நாளைய தமிழ் எப்படி இருக்கும்?

நேற்றைய தமிழ்
நல்ல தமிழ் தான் – அதனை
நாங்கள் தான் பாவிப்பதில்லையே!

இன்றைய தமிழ்
நல்ல தமிழாக இல்லையே – அதனை
நாங்கள் தான் வெளிப்படுத்துவதில்லையே!

நம்மாளுகளின் தமிழ்
பிறமொழிக் கலவை தான் – அதனை
நாங்கள் தான் உணருவதாயில்லையே!

எந்த நாளும் தமிழ்
தூயதமிழ் ஆவதில்லைப் பாரும் – அதனை
நாங்கள் தான் பேணுவதாயில்லையே!

நாளைய தமிழ்
எப்படி இருக்கும் என்பீர்? – அதனை
நாங்கள் தான் மறந்துவிடுவோமே!

தமிழ் உறவுகளே!
அறிஞர் பிரேமலதா  அவர்கள்
‘பாழ் செய்யும் உட்பகை’ என்ற தலைப்பில்
நாளைய தமிழை ஆய்வு செய்துள்ளார் – அதனை
மறக்காமல் படித்திட – கீழ்வரும்
இணைப்பைச் சொடுக்கிப் பாருங்களேன்!
http://vjpremalatha.blogspot.com/2014/11/blog-post.html

Advertisements

6 thoughts on “நாளைய தமிழ் எப்படி இருக்கும்?

  1. தாங்கள்என் பதிவைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. இணைப்பைக்் கொடுத்ததற்காகவும் நன்றி. என் பெயர் பிரேமலதா என்பதாகும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.