2015 சித்திரைப் புத்தாண்டும் கவிதைப் போட்டியும்

அச்சு ஊடகங்களில் எழுதுவோர் மட்டும் தான் சிறந்த படைப்பாளிகள் என்ற காலம் போய், மின் ஊடகங்களில் எழுதுவோரும் அவர்களுக்கு நிகரானவர்கள் தான். அச்சு ஊடகங்களில் இடம்பெறும் போட்டிகளுக்கு ஏற்ப வலைப் பூக்களிலும் (மின் ஊடகங்களில்) பல அறிஞர் குழு போட்டிகளை நாடாத்துகின்றனர். அந்த வகையில் ரூபன் குழுவினரும் 2015 சித்திரைப் புத்தாண்டு நாளையொட்டி கவிதைப் போட்டி நடாத்துவதாக அறிவித்துள்ளனர். அப்போட்டி பற்றிய விரிப்பைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
http://www.trtamilkkavithaikal.com/2015/04/2015_23.html

இவ்வாறான போட்டிகள் தனியாள் விளம்பரமா? தமிழைப் பேண உதவுமா? என்று பட்டிமன்றம், வழக்காடுமன்றம் நடாத்தினாலும் தமிழைப் பேண உதவக்கூடிய போட்டிகளே தமிழைப் பேண உதவும் என்பார்கள். போட்டி முடிந்ததும் எல்லோரும் மறந்திடுவார்கள் அல்லது வலைப்பூக்களில் உண்மை அடையாளம் வெளிப்படுத்தாமையால் இங்கு தனியாள் விளம்பரம் என்பது சாத்தியமற்றது. ஆயுள் முழுவதும் தமிழைப் பேண உதவும் போட்டிகளை நடாத்திக்கொண்டு இருப்பின் தனியாள் விளம்பரம் கிட்ட வாய்ப்புண்டு. எப்படியாயினும் எவர் வேண்டுமானாலும் போட்டிகள் நடாத்தலாம்; அவை தமிழைப் பேண உதவுவனவாக இருந்தால் மட்டுமே இணைய வழியில் தமிழை மேம்படுத்தவோ உலகெங்கும் தமிழைப் பேணவோ உதவும் என்பேன்.

இம்முறை ரூபன் குழுவினரின் 2015 சித்திரைப் புத்தாண்டு நாளையொட்டிய கவிதைப் போட்டித் தலைப்பு “இணையத் தமிழே இனி…” என்று அறிவித்திருக்கிறார்கள். உடனே இத்தலைப்புக் குறித்து வலைப்பூக்களில் தேடினேன். “சங்க காலம், சங்கம் மருவிய காலம், மற்றும் சமகால இலக்கியங்கள் எத்தனையோ ஆயிரம் வலைப்பூக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது; பதிவு செய்யப்படுகிறது. மிகத் திறன் வாய்ந்த தேடற்பொறி மூலமே இவற்றைக் கண்டுபிடிக்க முடியும்.” என்றொரு வலைப்பூவில் குறிப்பிட்டிருந்ததைக் கண்டேன். எத்தனையோ ஆயிரம் பதிவர்களின் முயற்சியால் கிடைத்த பயன் இதுவென உணர்ந்தேன். இப்படித் தான் இணைய வழியில் தமிழ் தேங்கிக்கிடக்கிறது.

மேலும், எல்லோரும் மின்னூடகப் பயனர்களாக மாறிவிட்டோம் அல்லது தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றங்கள் எங்களை மின்னூடகப் பயனர்களாக மாற்றிவிட்டது எனலாம். இந்த நிலையில் “இணையத் தமிழே இனி…” என்ற கவிதைப் போட்டித் தலைப்பு முதன்மை பெறுகின்றது. இணைய வழியில் உலகம் எங்கும் தமிழைப் பரப்பிப் பேணலாம். இணைய வழியில் பிறமொழிகளில் தமிழைக் கற்பித்து உலகம் எங்கும் வாழ்வோர் தமிழைக் கற்றுக்கொள்ள வழியமைக்கலாம். இனியெல்லாம் இப்படி முயற்சி எடுத்தால் “இணையத் தமிழே இனி…” என்று நானுரைப்பேன்.

இணைய வழியில் பதிவுகளை இட்டுத் தமிழை ஆவணப்படுத்தும் பதிவர்கள் எல்லோரும் ரூபன் குழுவினரின் 2015 சித்திரைப் புத்தாண்டு நாளையொட்டிய கவிதைப் போட்டியில் பங்கெடுக்க முன்வாருங்கள். பணத்திற்காகவோ பரிசில்களுக்காகவோ சான்றிதழ்களுக்காக அன்றி “இணையத் தமிழே இனி…” என்ற இலக்கை எட்ட என்னவெல்லாம் பண்ணலாம் என்ற தங்கள் எண்ணங்களையாவது வெளிப்படுத்த இப்போட்டியில் பங்கெடுக்க முன்வாருங்கள். உங்களுக்குத் தெரிந்த பதிவர்கள் எல்லோருக்கும் தெரிவித்து இயன்றவரை இவ்வுயரிய எண்ணங்களை வெளிப்படுத்த அவர்களையும் கவிதைப் போட்டியில் பங்கெடுக்கச் செய்யுங்கள்.

முடிவாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். தனியாள் விளம்பரத்திற்காகவோ தமிழைப் பேண உதவதற்காகவோ ஆளுக்காள் போட்டிகளை நடாத்தினாலும் ஆயிரமாயிரம் போட்டியாளர்கள் பங்கெடுப்பதன் மூலமே எந்தப் போட்டியும் வெற்றிபெறுகிறது. எனவே தான் தமிழுக்காக, தமிழைப் பேணுவதற்காக உலகலாவிய அறிஞர்களைத் திரட்டி, அவர்களின் மதியுரைப்படி உலகெங்கும் வலைப்பூக்கள் வழியே நடாத்தப்படும் ரூபன் குழுவினரின் 2015 சித்திரைப் புத்தாண்டு நாளையொட்டிய கவிதைப் போட்டியில் பதிவர்கள் எல்லோரும் பங்கெடுத்து ஒத்துழைப்புத் தருமாறு பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன். போட்டி பற்றிய விரிப்பைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
http://www.trtamilkkavithaikal.com/2015/04/2015_23.html

Advertisements

8 thoughts on “2015 சித்திரைப் புத்தாண்டும் கவிதைப் போட்டியும்

 1. வணக்கம்
  அண்ணா
  தங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் இப்படியான சிந்தனைத்துளிகள் ஒவ்வொருவரின் மனதிலும் மலருமாக இருந்தால் எம்மொழி இன்னும் வளச்சியடையும் என்பதில் ஐயமில்லை.. போட்டி சம்மந்தமான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல…

  இந்த போட்டி சம்மந்தமான பதிவுகள் பல வலைத்தளங்களில் பவனி வருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.