ஆதரவற்றவரென அழைத்தால் குறைந்தா போகும்?

என் இனிய உறவுகளே!

பெற்றவர்கள், உற்றவர்கள் இல்லாதோரை ‘அநாதை’ என்று நம்மூரிலும் சொல்லுகிறார்கள். தமிழ் விக்சனரி (http://ta.wiktionary.org/s/29xe) என்ற தளத்தில் ‘அநாதை’ எனத் தேடிய வேளை திக்கற்றவன், ஆதரவற்றவன் என்று பொருளறிய முடிந்தது.

உளநலம் பற்றிக் கலந்துரையாடிய பலரின் உள்ளத்தில் ‘அநாதை’ என்று அழைத்தால் நொந்துகொள்கின்றனர். எனவே ‘அநாதை’ என்ற சொல்லைப் படைப்பாளிகள் தங்கள் பதிவுகளில் சேர்த்துக்கொள்வதை நிறுத்தி ‘ஆதரவற்றவர்’ என்ற சொல்லைப் பாவிக்க முன்வாருங்கள். அதேவேளை திரைப்படங்களிலும் ‘அநாதை’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘ஆதரவற்றவர்’ என்ற சொல்லைப் பாவிக்க முயற்சி எடுக்குமாறு அழைக்கின்றேன்.

பொது நிகழ்வுகளிலும் அரங்குகளிலும் பேச்சாளர்கள் ‘அநாதை’ என்ற சொல்லைப் பாவித்தால் எத்தனை உள்ளங்களை நோகடிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். பெற்றவர்களுக்காக, உற்றவர்களுக்காக ஏங்கும் உள்ளங்களுக்கு ஆதரவு வழங்க முன்வாருங்கள். பெற்றவர்களுக்காக, உற்றவர்களுக்காக ஏங்கும் உள்ளங்களை ‘ஆதரவற்றவர்’ என்று அழைக்க முன்வாருங்கள்.

உலகளவில் பேசப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் (அநாதை) இல்லத்திற்கு தமது பரிசுத் தொகையை வழங்கிய ஈழத்து உறவும் கனடா வாழும் உறவுமான ஜெசிக்கா குடும்பத்தினரின் பேச்சில் ‘அநாதை’ என்ற சொல்லைப் பாவித்தது கண்டு, இப்படி ஒரு அழைப்பை நான் உங்களிடம் முன்வைக்க விரும்புகிறேன். ஆயினும், ஜெசிக்கா குடும்பத்தினரின் முன்மாதிரியைப் பாராட்டுகின்றேன். அது பற்றியறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.

 http://eluththugal.blogspot.com/2015/02/super-singer.html

Advertisements

10 thoughts on “ஆதரவற்றவரென அழைத்தால் குறைந்தா போகும்?

 1. வணக்கம்
  அண்ணா.

  உண்மைதான் இந்த சொல் ஒரு வேதனையை தரக்கூடியது… இதற்கான மாற்றறுச்சொல்லை உபயோகித்தால் சிறப்பு நல்லஅறைகூவல்… வாழத்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. இப்படித்தான் இருந்த சொற்களை விட்டுவிட்டு புதிய சொல்லைப் புகுத்தினால் மீண்டும் அச்சொல் அதே போருளைத்தானே தரும்.எகா.குருடன் தன்மை தெரியும் ,செவிடன் தன்மை தெரியும் நொண்டி தன்மை தெரியும் ஆனால் மாற்றுத்திறனாளி இவருக்கு என்ன பிரச்சினை என்று எப்படித்தெரியும்.இது வேண்டாத வேலை என்பதே எனது எண்ணம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.