தமிழரின் ஒற்றுமை

முன்னொரு காலத்தில் முழு உலகையும் தமிழர் ஆட்சி செய்திருக்கலாம். ஆனால் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமாகடலில் குமரிக்கண்டம் (இன்றைய இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்காளாதேஸ், அந்தமான், நிக்கோபா தீவுகள் எனப் பல இடப்பரப்புகளைக் கொண்ட ஒரே பெரும் நிலப்பரப்பு) எனும் பெரும் நிலப்பரப்பை பாண்டிய மன்னன் ஆட்சி செய்தாரெனவும் கூறப்படுகிறது. இக்காலப்பகுதியில் தான் தமிழைப் பேணி வளர்க்க முதற் தமிழ் சங்கம் தோன்றி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

பின்னொரு காலத்தில் தோன்றிய கடற்கோளாலே தான் இலங்கை, இந்திய நிலப்பரப்புகள் பிளவுண்டன. (ஏனைய நாடுகள் எப்படி இந்தியாவை விட்டு பிரிந்தன என்பதைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆயினும் நேபாளம் ஓர் இந்து நாடு. அத்தோடு வரலாற்று சான்று பகரும் மொகஞ்சாதாரோ, ஹரப்பா நகரங்கள் பாகிஸ்தானில் தான் இருக்கிறது என்பதை மட்டும் சுட்டுகிறேன்.) இத்தனையும் எமது இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும் இவை ஒரு கட்டுக்கதை என்றும் இலக்கியங்களைச் சான்றாக வைத்து நம்ப முடியாது என்றும் விக்கிப்பீடியா தமிழ்பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னவோ ஏதோ எப்படியோ உலகின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான தமிழர் இன்று உலகில் நூற்றுக்கு மேற்பட்;ட நாடுகளில் வாழ்கின்றனர். நாம் கனடாத் தமிழர், நாம் ஆபிரிக்கத் தமிழர், நாம் அமெரிக்கத் தமிழர் என அவுஸ்ரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை என ஒவ்வொரு நாட்டவரும் கூப்பாடு போடுவதை நிறுத்தி நாம் தமிழர் என்றும் எங்கள் மொழி செம்மொழி என்றும் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் என்றும் உலகெங்கும் தமிழைப் பரப்பி பேணுவோம் என்றும் தமிழும் தமிழரும் அழியாது இருப்பதற்கு அனைத்து நாட்டுத் தமிழரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.

அரபு நாடுகளைப் பாருங்கள்… இஸ்லாமியருக்கு ஒன்றென்றால் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்று பாருங்கள். உலகெங்கும் வாழும் தமிழரின் ஒற்றுமையில் தான் தமிழையும் தமிழினத்தையும் உலகில் அழியவிடாது பேணலாம். உலகத் தமிழரின் ஒற்றுமை தங்கத்தமிழைப் பேணுவதற்கு உதவ வேண்டும்.

உலகில் 7500 க்கு மேற்பட்ட மொழிகள் இருந்துள்ளன. ஆயினும் 2000 ஆண்டளவில் 3500 மொழிகளாகக் குறைந்துள்ளன. அதிலும் 1000 பேச்சு வழக்கில் மட்டும் 2500 பேச்சு, எழுத்து இரண்டு வழக்கிலும் இருந்தன. இந்நிலை 2030 களில் மேலும் குறையலாம் என அஞ்சப்படுவதாக 2002/2003 இல் இலங்கை வானொலியில் கேட்க முடிந்தது. என் தமிழும் இப்படி அழிந்துவிடக் கூடாது என்பதை எண்ணிப்பார்க்கிறேன். முதலில் தமிழருக்குள் ஒற்றுமை வேண்டும். இரண்டாவதாகத் தமிழர் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் தமிழை அழியாமல் பேணுமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements

2 thoughts on “தமிழரின் ஒற்றுமை

  1. சங்க இலக்கியங்கள் என்பவை அன்றைய வாழ்வியல் நெறிகளை
    உரைப்பவைதானே,
    விக்கிபீடியா ஒப்புக் கொள்ளாவிட்டால் எனன நண்பரே.உண்மை உண்மைதானே

    ஒன்று பட்டால் உண்வு வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்வோம்
    நன்றி நண்பரே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.