அழகிய தமிழ் மொழியைப் பற்றிப் பாடு

உலகின் முதன் மொழி தமிழ். தமிழை முழுமையாகப் படித்தால் பல துறை ஆற்றல் அதற்குள்ளே இருக்கு. தமிழறிஞர்கள் தமிழின் சிறப்பைப் பகிர்ந்து, நாளைய தலைமுறை தமிழை விரும்ப (காதலிக்க) வைக்க முன்வரவேண்டும்.

ஈழப் போரைச் சாட்டாகக் காட்டி ஏதிலியாக (அகதியாக) உலகெங்கும் தமிழர் பறந்து/ பரந்து வாழ்கின்றனர். ஆங்காங்கே அவ்வவ் நாட்டு மொழிகளைப் பேசுகின்றனர். அவர்கள் காலப் போக்கில் தமிழை மறக்காமல்; தமிழறிஞர்கள் தமது படைப்புகளூடாகத் தமிழை விரும்ப (காதலிக்க) வைக்க முன்வரவேண்டும்.

அறிஞர் அநாமிகன் அவர்களால் https://groups.google.com/forum/m/#!msg/alltamilsongs/uA7LGuv0XUo/tAwWoLJ176YJ என்ற தளத்தில் ‘தமிழ் அமுதம்’ என்ற தலைப்பின் கீழ் பதியப்பட்ட கீழ் வரும் வரிகளைப் படித்துப் பாருங்கள்.

உலகத்தின் முதல் மொழியாய் ஒன்றெனவே நின்றாய்
உயிரென்றும் மெய்யென்றும் இரண்டாகி வந்தாய்
நிலவுகின்ற முத்தமிழாய் நிலைபெற்று உயர்ந்தாய்
நிகழ்கின்ற பாவகையில் நான்காகிச் சிறந்தாய்
இணையற்ற இலக்கணங்கள் ஐந்தெனவே கண்டாய்
இயங்கிடும் இனங்களிலே ஆறெழுத்துக் கொண்டாய்
திணைகளிலே அகம் ஏழும் புறம் எட்டும் உற்றாய்
திகழ்கின்ற நவரசமும் தமிழே நீ பெற்றாய்..

எங்கள் தமிழுக்குள் இத்தனை இருக்கா? எத்தனை ஆளுக்கு அத்தனையும் தெரியும்? எங்கள் தமிழைப் பற்றி ஏதாச்சும் எப்பனாவது எவருக்கேனும் தெரியுமா? அப்படியாயின் கீழ்வரும் பாடலைப் படித்தும் கேட்டும் சுவைத்துப் பாருங்கள்.

திரைப்படம் – கோயில் புறா
இசை – இளையராஜா
வரிகள்- புலமைப் பித்தன்
பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, உமா ரமணன்

சரிக சரிக சரிசரி கபகரி சரிக
சரிக சரிக சரிசரி கபகரி சரிக

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)

தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)

பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)

டாம் டூம் டங்கு டாங்கு என்றும்
கா கூ சீனா தானா என்றும்
ஏதேதோ எம்மொழியோ பொட்டு
திரைப் பாட்டு எழுதுவோர் – நல்ல
தமிழ் பாட்டு எப்போது எழுதுவார்?

தமிழ் வாழ வேண்டுமாயின்
தமிழை வாழவைக்கும் இலக்கியங்கள்
தொடர்ந்தும் தோன்ற வேண்டும்! – அதை
அறிஞர்கள் எல்லோரும் ஆக்கித் தர
உலகெங்கும் தமிழைப் பேண முடியுமே!

Advertisements

12 thoughts on “அழகிய தமிழ் மொழியைப் பற்றிப் பாடு

  1. உங்கள் இலக்கிய தேடல் பெரியது. நீங்கள் புதுவை வேலுவிடம் சொல்லிய “MEGA ” என்னும் இணையதள தமிழ் இலக்கிய சேவை தளத்தை நான் பயன் படுத்துகிறேன் ஐயா, நன்றி.

    sattia vingadassamy

  2. தமிழைப் போற்றும் தங்களது கவிதை அருமை. கடந்த மூன்றாண்டுகளாக தினமும் ஒரு தேவாரப்பதிகம் படித்துவருகிறேன். விடுமுறை நாள்களில் திவ்யப் பிரபந்தம் படிக்கிறேன். தமிழின் அழகை ரசிக்க முடிகிறது. இதனை அனுபவிக்கக் கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.