வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.

என்னைப் பற்றி…
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,

தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.

எனது வலைப்பூ முயற்சிகள்….
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990 இல் முதலாம் கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் பல பதிவுகள் வெளியாகின. போர்ச் சூழலால் எல்லாப் பதிகளும் அழிந்தன. ஈற்றில 2010 இலிருந்து முகநூல், டுவிட்டர், தமிழ்நண்பர்கள்.கொம் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்கிறேன். ஆயினும் ஐந்து வலைப்பூக்களையும் அறிஞர்களின் மின்நூல்களையும் பேணுகிறேன். முழு விரிப்பையும் அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.96.lt/

எனக்களித்த விருது…
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.

எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்…
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.

http://chollukireen.wordpress.com/
http://mahalakshmivijayan.wordpress.com/
http://ramanans.wordpress.com/
http://kovaikkavi.wordpress.com/
http://www.geevanathy.com/
http://www.anbuthil.com/
http://iravinpunnagai.blogspot.com/
http://dbs1205.blogspot.in/
http://kavithaivaasal.blogspot.in/
http://vijaykavithaigal.blogspot.in/

Advertisements

20 thoughts on “வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?

  1. உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம் என்று உங்கள் வலை பக்கம் வந்த என்னை திக்கு முக்காட செய்து விட்டர்கள் ஐயா! மிக்க மகிழ்ச்சி! உங்களுக்கும் தமிழை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த உள்ளத்துக்கும் என் நன்றிகள்! உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙂

  2. யாழ்பாவாணன் அவர்களே வாழ்த்துக்களும், நன்றியும். வலைப்பதிவர் விருது பெற்றமைக்கும், மற்றவர்களுக்கு அன்புடன் வழங்கியதற்கும் மிக்க ஸந்தோஷம். உங்கள் பெயரிலேயே உங்கள் தகுதி தொக்கி நிற்கிறதே. நான் சிறிது காலதாமதமாகத்தான் பதிவுகள் செய்ய முடியும்.. பொருட்படுத்தாதீர்கள்.
    . ரஞ்ஜனி அம்மா அவர்களும் இந்த விருதை எனக்குக் கொடுத்திருக்கிரார்கள். மகிழ்ச்சி. என்றும் அன்புடன்

  3. Reblogged this on எண்ணங்கள் பலவிதம் and commented:
    தமிழை பேணி பாதுகாக்க தன்னால் ஆன முயற்சிகளை எடுத்து செயல்படும் யாழ்பாவணன் ஐயா அவர்களே… உங்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தாங்கள் பெற்ற விருதை எனக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றிகள்! உங்களின் இந்த பதிவை பெருமையோடு என் தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.. நன்றி!

  4. நீங்கள் விருது பெற்றதற்கும், அதை பலருடன் பகிர்ந்து கொண்டதற்கும் பாராட்டுக்கள். விருது பெற்றவர்களில் பலர் எனக்கும் தெரிந்தவர்களாக இருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.
    மேலும் மேலும் விருது பெற வாழ்த்துக்கள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.