38. தமிழை எல்லோரும் வளைக்கலாம்

“வல்லமையாய்த் தேடினால்
வில்லாகத் தமிழை
எல்லோரும் வளைக்கலாம்
பல்லாண்டு வாழ்ந்த பழமைத் தமிழன்றோ!
சொல்லாள ஏது தடை!” என்றுரைத்து
மெல்லத் தமிழ் வாழ
வழிகாட்டும் அறிஞரின் பதிவைப் படித்து
தமிழறிய வேண்டி நிற்கின்றேன்!

செந்தமிழ் சொல்லாள
ஏது தடை? – என்றும்
சொல்வளம் பெருகின்
மொழிவளம் சிறக்கும்
தமிழ் வாழ வழி இதுவன்றோ!

வேதாவின் வலை..

tamillanguage-l

தமிழை எல்லோரும் வளைக்கலாம்

என்னுள் வழியும் செந்தமிழ் விரிவு
இன்னுமதை உணர்ந்தால் உயர்வு! – தேடி
நன்னூல் பல நாடி உள்ளெடுத்தால்
நலமாகும் என் தமிழ்.

பொல்லாத மனிதர் தமிழைப் புறமாக்கி
இல்லாத கதை கூறி – உள்ளே
வல்லதென வாழ்விடத்து மொழியணைத்து நிதம்
செல்லமாய்க் காதலிப்பாரென் செய்க!

கைவிடாது தமிழைக் கரைத்துக் குடித்து
வைகையாய்த் தமிழறிவு பெருக்கி – நாளும்
மையிலென் பெயரெழுதப் பாடுபடும் நெஞ்சம்
தைதைதா தமிழெனக் கெஞ்சும்

இல்லாத அறிவல்ல, வல்லமையாய்த் தேடினால்
வில்லாகத் தமிழை எல்லோரும் வளைக்கலாம்
பல்லாண்டு வாழ்ந்த பழமைத் தமிழன்றோ!
சொல்லாள ஏது தடை!

நல்ல நிலையில் தமிழோடு விளையாடி
வெல்லக் கவிகள் பல அரங்கேற்ற
வல்லமை தாவென மெல்லக் கேட்பேன்
இல்லையென்னாது அருள் தா!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
29-1-2015

green-line-2

View original post

Advertisements

8 thoughts on “38. தமிழை எல்லோரும் வளைக்கலாம்

  1. தலைப்பை அதிகம் ரசித்தேன். நம் மொழியை எந்த அளவிற்கு இவ்வாறாகப் பயன்படுத்துகின்றோமோ அந்த அளவு அதன் பெருமை மேம்படுமே தவிர, குறையாது. உரிய சொல்லை உரிய இடத்தில் முறையாகப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு சில இடைவெளிகளை நம்மில் பலர் ஏற்படுத்திக்கொண்டு மொழியின் உண்மையான அழகை ரசிக்கத் தவறிவிடுகின்றனர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.