முழுப் பிழையான தமிழ்…

உலகில் உள்ள மொழிகளில் தொன்மையானதும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி எங்கள் தாய் மொழியாம் தமிழே! உலகின் மூலை முடுக்கெங்கும் பரந்து வாழும் ஓர் இனமும் தமிழினமே! சீனத் தமிழ் வானொலி, கனேடியத் தமிழ் வானொலி எனத் தமிழ் மொழி மூல ஊடகங்கள் உலகெங்கும் காணப்படுகின்றனவே! ஆனால், பேச்சு வெளிப்பாட்டிலும் எழுத்து வெளிப்பாட்டிலும் தூயதமிழ் தென்படுவதில்லையே!
எடுத்துக்காட்டாக:

நேற்றைய பார்ட்டியில்
சோசலாகப் பழகிய ஒருத்தியிட்ட
“ஜ லவ் யூ டா” என்றேன்!
மோர்னிங் வந்தாளடா
“கிளாட்டி மீற் யூ” என்றாளடா
நைசா “ஜ லவ் யூ” சொல்லிட்டிங்கள்
என்ர ஹாட்டில லவ் என்பது
ரியலாக நீங்கள் தான் என்கிறாளடா!
திங் பண்ணிட்டு சொல்லுறேன் என்று
“சீ யூ எகெயின்” என்று “bபய்” சொல்லிட்டேன்
சும்மா ஒரு ஜோக்குக் சொன்னதே
மனேஜ் பண்ண முடியாதளவுக்கு
அடிக்கடி ரபிளைத் தருகிறதே!

இப்படி ஒருவர் தனது துயரத்தை தமிழ் உடன் ஆங்கிலம் கலந்து வெளிப்படுத்துகிறார். இப்படியான தமிழையே முழுப் பிழையான தமிழ் (Very Wrong Tamil) என்று சொல்ல முடிகிறது. தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம் என்ற புதிய மொழியாக்கிறாங்கள் இந்தத் தமிங்கிலத்தை உலகில் உள்ள எல்லா நாட்டுத் தமிழரும் தான் பேசுகிறாங்களே!

“அசல் அவளேதான்
கடையில கேசரி விழுங்கிறாளே
கொஞ்சம் செல்லக் கதிரையில இருந்து
யாரையோ நக்கலாகப் பாரக்கிறாளே” என்று
ஒருவர் அவளைப் பார்த்து அடுத்தவருக்குச் சொல்கிறார். இதில பாருங்கோ,
அசல் – உருது மொழி – உண்மையான (தமிழ்)
கேசரி – மராத்தி மொழி – இனிப்புக்கிளரி (தமிழ்)
கதிரை – போர்த்துக்கேச மொழி – நாற்காலி (தமிழ்)
நக்கல் – அரபி – நடித்துக்காட்டல் (தமிழ்)
என நான்கு வரியில் நான்கு மொழிச் சொல்கள் நுழைந்துவிட்டனவே!

இப்படித்தான் எந்த நாட்டுத் தமிழரும் தாம் பேசும், எழுதும் தமிழில் இருபதைந்துக்கு மேற்பட்ட பிற மொழிகளைப் பாவிப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். நான், என் கைக்கெட்டிய கீழ்வரும் நூலைப் பார்த்து 18 மொழிச் சொல்களைக் கீழே தருகின்றேன்.
நூல் : பிறமொழிச் சொல் அகராதி
ஆசிரியர் : எஸ்.சுந்தரசீனிவாசன்
முதற்பதிப்பு : அக்டோபர், 2005
வெளீயீடு : ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ்
சென்னை – 600017

18 மொழிகளைப் பாவிப்பதாக


மொழி

சொல்

தூய தமிழ்

சமஸ்கிருதம்

(வட மொழி)


விஷமன்


குறும்பன்

ஆங்கிலம்

அரக்

மதுபானம் (சாராயம்)

உருது

இனாம்

நன்கொடை

மராத்தி

அட்டவணை

பட்டியல்

போர்த்துக்கீசியம்

அன்னாசி

செந்தாழை

அரபி

அல்வா/அலுவா

இன்களி

தெலுங்கு

எக்கச்சக்கம்

ஏராளம்

கிரேக்கம்

இயேசு

ஏசுநாதர் (ஏசுநம்பி)

எபிரேயம்

ஆமென்

அவ்வாறே ஆகுக

டச்சு

கக்கூஸ்

கழிப்பறை

பிரெஞ்சு

குசினி

அடுக்களை

பாரசீகம்

கல்லா

கடைப் பணப் பெட்டி

சிங்களம்

கந்தோர்

செயலகம் (அலுவலகம்)

துளு

கொக்கு

மாமரம்

கன்னடம்

சமாளி

தீர்வு காண் (நிறைவேற்று)

இந்தி

ஜோடனை / சோடனை

அணிபுனைவு (அழகூட்டல்)

மலையாளம்

சாயகம்

அம்பு

பாலி

மிச்சாகிட்டி

பொய்த் தோற்றம்

எங்கள் செந்தமிழுக்குள்ளே இத்தனை மொழிகளா? இப்போது நாம் பேசுவது (Very Wrong Tamil) முழுப் பிழையான தமிழே! எப்போது மேலே கூறப்பட்ட பிறமொழிகளை நீக்கிப் பேசுகிறோமோ; அப்போது தான் எங்கள் தமிழ் (Very Right Tamil) செம்மொழியாகும்! இந்நிலையைத் தமிழ் அடைய, நாம் பிற மொழி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். தூய தமிழ் வழமைக்கு வரும் வரை பிறமொழிச் சொல்களை அடைப்பில் இட்டுப் பாவித்தால் ஏனையோரும் படிக்க உதவும்.

Advertisements

2 thoughts on “முழுப் பிழையான தமிழ்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.