தமிழுக்கு முதல் நாள்

153 நாடுகளில் வாழும்
தமிழ் உறவுகளே!
தை பிறந்தால் வழி பிறக்கும் என
வரவேற்கும் நாள் என்றாலும்
தமிழுக்கு முதல் நாள் என்றாலும்
தமிழ் புத்தாண்டு என்றாலும்
உழவர் பெருநாள் என்றாலும்
உழவுத் தொழிலின் காவலன் ஞாயிற்றுக்கு
நன்றி கூறும் நாள் என்றாலும்
இனிப்புப் பொங்கல் பகிர்ந்துண்டு
உறவுகளைப் பலப்படுத்தும் நாள் என்றாலும்
தைப்பொங்கல் நாள் என்பதை
என்றும்
எவரும் மறக்க மாட்டீர்களே!
தை பிறந்தாச்சு
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

Advertisements

8 thoughts on “தமிழுக்கு முதல் நாள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.