எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

நேற்றைக்கு முந்தைய உலகில்
(நூறு ஆண்டுகளுக்கு முன்)
7500 இற்கு மேற்பட்ட
மொழிகள் இருந்தனவாம்…
நேற்றைய உலகில்
(ஐம்பது ஆண்டுகளுக்கு முன்)
4500 இற்கு மேற்பட்ட
மொழிகள் இருந்தனவாம்…
இன்றைய உலகில்
(2000ஆமாம் ஆண்டுக்கு முன்)
2500 இற்கு மேற்பட்ட
மொழிகள் இருந்தனவாம்…
நாளைய உலகில்
(2020ஆம் ஆண்டுக்கு பின்)
1500 இற்கும் குறைந்த
மொழிகள் இருக்குமாம்…
நாளைக்கு அடுத்த உலகில்
(2040ஆம் ஆண்டுக்கு பின்)
150 இற்கும் குறைந்த
மொழிகள் இருக்குமாம்…
நாளைக்கு அடுத்தடுத்த உலகில்
என் சாவிற்குப் பின்
50 இற்கும் குறைந்த
மொழிகள் இருக்குமாம்…
தமிழ், வடமொழி (சமஸ்கிருதம்), சீனம்,
கிரேக்கம், லத்தீன், எபிரேயம் ஆகிய
ஆறு மூத்த மொழிகளில்
தமிழும் சீனமும் தான்
இறுதி மணித்துளி வரை
வாழ்ந்து கொண்டிருக்கிறதாம்…
ஈற்றில் இருக்கும் மொழிகளில்
எங்கள் தமிழ் மொழியும்
வாழ்ந்து கொண்டிருக்குமா?
எல்லாத் துறை அறிவும் கொண்ட
திருக்குறளைச் சான்றாகக் கொண்டு
எல்லாத் தொழில்நுட்ப வளங்களையும்
எம் தமிழில் வெளிக்கொணர்ந்தால்
உலகெங்கும்
தமிழைப் பரப்பிப் பேணினால்
ஈற்றில் வாழும் மொழியும்
எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

(இப்பதிவு எழுதிய நாள் 17/06/2012)

Advertisements

8 thoughts on “எம் தாய்மொழியாம் தமிழ் ஆகாதோ?

 1. அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்தையும் தமிழில் கொணர அவரவர் முயன்றால் நம் மொழி மென்மேலும் சிறப்பு பெறும். பயன்பாட்டு நிலையிலேயே இம் முயற்சியை மேற்கொள்வது அதிக பயனைத் தரும். நன்றி.

 2. அறிவியல் தமிழ் என்றும், கணிப்பொறித்தமிழ் என்றும் வழங்கிய நிலையில், இன்று கணிப்பொறித் தமிழைப் பாருங்கள் வளர்ச்சி தெரியும். ஆனால் இதற்கு முன் தோன்றியது அறிவியல் தமிழ், இன்றும் தொடக்க நிலையிலே,,,,,,,,,,,,,, நாம் துறைதோறும் முயலுதல் ஒன்றே நம் வளர்ச்சி. பிற சூழ்ச்சி தவிர்த்து. நன்றி.

 3. எல்லாத் துறை அறிவும் கொண்ட
  திருக்குறளைச் சான்றாகக் கொண்டு
  எல்லாத் தொழில்நுட்ப வளங்களையும்
  நம் தமிழில் வெளிவரத்தான் போகிறது நண்பரே

  • தமிழின், தமிழரின் எதிர்காலம்
   அப்படித் தான் அமைய வேண்டும்!

   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.