழ்ப் பற்றித் தரும் கருத்தை அறியமுடிகின்றது.” என்றும்

“செந்தமிழ் இலக்கணப் பாகுபாடும் மொழியின் தொன்மைக்குச் சான்றாகும். ஒரு மொழியில் இலக்கியங்கள் தோன்றிய பல ஆண்டுகளுக்குப் பிறகே அம்மொழியில் இலக்கணம் தோன்றியது எனக் கூறுவதற்கேற்ப தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்திருக்கிற முதல் நூலே இலக்கண நூலாகிய தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் தோன்றுவதற்குக் காரணமாய் இருந்த இலக்கியங்களெல்லாம் கடலலைகளுக்கு இரையாகிவிட்டன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களும் தொன்மைக் காலத்தே நம் மொழியில் தோன்றித் துலங்கின என்பதும் அறியமுடிகிறது.” என்றும்

“தமிழர்கள் தொன்மையுடையவர்கள் என்பதால் தமிழ் மொழியும் தொன்மையுடையதாகத்தான் இருக்க வேண்டும். தமிழ் மொழி வரலாற்றிற்கு எட்டாத ஆதிகாலத்தே தோன்றிய மொழியாகும். இம்மொழியின் தோற்றம் தெரியாத காரணத்தால் இது சிவபெருமானால் அகத்திய முனிவருக்குக் கற்பிக்கப் பெற்றது என்றும், ஏறத்தாழ கி.மு. 3000 ஆண்டு காலத்திற்கு முன்பே இம்மொழி உயர்தனிச் செம்மொழியாகத் திகழ்ந்தது என்ற கருத்தும் உண்டு. இம்மொழி இலக்கிய இலக்கணங்களைத் தன்னகத்தே கொண்டு சிறப்புற விளங்கியும் வருவதை அறிந்துகொள்ள முடிகின்றது.” என்றும்

“தமிழின் தொன்மையும் செவ்விலக்கியங்களும் – முனைவர் கு. ஏஞ்சல்கவிதா” என்ற தலைப்பில் அறிஞர் த.செந்தில்குமார் அவர்கள் ‘செம்மொழி’ என்ற வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனை முழுமையாகப் படிக்கவும்.
http://www.chemmozhi.net/2012/10/blog-post_9.html

“ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம்பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில் வருகிறது. முதலில் அடையாளம் காணப்படுவது செம்மொழி இலக்கியம். அவ்விலக்கியத்தைக் கொண்ட மொழி செம்மொழி எனப்படுகிறது.

ஒரு மொழி செம்மொழித் தன்மை கொண்டது என்பது அம்மொழியின்
1. தொன்மை (Antiquity)
2. ஒத்திசைவு (Harmony)
3. தெளிவு (Clarity)
4. தன்னடக்கம் (Restraint)
5. கண்ணியம் (Serenity)
6. இலட்சியம் (Idealism)
7. பொதுமை (Universality)
8. பகுத்தறிவு (Reason)
9. ஒழுங்கு (Order)
10. கண்ணோட்டம் (Humanism)
போன்ற கூறுபாடுகளின் தொகுப்பாக கருதப்படுகிறது.

இன்றைய உலகச் செம்மொழிகளாகக் கருதப்படுவன
1. கிரேக்கம் (Greek)
2. இலத்தீன் (Latin)
3. அரேபியம் (Arabic)
4. சீனம் (China)
5. ஹீப்ரு (Hebrew)
6. பாரசீகம் (Persian)
7. சமஸ்கிருதம் (Sanskrit)
8. தமிழ் (Tamil)
போன்ற மொழிகளாகும்.” என்று

“செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகளும்” என்ற தலைப்பில் அறிஞர் கோ.புண்ணியமூர்த்தி அவர்கள் ‘முத்துக்கமலம்’ என்ற வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனை முழுமையாகப் படிக்கவும்.
http://www.muthukamalam.com/essay/general/p32.html

“3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் ‘தொல்காப்பியம்’ ஒன்றே. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றி யிருக்கின்றன. இவ்வுண்மையை ‘தோலென மொழிப தொன் மொழிப்புலவர்’ என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.

3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப்பெறுகிற நூல்களில் ‘அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுவோரும் உண்டு.

தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும், இது நடந்த காலம் 3000ம், 5000ம், 9000ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.

மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும் அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர்.

தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்? அதற்கு முன்னே உரைநடை தோன் றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்? அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதேனும் கூற வேண்டுமானால் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.” என்று

“தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே…!” என்ற தலைப்பில் ‘பட்டதும் சுட்டதும்’ என்ற வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனை முழுமையாகப் படிக்கவும்.
http://paddathumsuddathum.blogspot.com/2013/07/blog-post_9062.html

மேற்படி நான்கு வலைப்பூக்களில் நான் பொறுக்கிய சிறு குறிப்புகளை கருத்திற்கொண்டு அவ்வவ் வலைப்பூக்களிற்குச் சென்று தமிழின் தொன்மை பற்றி அறிய முன்வாருங்கள். மேற்படி நான்கு அறிஞர்களைப் போல இன்னும் பலர் தமிழின் தொன்மை பற்றி எழுதியிருக்கலாம். அவர்களது பதிவுகளையும் நாம் அறிமுகம் செய்தால் பலருக்கு நன்மை கிட்டுமென நம்புகின்றேன்.

Advertisements

12 thoughts on “தமிழின் தொன்மை பற்றித் தேடிய வேளை…

  • உலகெங்கும் தமிழைப் பேணுவோரை இனம் காண்போம்.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

  • உலகெங்கும் தமிழைப் பேணுவோரை இனம் காண்போம்.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

  • உலகெங்கும் தமிழைப் பேணுவோரை இனம் காண்போம்.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

  • உலகெங்கும் தமிழைப் பேணுவோரை இனம் காண்போம்.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

 1. பொதுவாக தங்கள் தளத்திலேயே தமிழின் பெருமை குறித்துப் பல பதிவுகளைப் படித்துள்ளேன். தற்போது தாங்கள் பிறரது பதிவுகளை அறிமுகப்படுத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்ததோடு, மொழியின் சிறப்புக்கூறுகளைப் பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

  • உலகெங்கும் தமிழைப் பேணுவோரை இனம் காண்போம்.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

 2. அரிய அறிய வேண்டிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தமிழைப் பேணுவோம் தமிழர்களாக வாழ்வோம்

  • உலகெங்கும் தமிழைப் பேணுவோரை இனம் காண்போம்.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.