உயிர் மொழியை மறக்காதே!

கண்கள் பேசுவதும் மொழி
காதுகள் கேட்பதும் மொழி
மூக்கு மணப்பதும் மொழி
நாக்குச் சுவைப்பதும் மொழி
தோல் சிலிர்ப்பதும் மொழி
மொத்தத்தில்
ஐம்புலன்களும் வெளிப்படுத்துவது
உடல் மொழி என்பேன்!
உடல் மொழி ஒன்றே
உலகத்தார் யாவருக்கும் பொதுவானதே!
அம்மா என்றழைப்பதும்
அப்பா என்றழைப்பதும்
ஆ… ஊ… என்றலறுவதும்
ஐயோ… அம்மா… என்றழுவதும்
அடிவயிற்றில் இருந்து வெளிப்படுவதும்
உயிர் மொழி என்பேன்!
எந்நாட்டான் எவ்வூரான் என்பதும்
அவரவர் பண்பாட்டில் மின்னினாலும்
ஒருவர் அடையாளம் என்பதும்
அவரவர் உயிர் மொழியே!
அம்மை, அப்பன் வழித்தோன்றல் வழியே
வெளிப்படுத்தும் முதன்மொழியும்
தாய்மொழி என்றழைப்பதும்
உயிர் மொழி ஒன்றே!
தமிழா! – உன்
உயிர் மொழியை (தாய்மொழியை) மறந்தால்
தமிழனென்ற அடையாளத்தை இழப்பாயே!
தமிழா! – நீ
பிறமொழி பேசுவதில்/ எழுதுவதில்
தவறில்லை, தப்பில்லை, பிழையில்லை
ஆனால்
தமிழுக்குள் பிறமொழியை கலப்பதால் – உன்
உயிர் மொழியைச் (தாய்மொழியைச்) சாகடிப்பதோடு – உன்
அம்மை, அப்பன்
வழித்தோன்றல் வழியே பேணிவந்த – உன்
தமிழனென்ற அடையாளத்தையும்
சாகடிக்கிறாய் என்பதை மறந்துவிடாதே!

Advertisements

12 thoughts on “உயிர் மொழியை மறக்காதே!

 1. “ஐம்புலன்களும் வெளிப்படுத்துவது
  உடல் மொழி என்பேன்!
  உடல் மொழி ஒன்றே
  உலகத்தார் யாவருக்கும் பொதுவானதே!”

  உலகம் ஏற்கும் உண்மை கவிதை அய்யா!

  ஊமை மொழியை உலக மொழி என்பார் சிலர்

  ஆனால் உடல்மொழி ஐம்புலன்களின் மொழியை

  உலகம் ஏற்கும் மொழி என்று சொன்னதன் கருத்தை போற்றுகிறேன் அய்யா!
  நட்புடன்,
  புதுவை வேலு

 2. அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டிய சூழலுக்கு ஆளாகிவிட்டோம் என்பதை நினைக்கும்போது வேதனையாகத்தான் உள்ளது. இருப்பினும் தொடர்வோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.