தமிழ்மொழி அழியும் வாய்ப்பு உண்டா?

2002 ஆம் ஆண்டளவில் இலங்கை அரச வானொளியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பாளர் ஒருவர் வெளியிட்ட தகவலை வைத்து இவ்வாக்கத்தை எழுதுகிறேன். உலகில் 7500 மொழிகளுக்கு மேல் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்துள்ளதாம். இந்நிகழ்ச்சி நடைபெறும் வேளை 3500 மொழிகள் உலக வழக்கில் இருப்பதாகவும் காலப்போக்கில் 2500 ஆகக் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வறிவிப்பாளர் தெரிவித்திருந்தார்.

மொழிகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இல்லாது போவதற்கு எத்தனையோ சாட்டுக்கள் கூறலாம். வணிக நோக்கில் மக்கள் இடத்துக்கிடம் போய் வரும்போது பிற மொழிகளைப் பழகிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. குறித்த மொழிப் புழக்கத்தில் உள்ள இடங்களில் பிற மொழி பேசுவோர் நுழைந்ததாலும் இந்நிலை வந்திருக்கலாம்.

பொதுவாகப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் மக்கள் புழக்கத்தில் இருக்கின்ற மொழியே உயிரோடு வாழும் மொழி என்று கூறலாம். மேலே குறிப்பிட்ட 3500 மொழிகளில் அரைப் பகுதிக்கு மேல் பேச்சு வழக்கில் மட்டும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையில் தமிழ் மொழி அழியும் வாய்ப்பு உண்டா? எனக் கேள்வி எழுகின்றது.

இன்றைய தமிழ் மொழியில் 24 மொழிகளுக்கு மேற்பட்ட சொல்கள் காணப்படுகிறது. தமிழன் வாயாலே வெளிப்படுவது இந்த 24 மொழிகளில் எத்தனையோ கலந்த புதிய மொழி தானே!

“தமிழா – நீ
பேசுவது தமிழா” என
உணர்ச்சிப் பாவலன் காசிஆனந்தன் கேட்கின்றார். நல்ல தமிழ்ச் சொல்கள் என இந்திய அறிஞர் ஒருவரின் (மணவை முஸ்தபா என நினைக்கின்றேன்) அகரமுதலியைப் பார்த்தேன். அதில் பல மொழிச் சொல்களுக்குத் தமிழ் சொல் தந்திருந்தாலும் ஆங்கிலச் சொல்கள் தான் அதிகம். காசிஆனந்தன் எழுதிய “தமிழனா தமிங்கிலனா” என்ற நூலில் ஆங்கிலம் பேச்சில், எழுத்தில் சேர்க்கப்படுவதைச் சாடியுள்ளார். இந்நிலை தொடருமானால் தமிழ் மொழி புழக்கத்தில் இருந்து மறைந்து போக வாய்ப்பு இருக்கிறது எனலாம்.

Advertisements

10 thoughts on “தமிழ்மொழி அழியும் வாய்ப்பு உண்டா?

   • பாவாணன் சார், இந்திய மாவட்டங்கள் அளவில் ஒரு சர்வே முடிவுகள் பார்த்தேன். 10 வருடங்களில் வங்கிக்கு கணக்குகள் அதிகமான மாவட்டங்கள், படிப்பறிவு அதிகமான மாவட்டங்களில் ஒன்று கூட தமிழக மாவட்டங்கள் இல்லை. டிவி அதிகமான மாவட்டங்களில் டாப் 10ல் 4 அல்லது 5 தமிழ்நாட்டு மாவட்டங்கள். காரணம் விளங்குமென்று நினைக்கிறேன்.

    • இலங்கை ஊடகங்களிலும் இலங்கைத் தமிழரிடையேயும் பிறமொழிக் கலப்புத் தலைவிரித்தாடுகிறது.
     தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
     மிக்க நன்றி.

 1. தமிழ் என்றும் நிலைக்கும் நண்பரே
  பலர் தமிழை மறக்கலாம்
  சிலர் புறக்கணிக்கலாம்- ஆனால் தமிழ் வாழும்

  உலகின் முதன்மொழி தமிழ்
  உலகு உள்ளவரை வாழும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.